Thursday, 23 May 2013

நூலகம்



 இந்தக் கவிதையை தனியார் நூலகம் நடத்தும் திரு சேதுராமன், நங்கநல்லூர், சென்னை அவர்களுக்கு அர்ப்பணிக்கிறேன்.


சின்னச் சின்னப் பிள்ளைங்களா,
சித்தெறும்புச் செல்லங்களா,
ஓடி வாங்க
உடனே ஓடி வாங்க


வண்ண வண்ணப் புத்தகங்கள்
வரிசையா வெச்சிருக்கேன்
வளமான எதிர்காலத்தை உங்களுக்கு
வாரி வழங்கக் காத்திருக்கேன்

பொது அறிவு
விஞ்ஞானம்
கணக்கு
புவியியல்
சமூகவியல்
சரித்திரம்
இன்னும் பலவகைப் புத்தகங்கள்
எண்ணிலா எண்ணிக்கையில்
அடுக்கி, அடுக்கி வைத்திருக்கிறேன்
எடுத்துப் படிக்க வாங்க

உங்க வீட்டுப் பெரியவங்களுக்காக
சிறுகதை
புதினம்
ஆன்மீகம்
பாட்டு
நாடகம்
இலக்கியம்
வகை வகையாய் புத்தகங்கள்
வாங்கித்தான் வைத்திருக்கேன்.

மகிழ்ச்சி
துயரம்
காதல்
சோகம்
மேலாண்மை
தத்துவம்
எல்லா வகைப் புத்தகங்களும்
வாரிவழங்கக் காத்திருக்கேன்

தேடித் தேடிப் படியுங்கள்
தினம் தினம் படியுங்கள்
நானே உங்கள் வீடு தேடியும் வருகிறேன்.
விரும்பி நீங்க ஏத்துக்கங்க.

சின்னதொரு வேண்டுகோள்
செவி மடுத்துக் கேளுங்க
செல்லரித்துப் போகாமல்
புத்தகங்களைப் படியுங்க
வீடு கொண்டு சென்றாலும்,
வீடு தேடி வந்தாலும்
மறக்காமல் மறுபடியும்
கொண்டு வந்து கொடுத்திடுங்க.

எத்தனையோ பொக்கிஷங்கள்
எல்லா நாட்டிலும் உண்டு.
பொன்னிற்கு நிகரான பொக்கிஷங்கள்
இந்தப் புத்தகங்களும் தானே.




5 comments:

  1. //பொன்னிற்கு நிகரான பொக்கிஷங்கள்
    இந்தப் புத்தகங்களும் தானே.//

    அழகான படைப்பு. பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  2. திரு சேதுராமன், நங்கநல்லூர், சென்னை அவர்களுக்கு என் அன்பான வாழ்த்துகள், பாராட்டுக்கள்.

    தங்களுக்க்கு என் நன்றிகள்.

    ReplyDelete
  3. அருமை... பாராட்டுக்கள்...

    திரு சேதுராமன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. மணத்தை மனம் நுகர்ந்தது
    புத்தகங்களின் பெருமையை சிறுவர்களுக்கு
    ஏற்றபடி சொல்லிப்போனது மனம் கவர்ந்தது
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. நூலகங்கள் நமது அறிவு கண்களை திறப்பவை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete