Friday, 24 May 2013

சொன்னார் ஐயா சிவபெருமான்


விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் 3 நிகழ்ச்சியில் அன்னையர் தின சிறப்பு நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த போது என் பெண் என்னிடம், ‘அம்மா, சிவபெருமானுக்கு தாய், தந்தை கிடையாது, அவர் சுயம்பு, தானாகவே தோன்றியவர் என்று சொல்வாயே, இந்த நேரத்தில் சிவபெருமான் இங்கு வந்தால் என்ன சொல்வார்?” என்று கேட்டாள்.

2 நிமிடத்தில் அதற்கு எழுதிக் கொடுத்ததுதான் கீழே கொடுத்திருக்கும் வரிகள்.  



இவனை மகனாகப் பெற
என்ன தவம் செய்தேன் என்றாள் ஒரு தாய்

இவள் வயிற்றில் மகனாகப் பிறக்க
என்ன புண்ணியம் செய்தேன் என்றான் மகன்.

பிள்ளைகள் அன்னையருக்குத் தந்த
பரிசுப் பொருட்களைக் கண்டு மயங்கவில்லை.
ஊர் கூடிப் பாராட்டிய போதும் அசரவில்லை.

ஆனால்
அன்னையின் கன்னத்தில் பிள்ளையும்
பிள்ளையின் கன்னத்தில் அன்னையும்
மாறி மாறி முத்தமிட்டபோது மட்டும்
மயங்கித்தான் போனேன் - லேசாக
பொறாமையும் கொண்டேன்.

எனக்கொரு தாய் இல்லை என்பது
வருத்தம்தான்
இருந்தாலும் பரவாயில்லை,
இவர்கள் அனைவருமே
என் பிள்ளைகள் தானே”
என்றான் தாயுமானவன்.

9 comments:

  1. அருமை... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. தாயுமானவன் -அருமையான சிந்தனை..!

    ReplyDelete
  3. சிறப்பான இவ் வரிகளுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அம்மா .

    ReplyDelete
  4. இவர்கள் அனைவருமே
    என் பிள்ளைகள் தானே”
    என்றான் தாயுமானவன்.//
    அருமை.

    ReplyDelete
  5. //இவர்கள் அனைவருமே
    என் பிள்ளைகள் தானே”
    என்றான் தாயுமானவன்.//

    தாயுமானவன் -அருமையான சிந்தனை..!

    ReplyDelete
  6. //2 நிமிடத்தில் அதற்கு எழுதிக் கொடுத்ததுதான் கீழே கொடுத்திருக்கும் வரிகள். //

    அடடா, திருமதி ஜெயந்தி ரமணி அவர்களுக்கு, 2 நிமிடங்களே அதிகமாக்கும். ஹுக்கும் ! ;)))))

    ReplyDelete
  7. குழந்தை சிவன் படத்தேர்வு *அய்ய்கோ அய்ய்கூஊஊஊஊ* [அழகோ அழகு]

    [அதிரடி அதிராவுடன் பழகியதால் ஒட்டிக்கொண்டுள்ள அய்ய்கூஊஊஊ ;))))) ]

    ReplyDelete
  8. அருமையான வரிகள்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete