Friday 14 September 2012

பட்டாணி சுண்டல்


பட்டாணி சுண்டல்
காய்ந்த பட்டாணி - 1 கப்
வெங்காயம் - பெரியது 2
கடலை மாவு - 1/2 கப்
தாளிக்க - கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, பச்சை மிளகாய் (1), காய்ந்த மிளகாய் - (2), பெருங்காயம் சிறிது, கறிவேப்பிலை, எண்ணை - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

பட்டாணியை முதல் நாள் இரவே ஊற வைக்கவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.
பட்டாணியை குக்கரில் சிறிது உப்பு போட்டு நன்கு வேக வைத்துக் கொள்ளவும்.
கடலை மாவை சிறிது மஞ்சள் பொடி, உப்பு, 1/2 டீஸ்பூன் சாம்பார் பொடி சேர்த்து கரைத்து வைக்கவும்.
வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணை விட்டு காய்ந்ததும், கடுகு போட்டு வெடித்ததும், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, பச்சை மிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை போட்டு வறுத்து கரைத்த கடலை மாவு கரைசலை ஊற்றி நன்கு கிளறவும்.
ஒட்டாமல் சுருண்டு வந்ததும் இறக்கி வைத்து வெந்த பட்டாணியை சேர்த்துக் கிளறி அலங்கரித்து, பச்சை கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

5 comments:

  1. சூப்பர் சுண்டல்.கடலை மாவு சேர்த்தது வித்தியாசமாக இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஆசியா. ஏற்கனவே தாமதத்திற்கு மன்னிப்பு கேட்டுட்டேன். மன்னிச்சிருப்பீங்க. அதனால இங்க கேக்கல

      Delete
  2. இவ்வாறு செய்து வைத்த பட்டாணி சுண்டலின் தலையில் கீறிய சிறு சிறு தேங்காய்ப் பற்களையும், மாங்காய்த் துண்டுகளையும் தூக்கிப்போட்டு ஒரு கிளறு கிளறினால் “தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல்” என்ற சிறப்பினைப் பெற்றிடுமோ?

    சுவையான பகிர்வுக்குப் பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    பிரியமுள்ள
    கோபு

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி கோபு சார்.

      நாங்க மயிலாப்பூர் செங்கழுநீர் பிள்ளையார் கோவில் தெருவில் இருந்தபோது எங்க வீட்டுக்கு எதிர பொட்டலக்கடை இருக்கும். ஓனர் கணேசன் என்று நினைக்கிறேன். அப்புறம் அம்மாவிடம் கேட்டு சொல்கிறேன். அந்தக் கடையில் இது போல் சுண்டல் செய்து (ஆனால் அது ரொம்ப ரொம்ப நன்றாக இருக்கும்), மந்தாரை இலையை கூம்பாக சுருட்டி அதில் வைத்து மடித்துக் கொடுப்பார்கள். பிரிக்கும் போது சுண்டல் கூம்பு ஷேப்பில் இருக்கும். வெறும் நாலணா. அத்துடன் மாமா ஒரு தவலை வடை போடுவார். சின்ன சிப்பத் தட்டு அளவு இருக்கும். அப்புறம் கடை செக்கடி சந்திற்கு மாற்றப்பட்டட்து. நாங்களும் வீடு மாறிட்டோம். இப்ப அந்தக் கடை இருக்கான்னு தெரியல. ஆனா அந்த ருசி மட்டும் மனதிலும், நாக்கிலும் அப்படியே இருக்கு.

      Delete
    2. //மந்தாரை இலையை கூம்பாக சுருட்டி அதில் வைத்து மடித்துக் கொடுப்பார்கள். பிரிக்கும் போது சுண்டல் கூம்பு ஷேப்பில் இருக்கும். வெறும் நாலணா. அத்துடன் மாமா ஒரு தவலை வடை போடுவார். சின்ன சிப்பத் தட்டு அளவு இருக்கும்.//

      மந்தாரை இலை ... பூவரசம் இலை ... முதலியன பற்றி தங்கள் வாயால் சொன்னதும், எனக்கு என் மாமியார் நினைவு வந்தது.

      ”சின்ன சிப்பத் தட்டு அளவு” என்று படித்ததும் என் தாயார் நினைவுக்கு வந்தார்கள்.

      குபுக்குன்னு சிரித்து விட்டேன். மகிழ்ச்சியாக உள்ளது. ;)

      என்னுடைய “உணவே வா ..... உயிரே போ” என்ற சற்றே பெரியதான பதிவை அவசியம் நீங்க பொறுமையாகப் படிக்கணும்.

      வேக வேகமாகப்படித்தாலே ஒரு அரை மணி நேரமாவது தேவைப்படும்.

      அதில் இது போன்ற நமக்கே உண்டான அந்தக்கால பாத்திரம் பண்டங்களின் பெயர்கள் நிறையவே இருக்கும்.

      இணைப்பு இதோ:

      http://gopu1949.blogspot.com/2011/03/blog-post_26.html

      பிரியமுள்ள
      கோபு

      Delete