இந்த என் கவிதை முகப்புத்தகத்தில் (FACEBOOK) 100க்கும் மேல் லைக், மற்றும் 20க்கு மேல் SHARE செய்யப்பட்டது.
உன் பாட்டன்
தினம் குடித்து
தினம் குடித்து
என் தாயின் பொட்டழித்து
பூவெடுத்தான்
தினம் குடித்து
தினம் குடித்து
என் தாயின் பொட்டழித்து
பூவெடுத்தான்
வண்ணச் சேலை ஒழித்து
வெள்ளைச் சேலை பரிசளித்தான்
உன் தந்தை
டாஸ்மாகைத்
தலைநகராக்கி
நல்லாட்சி(!) செய்து
பாத்திரம், பண்டம்,
வீடு, நிலம், நீச்சு
எல்லாம் விற்று என்னை
நடுத்தெரு நாயகியாக்கி
நல்லதொரு நாளில்
பரலோகம் போய்ச் சேர்ந்தான்
ஊரெல்லாம்
குடிகாரக் கும்பல்
பல்கிப் பெருகி
பற்பல பெண்டிரின்
வாழ்வை
கேள்விக் குறியாக்கிக்
கொண்டிருக்கின்றன
தவமிருந்து நான் பெற்ற
என் மகனே
இப்போதே சொல்லிவிடு
நல்லதொரு குடிமகனாய்
நாட்டுக்கும் வீட்டுக்கும்
நலம் சேர்ப்பாயா? இல்லை
பாட்டன் வழி, தந்தை வழி நடந்து
பெண்மையை சீரழிப்பாயா?
வெள்ளைச் சேலை பரிசளித்தான்
உன் தந்தை
டாஸ்மாகைத்
தலைநகராக்கி
நல்லாட்சி(!) செய்து
பாத்திரம், பண்டம்,
வீடு, நிலம், நீச்சு
எல்லாம் விற்று என்னை
நடுத்தெரு நாயகியாக்கி
நல்லதொரு நாளில்
பரலோகம் போய்ச் சேர்ந்தான்
ஊரெல்லாம்
குடிகாரக் கும்பல்
பல்கிப் பெருகி
பற்பல பெண்டிரின்
வாழ்வை
கேள்விக் குறியாக்கிக்
கொண்டிருக்கின்றன
தவமிருந்து நான் பெற்ற
என் மகனே
இப்போதே சொல்லிவிடு
நல்லதொரு குடிமகனாய்
நாட்டுக்கும் வீட்டுக்கும்
நலம் சேர்ப்பாயா? இல்லை
பாட்டன் வழி, தந்தை வழி நடந்து
பெண்மையை சீரழிப்பாயா?
மாமி..சூப்பர்ப்..நச் என்ற கவிதை.உங்கள் சமூக அக்கரைக்கு ஒரு ஜே..
ReplyDeleteநன்றி ஸாதிகா
Deleteமிகவும் அழகான கவிதை.
ReplyDeleteகாலத்திற்கு ஏற்ற கவிதை.
சமுதாய விழிப்புணர்வு தரும் கவிதை.
பெண்மையை சீரழிப்பாயா?
என்ற கடைசி வரியில்
தன் சிறிய மகனைப்பார்த்து
ஒரு பெண்மையைக் கதறிக்
கேட்க வைத்திருப்பது,
சிறப்போ சிறப்பு !
மனமார்ந்த பாராட்டுக்கள்.
அன்பான வாழ்த்துகள்.
பகிர்வுக்கு நன்றிகள்.
இன்னும் உங்களால் இது போல பல நல்ல ஆக்கங்களை நிச்சயமாகத் தர முடியும். இதுபோன்ற உண்மையான, மென்மையான, மேன்மையான பல் மிகச்சிறந்த படைப்புகளால் தங்களை நன்றாக மெருகூட்டிக்கொள்ளுங்கள்.
தங்கமாக வைரமாக எழுத்துலகில் ஜொலிக்க என் வாழ்த்துகள். ஆசிகள்.
பிரியமுள்ள
கோபு
வாழ்த்துக்கு நன்றி கோபு சார்.
Deleteதினமும் அலுவலகத்திலிருந்து வீட்டிற்குப் போதும்போது டாஸ்மாக் வாசலில் இருக்கும் கூட்டத்தைப் பார்த்து மனம் பதை, பதைக்கும். எவ்வளவு வீடுகளில் மனைவி அழுது கொண்டிருக்கிறாளோ, அடுப்பில் பூனை தூங்குகிறதோ, குஞ்சு குளுவான்கள் பட்டினி கிடக்குமோ என்று நினைத்துக் கொண்டே போவேன். அதன் விளைவுதான் இந்தக் கவிதை.
// எவ்வளவு வீடுகளில் மனைவி அழுது கொண்டிருக்கிறாளோ, அடுப்பில் பூனை தூங்குகிறதோ, குஞ்சு குளுவான்கள் பட்டினி கிடக்குமோ என்று நினைத்துக் கொண்டே போவேன். //
Deleteநல்லதொரு இரக்க குணமும் சிந்தனையும் உங்களுக்கு. நன்றி. ;)