Wednesday 19 September 2012

விபத்து



போன வாரம் எங்கள் தெருவில் (மேடவாக்கம் பிரதான சாலை) ஒரே நாளில் 3 விபத்து, இறந்தவர்கள் மூன்றோ நான்கோ சரியாகத் தெரியவில்லை.   ஒரு நொடியில் உயிர் விடும் மாந்தர்களே சாலை விதிகளை மதியுங்கள். 
IN AND OUT CHENNAI JUNE 16 - 30, 2012 இதழில் வெளி வந்த என் கவிதை
சாலை விதிகளை மதியான்
தாயின் தவிப்பை மதியான்
தந்தையின் சுமையை மதியான்
தாரத்தின் கண்ணீரை மதியான்
பெற்ற பிள்ளைகளின் பாசத்தை மதியான்
இன்னுயிராம் தன்னுயிரையும் மதியான்
பல்லுயிரையும் மதியான்
எவரையும், எதையும், எப்பொழுதும்
மதியாதவனை மதித்து
அழைத்துச் சென்றான்
எருமை வாகனன்.

4 comments:

  1. ஆஹா.. அருமையாக சொன்னீர்கள்...

    நம்மை சுற்றி உள்ளவர்களை
    கண்ணால் காண்பவர்களிடம்
    அன்பையும் மரியாதையையும்
    சாலை விதிகளையும் மதிக்க
    தவறினால் நம் கண்ணுக்கு
    தெரியாத எவனோ ஒருவன்
    எமன் அவன் நம்மீது அளவு
    கடந்த அன்பும் பாசமும் வைத்து
    அவனோடு நிரந்தரமாக இருக்க
    செய்துவிடுவான் - இதுவரை
    எப்படியோ இனியாவது நாம்
    மேற்கண்ட அனைத்தையும்
    தொடர்ந்து கடைப்பிடிப்போம்...

    பாராட்டுக்கள் உங்களுக்கு...

    ReplyDelete
  2. நன்றி தேவாதிராஜன் சார்

    ReplyDelete
  3. விழிப்புணர்வு ஏற்படுத்தும் கவிதை.

    நன்றாகவே நயம்படச் சொல்லியுள்ளீர்கள்.

    இங்கு திருச்சியில் போலீஸார் ஆங்காங்கே ஒரு சுவரொட்டி வைத்துள்ளனர்.

    முதலில் அதை நான் படித்த போது மிகவும் ரஸித்தேன். அதாவது ...

    ”வாகனம் ஓட்டும்போது செல்போன
    அழைப்பு வந்தால் ஏற்காதீர்கள்.
    அழைப்பது எமனாகக்கூட இருக்கலாம்”

    அதுபோல உங்களின் கவிதையும் நன்றாக உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றி கோபு சார்.

      இதைப் படித்து கோடியில், லட்சத்தில் ஒருவர் விழிப்புணர்வு பெற்றாலும் நமக்கு மகிழ்ச்சிதான்.

      Delete