Tuesday 28 May 2013

நம் வாழ்வு நம் கையில்


ஒரு முரடன் ஒரு முனிவரிடம், “ஐயா, என் மூடிய கையில் ஒரு பறவை இருக்கிறது.  அது உயிருடன் இருக்கிறதா, இல்லையா? என்று கேட்டான்.


அதற்கு முனிவர், அப்பா, அது உன் கையில் இருக்கிறதுஎன்றார்.

அதற்கு முரடன், “நான் அதைக்கேட்கவில்லை ஐயா, அது உயிருடன் இருக்கிறதா, இல்லையா, அதைச் சொல்லுங்கள்என்றான்.

முனிவர் சிரித்துக்கொண்டே “அது உன் கையில் தான் இருக்கிறதப்பாஎன்று சொல்லிவிட்டு நிஷ்டையில் ஆழ்ந்து விட்டார்.


அந்த முனிவருக்குத் தெரியாதா என்ன, பறவை உயிருடன் இருக்கிறது என்று சொன்னால், ஒரு நொடியில் அந்த முரடன் அதை நசுக்கிக் கொன்று விடுவான்.  இல்லை என்று சொன்னால் இதோ பாருங்கள் என்று பறக்கவிட்டு விடுவான்.   முரடன் வேறு வழியில்லாமல் அந்த இடத்தை விட்டு அகன்றான்.


முரடனின் உள்ளங்கையில் இருந்த பறவை போல் நம் வாழ்வு நம் கையில்.  மகிழ்ச்சி, துன்பம் எல்லாம் அவரவர் எண்ணத்தைப் போல்.  

6 comments:


  1. முரடனின் உள்ளங்கையில் இருந்த பறவை போல் நம் வாழ்வு நம் கையில். மகிழ்ச்சி, துன்பம் எல்லாம் அவரவர் எண்ணத்தைப் போல்.

    எண்ணம் போல் வாழ்வு ..!

    ReplyDelete
  2. தங்களுக்கு என் இனிய ________ நாள் வாழ்த்துகள்.


    >>>>>

    ReplyDelete
  3. தாங்கள் பதிவுலகுக்கு அடியெடுத்து வைத்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. மனதுக்கு நிறைவாக உள்ளது.

    ஓராண்டுக்குழந்தை “ஜெ” க்கு ஒரு ஜே! ;)))))

    ReplyDelete
  4. // நம் வாழ்வு நம் கையில். மகிழ்ச்சி, துன்பம் எல்லாம் அவரவர் எண்ணத்தைப் போல். //

    வெகு அழகாகச் சொல்லியுள்ளீர்கள். பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    72வது பதிவும் வெளியிட்டாச்சு. இன்னும் மூன்றே மூன்று தான். பாக்கி. ஆவலுடன் காத்திருக்கிறேன்.

    அன்புடன் கோபு அண்ணா

    ReplyDelete
  5. அருமை... VGK ஐயாவின்-ஆவலுடன் நானும் பங்கேற்கிறேன்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  6. அருமையான கதை.....

    பாராட்டுகள்.

    ReplyDelete