Monday 17 September 2012

என் முதல் விருது ‘இனிய இல்லத்திலிருந்து’

http://en-iniyaillam.blogspot.in

 ’என் இனிய இல்லம்’ ப்ளாக்கில் திருமதி பாயிஷா காதர் நடத்திய  'PARTI SNACKS EVENT'ல் எனக்கு வழங்கிய PARTICIPATION AWARD

நன்றி பாயிஷா

7 comments:

  1. மகிழ்வுடன் மாமியை வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சாதிகா. மாமி நீங்க ரொம்ப சுறுசுறுப்புன்னு நினைச்சேன்னு கிண்டல் பண்ணப்போறீங்க.

      புத்தாண்டு வாழ்த்துக்களுடன்
      ஜே மாமி

      Delete
  2. வாழ்த்துகக்ள் ஜே ஜே ஜேஜே மாமி

    இப்படிக்கு
    உங்கள்
    ஜலீலா

    ReplyDelete
    Replies
    1. ஜலீலா வாழ்த்துக்கு நன்றி.
      அப்புறம் உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி.
      வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தியதற்கு.
      புத்தாண்டு வாழ்த்துக்களுடன்
      ஜே மாமி

      Delete
  3. வாழ்த்துகள் .... வாழ்த்துகள். மனமார்ந்த அன்பு வாழ்த்துகள்.

    மேலே திருமதி ஜலீலா கமால் அவர்கள் சொல்லியுள்ளதைத்தான் நானும் சொல்ல நினைத்தேன். அதனால் அவர்கள் சொன்னதையே முன்மொழிந்து வழிமொழிகிறேன்.

    ஜெ மாமிக்கு ஜே ஜே !!

    பிரியமுள்ள
    கோபு

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி கோபு சார்.
      நீங்க எல்லாம் எவ்வளவு விருது வாங்கி இருக்கீங்க.
      என்ன பாருங்க. முதல் விருதுக்கே ரொம்ப பீத்தல்.

      Delete
    2. JAYANTHI RAMANI 2 January 2013 00:50

      //மிக்க நன்றி கோபு சார்.
      நீங்க எல்லாம் எவ்வளவு விருது வாங்கி இருக்கீங்க.
      என்னைப் பாருங்க. முதல் விருதுக்கே ரொம்ப பீத்தல்.//

      அப்படியெல்லாம் சொல்லாதீங்கோ, ப்ளீஸ். அதில் தவறேதும் இல்லை.

      அந்த மகிழ்ச்சியை நம்மால் மட்டுமே முழுவதுமாக உணர முடியும்.

      நான் முதன் முதலாக எழுதிய சிறுகதை “தாயுமானவள்”.

      எழுதிய ஆண்டு 2005.

      முதல் சிறுகதையே பலத்த போட்டி ஒன்றில் வெற்றிபெற்று ப்த்திரிகையில் பிரசுரமானது. பரிசினை வென்றது.

      நானும் உங்களைப்போலவே மகிழ்ந்தவன் [பீத்திக்கொண்டவன்] தான், அன்று.

      அதைப்பற்றி இதை இந்தப்பதிவின் இறுதி பாகத்தில் இவ்வாறு கொடுத்துள்ளேன்:

      http://gopu1949.blogspot.in/2011/12/1-of-3.html

      oooooooooo

      இது தான் என் வாழ்க்கையில் நான் எழுதிய முதல் சிறுகதை.

      தினமலர் நிறுவனர் அமரர் டி.வி.ஆர் நினைவுச்சிறுகதைப்
      போட்டியில் கலந்து கொண்டு பரிசினை வென்ற கதையும் ஆகும்.

      தினமலர்-வாரமலரில் 6.11.2005 அன்று என் புகைப்படம் மற்றும் சுயவிபரக்குறிப்புகளுடன் வெளியிடப்பட்ட கதை.

      போட்டியில் பங்குகொண்ட மொத்த கதைகள்: 2981

      இறுதிக்கட்டத் தேர்வில் வடிகட்டி தேர்ந்தெடுக்கப்பட்டு
      பரிசளிக்கப்பட்ட கதைகள் வெறும் 13 மட்டுமே.

      அதற்கான ஆதாரம் இதோ இங்கே: [Pl. refer the post]

      அந்தப் பதிமூன்றில் இதுவும் ஒன்று என்பதும் நான் முதன்முதலாக எழுதிய கதை என்பதும் இதற்குக் கிடைத்த பரிசு + பாராட்டுக்களால் என்னை மேலும் மேலும் எழுத உற்சாகப்படுத்திய கதை என்பதும் இதன் தனிச்சிறப்பாகும்.

      முதல் சந்திப்பு, முதல் பார்வை, முதல் நட்பு, முதல் உரையாடல், முதல் காதல், முதல் முத்தம், முதல் இரவு, முதல் உறவு, முதல் குழந்தை போன்றவற்றில் தானே ஒரு Thrilling ஆன அனுபவமும், சுகமும், பேரானந்தமும் இருக்க முடியும்?

      அதுபோலவேதான் இந்த என் முதல் கதையும்; அது முதன் முதலாக ஒரு பத்திரிகையில் அச்சேறி, பிரசுரம் ஆனபோது, எனக்கு மட்டில்லா மகிழ்ச்சியையும்,பரிசுத்தொகையையும்,என்னுடன் அன்று மிகப்பெரிய தொழிற்சாலையில் பணியாற்றிய ஆயிரக்கணக்கான ஊழியர்களின் ஆத்மார்த்தமான பாராட்டுக்களையும், புதிய எழுத்துலக நண்பர்களையும் பெற்றுத்தந்தது என்பதே, இந்த என் சிறுகதையின் மூலம் நான் பெற்ற மிகச்சிறப்பான, மகிழ்ச்சிகரமானதோர் அனுபவம்.

      அந்த என் முதல் அனுபவம் மிகவும்
      THRILLING ! THRILLING !! THRILLING !!!
      தான்!

      oooooooooo

      படித்து விட்டுக்கருத்துக்கூறுங்கோ, ப்ளீஸ்.

      பிரியமுள்ள
      கோபு

      Delete