பிரபலங்களின்
வாழ்வில் மகிழ்ச்சி, நகைச்சுவை, சோகம், ஆச்சரியம், கோபம் போன்ற உணர்ச்சி பூர்வமான
நிகழ்ச்சிகள் நடந்திருக்கும். இது போன்று நாம் படித்த, கேள்விப்பட்ட, பார்த்த நிகழ்ச்சிகளை இந்தத் தலைப்பில் பகிர்ந்து கொள்கிறேன்.
இது போன்ற
நிகழ்ச்சிகள் நமக்கு படிப்பினையாக அமையலாம். ஏன், சில நிகழ்ச்சிகளிலிருந்து நம்
பிரச்சினைகளுக்கு விடைகூட கிடைக்கலாம். நமக்கு தன்னம்பிக்கை கிடைக்கலாம்.
முதல்
பதிவாக ஒரு நகைச்சுவைப் பதிவுடன் ஆரம்பிக்கிறேன்.
கி. வா. ஜ அவர்கள் ஒரு
கூட்டத்தில் இம்மை - மறுமை என்ற தலைப்பில் பேச அழைக்கப்பட்டிருந்தார்.
அவர் உரையாற்ற ஆரம்பித்ததும் மைக் கோளாறாகி விட்டது. அதை அகற்றி விட்டு
வேறு மைக் வைத்தார்கள். அதுவும் கொஞ்ச நேரத்தில் சரியாகச் செயல்படவில்லை. கி.வா.ஜ
உடனே“இம்மைக்கும் சரியில்லை, அம்மைக்கும்
சரியில்லை" என பேசவிருந்த தலைப்பிற்கு ஏற்றவாறு சிலேடையில் சொல்ல
அனைவரும் ரசித்தனர்.
கி.வா.ஜகன்னாதன் ஒரு
விருந்தில் கலந்துகொண்டபோது “உங்களுக்குப் பூரி பிடிக்குமா?" என்று
கேட்டார்கள்.
“ஜகன்னாதனுக்குப் பூரி பிடிக்காமல் இருக்குமா?" என்று
உடன் பதிலளித்தார். கி.வா.ஜ
ஹா... ஹா... தொடர்கிறேன்...
ReplyDeleteநன்றி சகோதரி...
மிக்க நன்றி தனபாலன் சார். எல்லா பதிவிற்கும் முதல் பின்னூட்டம் போட்டு ஊக்கப்படுத்தும் உங்களுக்கு ஸ்பெஷல் நன்றி.
Delete
ReplyDeleteகி.வா.ஜ. அவர்கள்
சிந்தனைக் கருவூலம்.
தம் எண்ணங்களை நகைச்சுவையுடன்
பிறருக்கு அளிப்பதோ
தாம்பூலம்.
அவர் தந்த
' கலை மகளை '
இன்றும் தொடர்ந்து
ஐம்பது வருடங்களாகப்
படிக்கிறோம்
சுப்பு ரத்தினம்.
www.pureaanmeekam.blogspot.com
www.vazhvuneri.blogspot.in
இதமான நகைச்சுவை.
Deleteஇதுபோல் சூழ் நிலைக்கு ஏற்ற வண்ணம் பேசும் கலை அனவருக்கும் வராது.
{நானும் தொடர்ந்து வருகிறேன்}
எனது கணனியில் கோளாறு; ஃபாலோவில் இணயமுடியவில்லை."புக்மார்க்கின்" வழியே தொடர்கிறேன்.
Deleteதிரு கி.வா.ஜகன்நாதன் அவரிகளின் சிலேடைப்பேச்சுகள் மிகவும் நன்றாகவே இருக்கும். நான் நிறைய அவைகளைப் படித்துள்ளேன். ஏற்கனவே கேள்விப்பட்டது தான் என்றாலும், பகிர்வுக்கும் மீண்டும் நினைவூட்டலுக்கும் நன்றிகள். அன்புடன் VGK
ReplyDelete