Wednesday 19 September 2012

இரண்டே இரண்டு அடி சிவப்பு............


காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டபோது நான்  எழுதி அதீதம்.காமில் வெளி வந்த சிறுகதை இது.

http://archive.atheetham.com/story/irandeirandu

இதோ உங்களுக்காக.


அலாரம் டைம்பீசின் தலையில் தட்டிவிட்டு  ஐந்து நிமிட செல்லக் குட்டித்தூக்கம் போட்டு விட்டு எழுந்து தினக்காலண்டரின் தாளைக் கிழித்த வாசவி, ஐயையோ! இன்னிக்கு தேதி இருபத்தொன்பது இன்னும் பத்து  நாள்தான் காஸ் வரும்.   மறுபடியும் டேங்கர் லாரி ஸ்டிரைக்ன்னு நேத்து டீவி நியூஸ்ல சொன்னாங்களே!.  எப்ப ஸ்டிரைக் முடிந்து எப்ப காஸ் வந்து.... போன தடவை டேங்கர் லாரி ஸ்டிரைக்ல தப்பிச்சுட்டேன்.  இந்த தடவை மாட்டிடுவேனோ? நல்ல வேளை இப்ப தொலைபேசியிலேயே காஸ் புக் செய்து, தொலைபேசியிலேயே எப்ப வரும்ன்னு தகவலும் தெரிஞ்சுக்க முடியுது.  முன்னமாதிரி காஸ் ஏஜன்சிக்கு அலைய வேண்டியது இல்ல.  ரெண்டு அடி இருந்துண்டு இந்த காஸ் சிலிண்டர் நம்மை என்ன பாடு படுத்துது? சே! உலகத்துல ஒவ்வொருத்தருக்கும் கவலைப்பட எத்தனையோ விஷயங்கள் இருக்கு.  ஆனா எனக்கு மட்டும் இப்படி அல்பத்தனமா ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கவலை, காஸ் வரல, குழாய்ல தண்ணி வரல, வேலைக்காரி வரல, இந்த மாதிரி கவலைகளை பட்டியல் போட்டா அம்மாடி அது பாட்டுக்கு அனுமார் வால் மாதிரி நீளும்.  எல்லா பெண்களுமே இப்படித்தான் என்னை மாதிரி சின்னச் சின்ன விஷயங்களுக்கு கவலை பட்டுண்டு இருப்பாங்களோ?என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டாள் வாசவி.  அதுசரி, இதுக்கெல்லாம் கவலைப் படாம இருக்க முடியுமா? ஒன்பது மணிக்குள்ள சமைச்சு, ஆறு பேருக்கு சாப்பாடு கட்டி, மத்த எல்லா வேலைகளையும் முடிச்சு, ஆபீசுக்குக் கிளம்ப வேண்டாமா?”  என்று தனக்குத் தானே சமாதானம் சொல்லிக் கொண்டாள்.  வாசவிக்கு எப்பொழுதுமே நம்மால் சமூகத்துக்கு எதுவும் செய்ய முடியவில்லையே என்று வருத்தம் இருந்து வந்தது.

சில சமயம் வாசவி, “காலையில் எழுந்ததும் கண் விழித்தால் நான் கை தொழும் தேவதை குக்கர் என்று பாடி சிரித்துக் கொள்வாள். 


ஒரு வழியாக எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு அரக்கப் பரக்க கிளம்பி ரயிலைப் பிடித்து அலுவலகம் வந்து சேர்ந்தாள் வாசவி.   எவ்வளவு வேலை இருந்தாலும் அலுவலகத்துக்கு சரியான நேரத்துக்கு வருவதைக் கொள்கையாகவே வைத்திருந்தாள் அவள்.   

அலுவலகத்தில் நுழைந்து தன் இருக்கையில் அமர்ந்த வாசவி யார் இது! காலையிலேயே ஓவ்வொருவரிடமும் ஏதோ சொல்லிக் கொண்டு வருவது”  சற்று அருகில் வந்ததும்,  ‘ஓ, ராணி!  இன்று புதன்கிழமையா? அதான் ராணி பச்சைப் புடைவையில் வந்திருக்கிறாள்.  கண்ணை உறுத்தாத எளிமையான அலங்காரம்.  கஞ்சி போட்டு அயர்ன் செய்த பச்சை நிற காட்டன் புடவை.  எப்படித்தான் அந்தந்தக் கிழமைக்கு ஏற்ற நிறத்தில் புடவை கட்டுகிறாளோ? இன்ன கிழமைக்கு இன்ன கலர்ன்னே ராணி சொல்லித்தானே தெரியும். காது, கழுத்து, கை எல்லாவற்றிலும் பச்சை நிற அணிகலன்கள் வேறு.   இவளுக்கு மட்டும் இதுக்கெல்லாம் எப்படி நேரம் இருக்கோ தெரியலை?என்று மனதுக்குள் யோசித்த வாசவி   தன்னை ஒரு முறை குனிந்து பார்த்துக்கொண்டாள். அப்படி ஒன்றும் மோசமில்லை.  ஆனால் ராணியைப் போல் பளிச்சென்று இல்லை.

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் ராணியும், வாசவியும் ஒரே நேரத்தில் தான் அந்த அரசு அலுவலகத்தில் வேலைக்குச் சேர்ந்தார்கள்.   ரொம்ப வருடங்கள் ஒரே பிரிவில் பணி புரிந்து விட்டு இரண்டு வருடங்களாகத்தான் வேறு வேறு பிரிவுகளில் பணி புரிகிறார்கள்.  இருவரும் நல்ல தோழிகள்.

வாசவியின் அருகில் வந்த ராணி, “ஏய் வாஸ், என்ன அப்படிப் பார்க்கற?

“வழக்கம்போலதான்.  ஆச்சரியமா இருக்குடீ ராணி. உன்னால மட்டும் எப்டி இப்டி இருக்க முடியுது? ஆபீசில எந்த விழா நடந்தாலும் பங்கெடுத்துக்கறபங்கெடுத்துக்கறதென்ன எல்லா ஏற்பாடுகளுமே நீதான் செய்யற. எல்லா இடத்துலயும் எங்க சார்புல நீ தான் பேசற.  எல்லா நிகழ்ச்சியிலயும் கலந்துக்கற.  என்னை பாரு.  கார்த்தாலேந்து மனசுல டாங்கர் லாரி ஸ்ட்ரைக் ஆச்சே.  காஸ் எப்போ வருமோன்னு கவலை பட்டுண்டு இருக்கேன்.  நீ என்னடான்னா ஹாய்யா ஒவ்வொரு சீட்டா போய் என்னத்தை பத்தி பேசிட்டு வர

'அடுத்த வாரம்  நம்ப ஆபீசில சர்வ தேச மகளிர் தின நிகழ்ச்சிகள் நடத்தப்போறோம் அதைப் பத்திதான் பேசிட்டு வரேன்என்றாள் ராணி.

“ராணி, சொன்னா சிரிக்கக்கூடாது.  இன்னிக்கு டேங்கர் லாரி உரிமையாளர்கள், அரசு அதிகாரிகள் அப்புறம் எண்ணை நிறுவன அதிகாரிகள் எல்லாரும் சேர்ந்து பேச்சு வார்த்தை நடத்தப் போறாங்களாம்.  அது வெற்றிகரமா, சுமுகமா முடியணும்ன்னு வேண்டிண்டு வந்தேண்டீ

ஹஹஹஹஹா என்று கண்ணில் நீர் வர சிரித்தாள் ராணி.

சிரிக்கக் கூடாதுன்னு சொன்னேன் இல்ல

“கேலி பண்ணி சிரிக்கலப்பா.  ரசிச்சு சிரிச்சேன்என்றாள் ராணி.

“எனக்கு உன்னை பார்த்தா ஆச்சரியமா இருக்குடீ ராணி.  எப்பவும் ஏதோ ஒண்ணு செஞ்சுட்டிருக்க.   என்னைப்பாரு ஒரு பவுடர் போடக் கூட நேரம் இல்லை. எப்டி வந்திருக்கேன் பாரு

    
      "அடி தோழி
              பூவுக்கு எதற்கடி முகப் பூச்சு,
      உன் உழைப்பால் வந்த
      வியர்வைத் துளியும்
      அதிகாலைப் பனித்துளி போல்
      அழகாய் மின்னுதடி”   என்றாள் ராணி.

இயற்கையாகவே நல்ல நிறமான வாசவி தோழியின் கவிதை கேட்டு வெட்கத்தில் முகம் சிவந்து 'ஆரம்பிச்சுட்டியா?”  என்றாள்.  தோழிகள் இருவரும் கலகலவென்று சிரித்தனர்.

“வாஸ், உன் அழகுக்கும், நிறத்துக்கும் எதுக்குடீ அலங்காரம். எனக்குக் கூடத்தான் உன்னைப் பார்த்தா ஆச்சரியமா இருக்கு.  வீட்ல இருக்கற எல்லாருக்கும் சமைச்சு, எல்லா வேலைகளையும் முடிச்சுட்டு ஒருநாள் தவறாம டாண்ணு பத்து மணிக்கு சீட்ல இருக்க. அலுவலகத்துலயும் உன்னை பிடிக்காதவங்களே யாரும் கிடையாது.  வீட்டில மட்டும் என்ன!  கூட்டுக் குடும்ப அமைப்பே சிதைந்து போன இந்த நாள்ல மகன், மருமகள்கள், பேரன் பேத்தின்னு எல்லாரையும் அரவணைச்சுட்டு போற.

என்னப்  பாரு.  ரெண்டு பையனும் வெளிநாட்டுல.  நானும் அவரும்தான் வீட்டுல.  ரெண்டு பேருக்கு சமைச்சுட்டு வர முடியல.  சமையல் என்ன சமையல்.  முக்காவாசி நாளும் டிபன் தான்.  நீ க்ரேட் டீ.  நானும் உன்ன எத்தனை வருஷமா பார்த்துண்டு இருக்கேன். மகளிர் தினத்துக்காக நடந்த போட்டிகள்ல எல்லாம் பரிசா வாங்கி குமிச்சிருக்க.  அதுசரி.  நாம ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்து ஆச்சரியப்பட்டுக்கிட்டிருந்தா அவ்ளோதான்.  விழாவுக்கு பிரபல பெண்கள் பத்திரிகையாளரும் சமூக சேவகியுமான  தேவகி கந்தப்பன்தான் சீப் கெஸ்ட்.  அவங்க ஒரு அஷ்டாவதானி.  அவங்க கால் பதிக்காத துறையே இல்லன்னு கூட சொல்லலாம்.  பரிசெல்லாம் அவங்கதான் குடுக்கப் போறாங்க. சரி நான் வரேன் நிறைய வேலை இருக்கு.  மறக்காம உன்னுடைய பரிசுகளை எல்லாம் அள்ளிண்டு போக வந்துடு என்று சொல்லிவிட்டுச் சென்றாள் ராணி.


***



விழாவன்று பரிசுகளை வழங்கி விட்டுப் பேசிய தேவகி கந்தப்பன், “பொதுவா என்னை எல்லாரும் கேட்கும், ஏன் இன்னிக்குக் கூட இந்த அலுவலகத்துத் தோழிகள்  கேட்ட கேள்வி , ‘உங்களால  எப்படி எல்லா துறையிலும் பரிமளிக்க முடியுதுன்னு’  அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதுக்குன்னு சொன்ன காலம் எப்பவோ மலையேறிப் போயிடுத்து.   அதிகம் படிக்காத பெண்கள் கூட இன்னிக்கு சிறந்த தொழிலதிபர்களா ஆகி இருக்காங்க. உங்க கிட்ட கூட எவ்வளவோ திறமைகள் இருக்கு.   பொது வாழ்வில ஈடுபட்டாதான் திறமை இருக்குன்னு இல்ல.  அவங்கவங்க வீட்டை நல்லபடியா கவனிக்கறதே ஒரு பெரிய விஷயம். அதுவே நாம நம்ப சமூகத்துக்கு செய்யற நல்ல காரியம்.  ஏன் இப்பகூட உங்கள்ள ஒரு தோழி பரிசுகளை வாங்கிக் குவிச்சிருக்காங்க. அவங்க பரிசு வாங்கும் போது எழுந்த கைதட்டல்ல இருந்தே அவங்க உங்க மனசுல எவ்வளவு இடம் பிடிச்சிருக்காங்கன்னு தெரியுது.  அவங்க புகைப்படத்தை அடுத்த மாத இதழ்ல அட்டைப் படமா போட்டு உங்க அலுவலக பெண்கள் அமைப்பை பற்றி ஒரு கட்டுரையும் போடலாம்ன்னு இருக்கேன்என்று சொன்ன போது ராணி வாசவியைப் பார்த்து சிரித்துக் கொண்டே கண்ணடித்தாள்.

வாசவி தன்னையே அறிய வைத்த தோழிக்கு புன்னகையுடன் நன்றி கலந்த பார்வையை காணிக்கையாக்கினாள்.



31 comments:

  1. //சே! உலகத்துல ஒவ்வொருத்தருக்கும் கவலைப்பட எத்தனையோ விஷயங்கள் இருக்கு. ஆனா எனக்கு மட்டும் இப்படி அல்பத்தனமா ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கவலை, காஸ் வரல, குழாய்ல தண்ணி வரல, வேலைக்காரி வரல, இந்த மாதிரி கவலைகளை பட்டியல் போட்டா அம்மாடி அது பாட்டுக்கு அனுமார் வால் மாதிரி நீளும். எல்லா பெண்களுமே இப்படித்தான் என்னை மாதிரி சின்னச் சின்ன விஷயங்களுக்கு கவலை பட்டுண்டு இருப்பாங்களோ?” என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டாள் வாசவி. //

    இவை எல்லாவற்றிற்குமே கவலைப்படத்தான் வேண்டியுள்ளது.

    ஒருசில வீடுகளில் பெண்களும் மற்ற ஒருசில வீடுகளில் ஆண்களும் இதற்காகக் கவலைப்பட வேண்டியதாக உள்ளது.

    அழகாகச் சொல்லிட்டீங்கோ.

    இந்தப்பட்டியலில் நிறைய விடுபட்டுப்போய் உள்ளன என்பேன்.

    >>>>>>

    ReplyDelete
    Replies
    1. //ஒருசில வீடுகளில் பெண்களும் மற்ற ஒருசில வீடுகளில் ஆண்களும் இதற்காகக் கவலைப்பட வேண்டியதாக உள்ளது. //

      உண்மைதான்.

      //இந்தப்பட்டியலில் நிறைய விடுபட்டுப்போய் உள்ளன என்பேன்.//

      மொத்தத்தையும் போட்டா, கதையைவிட பட்டியல் பெரிசா இருக்கும். அதனாலதான்

      Delete
    2. //மொத்தத்தையும் போட்டா, கதையைவிட பட்டியல் பெரிசா இருக்கும். அதனாலதான்//

      அச்சா, அதுவும் சரிதான்.

      Delete
  2. //”அதுசரி, இதுக்கெல்லாம் கவலைப் படாம இருக்க முடியுமா? ஒன்பது மணிக்குள்ள சமைச்சு, ஆறு பேருக்கு சாப்பாடு கட்டி, மத்த எல்லா வேலைகளையும் முடிச்சு, ஆபீசுக்குக் கிளம்ப வேண்டாமா?” //

    அடடா, கேட்கும் போதே எனக்குத் தலையைச் சுற்றுகிறது.

    இவ்வாறு பம்பரமாகச் சுற்றிடும் பெண்கள் ... அவர்களே நம் வீட்டின் / நாட்டின் கண்கள்.

    >>>>>>>>

    ReplyDelete
    Replies
    1. //அவர்களே நம் வீட்டின் / நாட்டின் கண்கள்.//

      உண்மைதான். அத்தோட இந்த மாதிரி சொல்கிற கணவன் கிடைச்சுட்டா அவ ரொம்ப லக்கிதான். (நானும் லக்கிதான்)

      Delete
    2. BOTH OF YOU ARE 'THE LUCKIEST' TO EACH OTHER.
      I AM VERY VERY HAPPY TO HEAR THIS.

      VGK

      Delete
  3. //சில சமயம் வாசவி, “காலையில் எழுந்ததும் கண் விழித்தால் நான் கை தொழும் தேவதை குக்கர்” என்று பாடி சிரித்துக் கொள்வாள். //

    நான் சிறுவயதில் ஓர் கவிதை கிறுக்கியுள்ளேன்

    [அம்மாவைப்பற்றி]

    அதிகாலை நேரக் கதிரவனும்

    உலகைக் காணத்துடிக்கும் நேரமிது!

    இருட்டில் அம்மா எழுகின்றாள்

    கதவைத் திறந்து குப்பைகளைக்

    கூட்டித்தூர எறிகின்றாள்.

    வாசல் தெளித்து வணங்கி அவள்

    வண்ணக்கோலம் வரைகின்றாள்.


    குளியல் முடித்துக் குக்கர் ஏற்றி

    குழம்பு ரஸம் கூட்டுக்கறி

    செய்த களைப்பில் சற்று நேரம்

    செய்தித்தாளும் வாசிப்பாள்.


    அம்பி முதல் அப்பா வரை

    அனைவரையும் எழுப்பிவிட்டு

    அன்றாட அலுவல்களில்

    ஒன்றாகச் சேர்த்திடுவாள்.


    ........ ......... ........

    என்று ஏதேதோ வரிகள் வந்து

    கடைசியில் .......

    அம்மாவை எனக்களித்த

    ஆண்டவனுக்கு நன்றி

    என அது முடியும்.

    ஏதோ இப்போது அந்த ஞாபகம் வந்தது.

    >>>>>>>

    ReplyDelete
    Replies
    1. அருமையான கவிதை.

      உங்களை நல்ல நினைவுகளைக் கிளறியதற்கு மகிழ்ச்சி.

      Delete
    2. நான் சின்னப்பையனாக இருந்த போது கிறுக்கியது.
      அதில் பாதி வரிகள் மறந்தும் போச்சு.

      ”குளியல் முடித்துக் குக்கர் ஏற்றி
      குழம்பு ரஸம் கூட்டுக்கறி
      செய்த களைப்பில் சற்று நேரம்
      செய்தித்தாளும் வாசிப்பாள்”

      என்பது மட்டுமே நன்றாக நினைவில் உள்ளது.

      Delete
    3. அதனால என்ன. இப்ப ஒரு கவிதை எழுதிடுங்க. கண்டிப்பா பழைய நினைவுகள் உங்க மனசுல சிம்மாசனம் போட்டு உக்காந்திருக்கும். உங்க எழுத்துக்களும் மெருகேறி இருக்கும். ஜமாயுங்கோ

      Delete
  4. // இவளுக்கு மட்டும் இதுக்கெல்லாம் எப்படி நேரம் இருக்கோ தெரியலை?” என்று மனதுக்குள் யோசித்த வாசவி தன்னை ஒரு முறை குனிந்து பார்த்துக் கொண்டாள். அப்படி ஒன்றும் மோசமில்லை. ஆனால் ராணியைப் போல் பளிச்சென்று இல்லை.//

    ஆஹா, என் கதையிலும் இது போல சுவாரஸ்யமான ஒன்று வருகிறது. ஆனால் நான் இன்னும் அதை வெளியிடவே இல்லை.

    நீங்கள் அதில் கொஞ்சூண்டு திருடிக்கொண்டு விட்டீர்களோ என்று எனக்குச் சந்தேகம் வருகிறது. பரவாயில்லை. நான் தான் உங்களுக்கு முழு
    உரிமையும் கொடுத்து விட்டேனே!

    >>>>>>>

    ReplyDelete
    Replies
    1. GREAT MEN THINK ALIKE ஹி ஹி ஹி ஹி

      Delete
    2. ஆனால் நான் எழுதி வெளியிடாமல் உள்ள கதை முற்றுலும் மாறுபட்டது. அதில் வரும் ராணி முற்றிலும் வித்யாசமானதோர் கதாபாத்திரம். அவள் மற்ற சராசரிப் பெண்கள் போல அல்ல.
      அந்தக் கதாநாயகி [கதாபார்த்திரம்] எனக்கு மிகவும் பிடித்தமானதும் கூட.

      ஏதோ ஒரு தயக்கத்தினால் வெளியிடாமல் வைத்துள்ளேன்.

      VGK

      Delete
    3. //GREAT MEN THINK ALIKE ஹி ஹி ஹி ஹி//

      YOU ARE SO GREAT ..... I DO AGREE.

      BUT I AM AN ORDINARY ONLY. சாதாரணமானவன் தான் ! ;)))))

      பிரியமுள்ள கோபு

      Delete
    4. BUT I AM AN ORDINARY ONLY. சாதாரணமானவன் தான்//

      அதெல்லாம் நீங்க சொல்லக்கூடாது.

      Delete
  5. //“எனக்கு உன்னை பார்த்தா ஆச்சரியமா இருக்குடீ ராணி. எப்பவும் ஏதோ ஒண்ணு செஞ்சுட்டிருக்க. என்னைப்பாரு ஒரு பவுடர் போடக் கூட நேரம் இல்லை. எப்டி வந்திருக்கேன் பாரு”//

    இயற்கை அழகு இருப்பவருக்கு மேலும் அழகு எதற்கு?


    >>>>>>>>>

    ReplyDelete
    Replies
    1. ம்ம் இதுவும் உண்மைதான்.

      Delete
    2. அப்ப்ப்ப்பா! ஒத்துக்கிட்டீங்களே ! ;))))) சந்தோஷம் + நன்றி.

      Delete
  6. //"அடி தோழி
    பூவுக்கு எதற்கடி முகப் பூச்சு,
    உன் உழைப்பால் வந்த
    வியர்வைத் துளியும்
    அதிகாலைப் பனித்துளி போல்
    அழகாய் மின்னுதடி” என்றாள் ராணி.//

    ஆஹா நான் என் மனதில் நினைத்து மேலே எழுதியதையே ராணியும் சொன்னது சந்தோஷமாக உள்ளது.

    >>>>>>>

    ReplyDelete
    Replies
    1. திடீர்ன்னு ஒரு FLOW ல வந்துடுத்து இந்தக் கவிதை!

      Delete
    2. //திடீர்ன்னு ஒரு FLOW ல வந்துடுத்து இந்தக் கவிதை!//

      அதனால் தான் அது அழகாய் மின்னுகிறது. ;)))))

      Delete
  7. //அவங்கவங்க வீட்டை நல்லபடியா கவனிக்கறதே ஒரு பெரிய விஷயம். அதுவே நாம நம்ப சமூகத்துக்கு செய்யற நல்ல காரியம்.

    ஏன் இப்பகூட உங்கள்ள ஒரு தோழி பரிசுகளை வாங்கிக் குவிச்சிருக்காங்க. அவங்க பரிசு வாங்கும் போது எழுந்த கைதட்டல்ல இருந்தே அவங்க உங்க மனசுல எவ்வளவு இடம் பிடிச்சிருக்காங்கன்னு தெரியுது.

    அவங்க புகைப்படத்தை அடுத்த மாத இதழ்ல அட்டைப் படமா போட்டு உங்க அலுவலக பெண்கள் அமைப்பை பற்றி ஒரு கட்டுரையும் போடலாம்ன்னு இருக்கேன்” //

    இதில் வரும் வாசவி நிச்சயம் தாங்களாகவே தான் இருக்க வேண்டும் என்று என் உள்மனசு சொல்லுகிறது.

    கரெக்ட் தானே?

    >>>>>>>>>>

    ReplyDelete
    Replies
    1. இதில் வரும் வாசவி நிச்சயம் தாங்களாகவே தான் இருக்க வேண்டும் என்று என் உள்மனசு சொல்லுகிறது. //

      இருந்தா நல்லாத்தான் இருக்கும்.

      Delete
    2. ****இதில் வரும் வாசவி நிச்சயம் தாங்களாகவே தான் இருக்க வேண்டும் என்று என் உள்மனசு சொல்லுகிறது.**** - கோபு

      //இருந்தா நல்லாத்தான் இருக்கும்.//

      ஆஹா, என்னவொரு தன்னடக்கமான தங்கமான பதில்! ;)))))

      Delete
    3. அடக்கம்ன்னு இல்ல. இன்னும் என்னென்னவோ செய்ய ஆசை. எவ்வளவோ வருடங்களை வீணாக்கியாச்சு. பொதுவாக மனிதனுக்கே 50 வயதுக்கு மேல்தான் ஞானோதயம் வருது. இனி இருக்கும் காலத்தில் செய்ய நினைத்த நல்லவற்றைச் செய்ய வேண்டும்

      Delete
  8. மிகச்சிறப்பான கதை. எனக்கு மிகவும் பிடித்துள்ளது. மனமார்ந்த பாராட்டுக்கள். நெஞ்சார்ந்த வாழ்த்துகள், பகிர்வுக்கு நன்றிகள்.

    பிரியமுள்ள கோபு

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.

      Delete
    2. தங்கள் நன்றிக்கு என் நன்றிகள், மேடம்.

      Delete
  9. //காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டபோது நான் எழுதி அதீதம்.காமில் வெளி வந்த சிறுகதை இது.//

    அதீதப்பிரயத்தனப்பட்டு தாங்கள் எழுதியுள்ள இந்தக்கதை அதீதத்தில் வெளிவந்தது எனக்கு அதிசயமாகவே தெரியவில்லை. பாராட்டுக்கள்.;)

    பிரியமுள்ள கோபு



    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி. நெட்டுல உங்க பேரைப்போட்டதுமே ‘ஜாங்கிரி’ன்னு ஒரு கதை வந்தது படித்தேன். ரொம்ப நன்னா, யதார்த்தமா இருந்தது.

      Delete
    2. JAYANTHI RAMANI 3 January 2013 23:31
      மிக்க நன்றி. நெட்டுல உங்க பேரைப்போட்டதுமே ‘ஜாங்கிரி’ன்னு ஒரு கதை வந்தது படித்தேன். ரொம்ப நன்னா, யதார்த்தமா இருந்தது.//

      சந்தோஷம். கையோடு ஒரு பின்னூட்டம் கொடுத்திருக்கலாமே!

      அது தானே எனக்கும் உங்கள் கையால் வாங்கி ஜாங்கிரி சாப்பிட்ட சந்தோஷத்தை அளிக்கும். ;)))))

      பிரியமுள்ள

      கோபு

      Delete