Tuesday, 28 May 2013

தாய்மை

நாங்கள் ஊட்டிக்குச் சென்ற போது, பைக்காரா சென்று விட்டு ஊட்டிக்கு காரில் திரும்பி வந்து கொண்டிருந்தோம்.   வழியில் ஒரு இடத்தில் இறங்கி குரங்குகளுக்கு வேர்க்கடலையும், கேரட்டும் வாங்கிப் போட்டோம்.  கடலை விற்ற பெண்மணியின் மகன் அப்பொழுது அங்கு வந்தவர் எங்களிடம், அதோ அங்கே உட்கார்ந்திருக்கும் குரங்குக்கு போடுங்க.  அது மூணு நாளா செத்த குட்டியை துக்கிக்கிட்டு அலையுது.  நாங்களும் மூணு நாளா அத எப்படியாவது வாங்கி புதைக்கணும்ன்னு நினைக்கிறோம், முடியவே இல்லைஎன்றார்.  நாங்கள் அசந்து விட்டோம்.   பிறகு அந்தக்குரங்கு செத்த குட்டியையும் தூக்கிக் கொண்டு ரோடிற்கு வந்தது.  அதன் முகத்தில் சொல்லொணா துயரம்.  மேலும் அவர் சொன்னது, “அந்தத் தாய்க் குரங்கு, குட்டிக்குரங்கு இறந்த உடன் அதன் வாயில் தன் வாயை வைத்து ஊதியதாம்”.   ஒரு வேளை குட்டிக்கு உயிர் வந்து விடும் என்று ஊதி இருக்குமோ?
அந்தக் குரங்கின் தாய்மை உணர்வைக்கண்டு வியந்துதான் போனோம்.



6 comments:

  1. //“அந்தத் தாய்க் குரங்கு, குட்டிக்குரங்கு இறந்த உடன் அதன் வாயில் தன் வாயை வைத்து ஊதியதாம்”. ஒரு வேளை குட்டிக்கு உயிர் வந்து விடும் என்று ஊதி இருக்குமோ?//

    நிச்சயமாக அப்படித்தான் இருக்கும்!!!!!!!

    //அந்தக் குரங்கின் தாய்மை உணர்வைக்கண்டு வியந்துதான் போனோம்.//

    நாங்களும் இப்போது வியந்து தான் போனோம்.!!

    ReplyDelete
  2. ”தாய்மை” பற்றிய அழகான படங்களுடன் கூடிய அருமையான பதிவு. பாராட்டுக்கள்.

    //அதன் முகத்தில் சொல்லொணா துயரம். //

    வேர்க்கடலையும், கேரட்டும் அந்தக் குட்டியை இழந்ததாய் எடுத்துக்கொண்டாரா இல்லையா என நீங்கள் சொல்லவில்லையே ?????

    70வது பதிவுக்கு நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. ஏனோ நான் எழுதிய குரங்குக்கதை ஒன்று நினைவுக்கு வந்தது.

    தங்களுக்கு நேரம் கிடைக்கும்போது படித்துப்பாருங்கோ.

    http://gopu1949.blogspot.in/2011/06/1-of-3.html “யாதும் ஊரே யாவரும் கேளிர்”

    ReplyDelete
  4. குரங்கின் தாய்மை அசர வைத்தது...

    ReplyDelete
  5. இதே போல திருச்சியில் [திருப்பராய்த்துறையில்] ஒரு முறை நான் பார்த்திருக்கிறேன். குரங்குகளுக்கும் இந்த உணர்வுகள் இருக்கும்போல!

    ReplyDelete
  6. படிக்க கஷ்டமா இருக்கு. ;(( பாவம் அது.

    ReplyDelete