கோக்கோ அவல்:
தேவையான பொருட்கள் :
கெட்டி அவல் - 1 கப்
வெல்லம் - 3/4 கப்
கோக்கோ பவுடர் - 1 டீஸ்பூன்
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
முழு முந்திரி பருப்பு (அலங்கரிக்க)
ஏலக்காய் - 2
தண்ணீர் - 1 கப்
வெல்லத்தை ஒரு கப் தண்ணீரில் கரைத்து மணல் போக வடிகட்டி அதில் கழுவிய கெட்டி அவலை அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
வாணலியில் 1/4 டீஸ்பூன் நெய் விட்டு முந்திரி பருப்பை வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பிறகு வெல்லத் தண்ணீரில் ஊறிய அவலை வாணலியில் போட்டுக் கிளறவும்.
வெல்லத்தண்ணீர் வற்றி வரும்போது மீதி நெய்யை சேர்த்துக் கிளறவும்.
பிறகு கோக்கோ பவுடரையும், ஏலக்காய்த்தூளையும் சேர்த்துக் கிளறி இறக்கி, உங்கள் கற்பனைக்கேற்ப அலங்கரித்து வைக்கவும்.
செய்வதற்கு சாதாரண இனிப்பு வகையாகத் தோன்றினாலும் வயிற்றிற்குக் கேடு பண்ணாத சிம்பிள் இனிப்பு தயார்.
ஜெ மாமி சூப்பர்.தொடர்ந்து அசத்த வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றி ஆசியா. கோவிச்சாக்காதீங்க. இவ்வளவு நாள் கழிச்சு பதில் கொடுக்கறதுக்கு.
Deleteஉங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
மிகவும் இனிப்பான பதிவு.
ReplyDeleteஇனிப்போ இனிப்பூஊஊஊ ;)
’கோக்கோ’ அவல் செய்து அசத்தியுள்ள ஜெ மாமியோ ’கொக்கோ’ங்கறேன்.
பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.
பிரியமுள்ள
கோபு
மிக்க நன்றி கோபு சார்.
Deleteஒரு முறை ஒரு TUPPERWARE PARTYக்கு இந்த கோக்கோ அவல் செய்து கொண்டு போய் இருந்தேன். நல்ல வேளையாக நல்லபடி அமைந்து எல்லார் பாராட்டையும் வாங்கி கொடுத்தது.
;))))) சந்தோஷம். எனது பாராட்டுக்களும், இந்தப்பதிவுக்கு.
Delete