Friday, 14 September 2012

வெஜ் சீஸ் ரோல்


வெஜ் சீஸ் ரோல்
உருளைக் கிழங்கு - 2
காரட் - 1
வெங்காயம் - பெரியது 1
குடைமிளகாய் - சிறியது 1
இஞ்சி - ஒரு துண்டு
பூண்டு - 3 பல்
சீஸ் துருவியது - 1/2 கப்
பச்சைக் கொத்தமல்லி - சிறிது
கரம் மசாலா தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
அரிசி மாவு - 1 டீஸ்பூன்
கடலை மாவு - 1 டீஸ்பூன்
ப்ரெட் க்ரம்ஸ் - தேவையான அளவு
எண்ணை - பொரிக்க

உருளைக்கிழங்கை வேக வைத்து உரித்து மசித்துக் கொள்ளவும்.
வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு இஞ்சி, பூண்டு, வெங்காயம், குடைமிளகாய் போட்டு சிறிது வதக்கி பிறகு துருவிய காரட் சேர்த்து வதக்கவும்.
மசித்த உருளை, வதக்கிய காய்கறி, கரம் மசாலா தூள், மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு, அரிசி மாவு, கடலை மாவு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
சிறிது சீஸ் துருவலை எடுத்து பிசைந்த மாவிற்குள் வைத்து விரும்பிய வடிவத்தில்  தயார் செய்து ப்ரெட் க்ரம்சில் புரட்டி எண்ணையில் பொரித்து எடுக்கவும்.

வெஜ் சீஸ் ரோல் தயார்.

இது என் மகள் சந்தியா ரமணியின் தயாரிப்பு.

5 comments:

  1. அருமை.பரிமாறிய விதம் சூப்பரோ சூப்பர்.பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஆசியா. மீண்டும் தாமதத்திற்கு மன்னிக்கவும்.

      Delete
  2. படங்கள் செய்முறைகள் எல்லாமே மிகவும் அருமை.
    வெரி சிம்பிள் அண்ட் சூப்பர்ப்! ;)

    //இது என் மகள் சந்தியா ரமணியின் தயாரிப்பு.//

    தங்கள் அன்பு மகளுக்கு என் பாராட்டுக்கள்.

    செல்வி ’சந்தியா’அவர்களின் இந்தத் தயாரிப்பினை
    ’சந்தியா’வந்தனத்திற்குப் பின்னும் சாப்பாட்டுக்கு
    முன்னும், செய்து வைத்துக்கொண்டால் நல்லதோ? ;)))))

    பிரியமுள்ள
    கோபு

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி கோபு சார்.
      உங்கள் பாராட்டுக்களை அவளிடம் சேர்த்து விடுகிறேன்.

      இப்படி திடீரென்று ஏதாவது செய்து அசத்துவாள்.
      அவளது அவல் உப்புமா சூப்பரா இருக்கும்.
      என்னிக்கோதான் ஏதாவது செய்வாள். ஆனால் அதில் அவளது முத்திரை தெரியும்.

      Delete
    2. JAYANTHI RAMANI 2 January 2013 00:33
      மிக்க நன்றி கோபு சார்.
      உங்கள் பாராட்டுக்களை அவளிடம் சேர்த்து விடுகிறேன்.

      இப்படி திடீரென்று ஏதாவது செய்து அசத்துவாள்.
      அவளது அவல் உப்புமா சூப்பரா இருக்கும்.
      என்னிக்கோதான் ஏதாவது செய்வாள். //

      புலிக்குப்பிறந்தது பூனையாகுமா? என்று சொல்லுவார்கள்.

      சமையலில் மட்டுமட்டுமல்ல அனைத்திலும் புலியாக இருக்கும் தங்களின் புதல்வி அல்லவா! கேட்கவே மகிழ்ச்சியாக உள்ளது.
      யார் அந்த அதிர்ஷ்டசாலி மாப்பிள்ளையோ! என்னைப்போல ருசி அறிந்து மகிழ்ந்து சாப்பிட்டு விட்டு உடனடியாக பாராட்டிடும் சாப்பாட்டு ராமனாக [சாப்பாட்டுப்பிரியனாக] அமைய வேண்டும்.

      //ஆனால் அதில் அவளது முத்திரை தெரியும்.//

      IN & OUT CHENNAI பத்திரிகையில் முத்திரை பதித்துள்ள எழுத்தாளரின் பெண் வாழ்க! வாழ்க!! வாழ்க!!!

      பிரியமுள்ள
      கோபு

      Delete