மின் விநியோகம்
சீராக இல்லாத
இந்த நேரத்திலும்,
கடைத் தெருக்களிலும்
திருமணக் கூடங்களிலும்
பொது இடங்களிலும்
சரம், சரமாய்
மின் விளக்குகளை
ஏற்றி வைத்திருப்பதைப்
பார்க்கும்போது
மூக்குக்கு மேல்
கோபம்தான் வருகிறது.
ஆனால்
அலுவலகத்தில்
ஆளில்லாத நேரத்தில்
மின் தூக்கியில்
சுற்றிக்கொண்டிருக்கும்
மின் விசிறியை
நிறுத்தும் போதும்
வீட்டிலும்
அலுவலகத்திலும்
ஆளில்லாத இடங்களில்
சுற்றிக் கொண்டிருக்கும்
மின் விசிறிகளை
நிறுத்தும்போதும்
தேவையில்லாமல்
எரிந்து கொண்டிருக்கும்
மின் விளக்குகளை
அணைக்கும்போதும்
ஒரு அல்ப சந்தோஷம்
ஏற்படுகிறதே!
என்ன இருந்தாலும்
‘சிறு துளி
பெருவெள்ளம்’
அல்லவா?
அது தான் சந்தோசம்... அனைவரும் செய்ய வேண்டும்...
ReplyDeleteமிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன் சார்.
Deleteபயனுள்ள பகிர்வு. உங்கள் ஆதங்கம் எனக்கும் உண்டு. சிறுதுளி பெரு வெள்ளம் தான். சந்தேகமே இல்லை. பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.
ReplyDeleteஅன்புடன்
VGK
மிக்க நன்றி கோபாலகிருஷ்ணன் சார்.
Delete