Wednesday 29 May 2013

HOME SWEET HOME

இல்லம் இனிய இல்லம்.

பகுதி 2.

கல்யாணம் பண்ணிப்பார்
வீட்டைக் கட்டிப்பார்


         பழமொழி எல்லாம் சும்மா இல்லீங்க.   பெரியவங்க எல்லாம் வாழ்ந்து, அனுபவித்து சொன்ன அனுபவ மொழிகள் பழமொழிகள்.


         என்னுடைய சின்ன வயசு காலங்கள்ள எனக்குத் தெரிஞ்ச வரைக்கும் சொந்த வீடெல்லாம் குதிரைக்கொம்புதான்.  நானும் திருமணம் ஆகிறவரை இருந்தது வாடகை வீடுகளில்தான்.

                                     
         எங்க வீட்டுக்காரர் கொஞ்சம், இல்லை, இல்லை ரொம்ப துறுதுறு.  நினைச்சா அதை உடனே நிறைவேத்திடணும்.   எங்க திருமணம் முடிந்ததும் நாங்க குடியிருக்க ஏற்பாடு செய்த வீட்டை (வாடகை வீடு தான் சொந்த வீடு கூட இல்லை), திருமணத்திற்கு முன்பே அவரே தனியாக வெள்ளையடிச்சு இருந்தார்ன்னா பார்த்துக்கங்களேன்.


    ஒரு நாள் என்னுடைய அலுவலகத்திலிருந்து 4, 5 நண்பர்கள் வீடு கட்ட நிலம் வாங்கப் போகிறோம், வண்டலூரில் இருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தூரம், தாம்பரத்திலிருந்து ஆறு கிலோ மீட்டர் தூரம், மண்ணிவாக்கம் என்னும் இடத்தில்.  நீங்களும் வாங்கன்னு சொல்லி என் வீட்டுக்காரரையும் அழைத்துக் கொண்டு போனார்கள் (NOTE THE POINT -  நான் போகவில்லை). போனவங்க முதல்ல ஒரு ஐயர் கையால பணம் கொடுக்கணும்ன்னு சொல்லி ஆயிரம் ரூபாய் முன்பணம் என் வீட்டுக்காரரை கொடுக்கவைத்து விட்டனர்.  உருட்டி பிரட்டி, தேத்தி 26,000 ரூபாய்க்கு 2 கிரவுண்டுக்குக் கொஞ்சம் கம்மி, இடத்தை வாங்கிட்டோம்.

        
                   என்னை ஒரு நாள் அந்த இடத்தைப் பார்க்க என் கணவர் என்னை அழைத்துச் சென்றார். 

     ந்த இடத்தைப் பார்த்ததும் வயிற்றிலிருந்து ஒரு பந்து உருண்டு, தலைசுத்தி எனக்கு மயக்கமே வரும் போல ஆயிற்று.  ஆஹா இந்த இடத்தில் வீடு கட்டி, குடி வந்து, எப்படி வேலைக்குப் போய், பையனை படிக்க வைத்து, மலைப்பா இருந்தது எனக்கு.


         இந்த மாதிரிதான் இருந்தது அந்த இடம்.



      இந்த இடம் வேண்டாம் என்று என் வீட்டுக்காரரிடம் சொன்னேன்.  அப்படீன்னா ஆயிரம் ரூபாய் திரும்ப கிடைக்காது, பரவாயில்லையா?என்றார்.  1985 ல ஆயிரம் ரூபாய்ன்னா விட மனசு வருமா?   சரி ஏதோ இடம் வாங்கியாச்சு. அவர் வழிக்கே போவோம்ன்னு பேசாம இருந்துட்டேன்.

         அடுத்து வீடும் கட்ட ஆரம்பிச்சோம்.    அஸ்திவாரம் தோண்டியதும், அந்த மேஸ்திரிக்கு உடல் நிலை சரியில்லாமல் போனதால் வேலை நின்று விட்டது.  மூன்று மாதம் கழித்து மீண்டும் வேலையைத் தொடங்கினார் அந்த மேஸ்திரி.  ஆனால் அதற்குள் மழை பெய்து அஸ்திவாரம் நல்ல உறுதியா ஆயிடுத்து.   அஸ்திவாரம் போட்டு முடித்ததும் மறுபடியும் அந்த மேஸ்திரியால் வேலையைத் தொடர முடியாத நிலை.  பிறகு வேறொரு மேஸ்திரியைப் பிடித்து மீண்டும் தொடர்ந்தோம். 
                  
                                
தொடரும் இது தொடர்கதை போல தொடரும் 


23 comments:

  1. //என்னுடைய சின்ன வயசு காலங்கள்ள எனக்குத் தெரிஞ்ச வரைக்கும் சொந்த வீடெல்லாம் குதிரைக்கொம்புதான்.//

    நீங்க காட்டியுள்ள படத்தில் உள்ள குதிரைகள் இரண்டுக்கும் கொம்பு இல்லை தான்.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. கோபு அண்ணா

      குதிரைக்கு கொம்பு முளைக்கும், முளைக்கும்ன்னு பார்த்தா முளைக்கவே இல்லை.

      Delete
  2. //1985 ல ஆயிரம் ரூபாய்ன்னா விட மனசு வருமா? //

    அது எப்படி விட மனசு வரும்! ;)

    ReplyDelete
  3. //மூன்று மாதம் கழித்து மீண்டும் வேலையைத் தொடங்கினார் அந்த மேஸ்திரி. ஆனால் அதற்குள் மழை பெய்து அஸ்திவாரம் நல்ல உறுதியா ஆயிடுத்து.//

    இயற்கையாகவே உங்கள் வாழ்க்கைக்கு நல்ல அஸ்திவாரம் போடப்பட்டுள்ளது. மிக்க மகிழ்ச்சி. ;)

    தங்களின் பிறந்தநாள் + வலைப்பூ தொடங்கி ஒரு வருடம் ஆன நாள் ஆகிய இரண்டையும் சேர்த்துக்கொண்டாடியுள்ள தாங்கள், இன்று தங்களின் 75வது பதிவையும் கொடுத்து அசத்திவிட்டீர்கள்.

    இதில் என்னுடைய இரண்டு கோரிக்கைகள்ம் அடங்கியுள்ளதில் எனக்கும் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி தான்.

    1]

    75வது பதிவு இன்று வெளியாக வேண்டும் என்ற அன்புக்கட்டளை.

    2]

    நான் கேட்டுக்கொண்ட தொடர்பதிவின் இரண்டாம் பாகத்தைத் தொடர்ந்து எழுதியுள்ளது.

    எல்லாவற்றிற்கும் சந்தோஷம். பாராட்டுக்கள். வாழ்த்துகள். நன்றிகள்.

    தங்களின் 75 பதிவுகளுக்கும் கருத்துச்சொல்லியுள்ள ஒரே நேயர் நான் மட்டுமே. அதிலும் எனக்கோர் சந்தோஷம்.

    மேலும் பல பதிவுகள் கொடுத்து, எழுத்துலகில் ஜொலிக்க என் அன்பான வாழ்த்துகள்.

    அன்புடன் கோபு அண்ணா

    ReplyDelete
    Replies
    1. இயற்கையாகவே உங்கள் வாழ்க்கைக்கு நல்ல அஸ்திவாரம் போடப்பட்டுள்ளது. மிக்க மகிழ்ச்சி. ;)//

      ’வாங்கறது வழக்கத்துல உண்டு,
      குடுக்கறது கோத்திரத்திலயே இல்லை’ன்னு ஒரு பழமொழி உண்டு.

      அது மனிதனுக்குத்தான் பொருந்தும்.
      இயற்கை அன்னையவள் நமக்கு அள்ளி, அள்ளிக் கொடுப்பவற்றை எல்லாம் கபளீகரம் செய்து கொண்டு பதிலுக்கு அவளுக்குக் குப்பையையும், கூளத்தையும் தானே கொடுத்துக் கொண்டிருக்கிறேன்.

      75வது பதிவு இன்று வெளியாக வேண்டும் என்ற அன்புக்கட்டளை.

      2]

      நான் கேட்டுக்கொண்ட தொடர்பதிவின் இரண்டாம் பாகத்தைத் தொடர்ந்து எழுதியுள்ளது.

      எல்லாவற்றிற்கும் சந்தோஷம். பாராட்டுக்கள். வாழ்த்துகள்.//

      அன்புக்கட்டளை இட்ட பிறகு அதை தட்ட முடியுமா?


      தங்களின் 75 பதிவுகளுக்கும் கருத்துச்சொல்லியுள்ள ஒரே நேயர் நான் மட்டுமே. அதிலும் எனக்கோர் சந்தோஷம்.//

      ஒருத்தரும் இந்த ரெகார்டை தகர்க்க முடியாது.

      மேலும் பல பதிவுகள் கொடுத்து, எழுத்துலகில் ஜொலிக்க என் அன்பான வாழ்த்துகள்.//

      சிரம் தாழ்ந்த நன்றிகள்.

      Delete
  4. 75வது பதிவு... மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. கோபு அண்ணாவுக்கு அடுத்து எல்லாருக்கும், எல்லா பதிவுகளுக்கும் பின்னூட்டம் கொடுத்து ஊக்குவிக்கும் உங்களுக்கும் என் மனமார்ந்த, நெஞ்சார்ந்த நன்றிகள்.

      Delete
  5. கல்யாணம் பண்ணிப்பார்
    வீட்டைக் கட்டிப்பார்
    பதிவை தேற்றிப்பார் ..!

    வாழ்த்துகள்..!

    ReplyDelete
    Replies
    1. பதிவை தேற்றிப்பார் //

      வஞ்சப்புகழ்ச்சி அணி இல்லையே ராஜி மேடம்.

      உங்கள் வாழ்த்துக்கு என் மனமார்ந்த நன்றி.

      Delete
  6. சுவாரஸ்யமாக இருக்கு மாமி.பதிவை இன்னும் சித்த நீளமாக்கக்கூடாதா?சீக்கிரம் அடுத்த பகுதியைப்போடுங்க.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி ஸாதிகா. அடுத்த பகுதியை நீஈஈஈஈஈளமா போடறேன்.

      Delete
  7. சுட்டிக்காட்டிய வரிகளில் திருத்தம் செய்துள்ளதற்கு மிக்க நன்றி.


    //கல்யாணம் பண்ணிப்பார்; வீட்டைக் கட்டிப்பார்; பதிவை தேற்றிப்பார் ..!//

    ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !

    பழுத்த அனுபவசாலி சொல்லியிருக்காங்கோ. கவனத்தில் கொள்ளவும். ;))))))

    ReplyDelete
  8. 75-ஆவது பதிவு..... வாழ்த்துகள்.

    தொடரட்டும் மேலும் பல பதிவுகள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி வெங்கட் நாகராஜ் சார்

      Delete
  9. ஆஹா சொந்தக் கதை யோ(சோ)கக்கதையா ஜேமாமீ?:)) தொடருங்கோ.. இப்போ அந்த வீட்டில இருந்தா பதிவு எழுதிறீங்க?:)

    ReplyDelete
    Replies
    1. சோகமும், சுகமும் கலந்த கதை.

      இப்போ அந்த வீட்டில இருந்தா பதிவு எழுதிறீங்க?//

      அதிரா, இந்தக் கேள்விக்கு பதில் தொடரில் சொல்கிறேன்.

      Delete
  10. பழமொழி எல்லாம் சும்மா இல்லீங்க. பெரியவங்க எல்லாம் வாழ்ந்து, அனுபவித்து சொன்ன அனுபவ மொழிகள் பழமொழிகள்.//

    உண்மைதான் நீங்கள் சொல்வது.
    75 ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி கோமதி.

      Delete
  11. Romba nallairundhadhu ungaludaiya article, keep going very intresting to read.

    ReplyDelete
    Replies
    1. Welcome to my blog Priya Anandakumar.

      If time permits read HOME SWEET HOME PART I also.

      Delete
  12. வணக்கம்...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/06/blog-post_19.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
  13. 19.06.2013 அன்று தங்கள் தளத்தினை வலைச்சர அறிமுகத்தில் கண்டேன். மகிழ்ச்சி கொண்டேன். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  14. அருமையான பகிர்வு ஜே மாமி .

    ReplyDelete