Wednesday 8 May 2013

சொன்னார்கள் / செய்தார்கள்




ஜவஹர்லால் நேரு ‘தனிமைத் தீவில் தள்ளப்பட்டால் என்ன செய்வீர்கள்?என்று கேட்டபோது, ‘புத்தகங்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்துவிட்டு வருவேன்என்று பதிலளித்தாராம்.

விவேகானந்தர் – ஒரு நூலகம் திறக்கப்படும்போது, ஒரு சிறைச்சாலை மூடப்படும்.

பெட்ரண்ட் ரஸல் என் கல்லறையில் மறக்காமல் எழுதுங்கள், இங்கே ஒரு புத்தகப் புழு உறங்குகிறதென்று.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ‘மனிதனின் மிகப் பெரிய கண்டு பிடிப்பு எது?என்று கேட்டபோது சற்றும் யோசிக்காமல் புத்தகம்என் பதிலளித்தாராம்.

தந்தை பெரியார் பெண்களிடம், கரண்டியைப் பிடுங்கி விட்டு புத்தகம் கொடுத்தால் போதும்’.

நெல்சன் மண்டேலா ‘வேறு எந்தச் சுதந்திரமும் வேண்டாம்.  சிறையில் புத்தக வாசிப்பை மட்டும் அனுமதிக்க வேண்டும்.

லெனின் ‘பிறந்த நாளுக்கு என்ன வேண்டும் என நாடு கேட்டபோது புத்தகங்கள் வேண்டும் என சற்றும் தயக்கமின்றி லெனின் கூறிட குவிந்த புத்தகங்கள் பல லட்சம்.   

பேரறிஞர் இங்கர்சால் குடும்பத்தை விட்டு வெளியேறுங்கள் என்று தூக்கியெறியப்பட்டபோது சென்ற இடம் நூலகம்.

சார்லி சாப்ளின் ஒவ்வொரு படமும் நடிக்க ஒப்புக்கொள்ளும் போது வரும் முன்பணத்தில் முதல் நூறு டாலருக்கு புத்தகம் வாங்குவாராம்.

வின்ஸ்டன் சர்ச்சில் ஒரு குழந்தைக்கு நீங்கள் வாங்கித்தரும் மிகச் சிறந்த பரிசு ஒரு புத்தகம்தான்.

மகாத்மா காந்தி ‘ஒரு கோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள்என்று கேட்டபோது ‘ஒரு நூலகம் கட்டுவேன் என்று பதிலளித்தாராம்.

அறிஞர் அண்ணா பம்பாய்க்கு விமானத்தில் போகாமல் காரில் மூன்றுநாள் பயணம் செய்து மெனக்கெட்டது ஏன்?என்று கேட்டபோது ‘பத்து புத்தகங்கள் படிக்க வேண்டி இருந்ததுஎன்றாராம்.

மார்டின் லூதர் கிங் ‘பயங்கரமான போராட்ட ஆயுதங்கள் எவை?என் கேட்கப்பட்டபோது, ‘புத்தகங்கள்தான்என்றாராம்.

டாக்டர் அம்பேத்கார் எங்கே தங்க விரும்புகிறீர்கள் என்று லண்டன் தோழர்கள் கேட்டபோது...  ‘நூலகத்திற்கு அருகில் உள்ள இடத்தில்என்றாராம்.

பகத்சிங் - தான் தூக்கிலிடப்படுவதற்கு ஒரு நிமிடம் முன்பு வரை வாசித்துக் கொண்டே இருந்தாராம்.

புத்தகங்களை நேசிப்போம் வாசிப்போம்.  




10 comments:

  1. புத்தகங்களை நேசிப்போம்… வாசிப்போம்.

    மிகவும் அருமையான தொகுப்பு. பாராட்டுக்கள். நல்வாழ்த்துகள். நன்றியோ நன்றிகள்.

    சபாஷ்! ஜெ க்கு ஒரு பெரிய ஜே !!

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கும் ஜெ ஆகிட்டேனா.
      பாராட்டுக்கு நன்றி.

      Delete
  2. புத்தகங்களை நேசிப்போம்… வாசிப்போம்...
    தேன் ..! ரசித்தேன் ..!தேன் ..!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ராஜிம்மா

      Delete
  3. புத்தகங்களை நேசிப்போம்… வாசிப்போம்.//
    ஆம், புத்தகங்களை வாசிப்போம், நேசிப்போம்.
    அருமையான பதிவு.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி கோமதி

      Delete
  4. புத்தகங்கள் பற்றி அருமையான செய்திகள்.... பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. நன்றிக்கு நன்றி வெங்கட் நாகராஜ் சார்

      Delete
  5. புத்தகங்களை வாசித்ததோடு நேசிக்கவும் செய்ததால்தான் அவர்கள் மேதைகளாகத் திகழ்ந்தார்கள். எல்லோரும் நினைவு வைத்திருக்கவேண்டிய வார்த்தைகள்

    ReplyDelete
    Replies
    1. புத்தகங்களை விட சிறந்த தோழன் எதுவும் இருக்க முடியாது.
      மிக்க நன்றி முரளிதரன்

      Delete