எங்கள் பேத்தி லயாக்குட்டி நவராத்திரி நன்னாளில் எங்கள் வீடு வந்து சேர்ந்தாள். பிறந்து ஒரு மாதம் ஆன அவளின் சிரிப்பில் விளைந்தது இந்தக் கவிதை.
அவளாக
சிரிக்கிறாள்
அழகாக
சிரிக்கிறாள்
அர்த்தம்
புரிந்து சிரிக்கிறாளா?
அதுதான்
தெரியவில்லையே!
ஆழி
சூழ் உலகத்திற்கு
அவள்
வந்து சேர்ந்து
திங்கள்
ஒன்றுதான் ஆகிறது
தாய்
முகம் புரிந்திருக்குமோ?
தந்தை
முகம் தெரிந்திருக்குமோ?
தாத்தா,
பாட்டி இவர் தான் என்று
தங்கக்குட்டிதான்
அறிந்திருக்குமோ?
அத்தையின்
அழகு முகம்
அகமகிழ
வைத்திருக்குமோ?
தாயுமான
இறைவன்
தாமரைப்பூ
கொண்டுவந்து
காட்டும்போது
குஞ்சிரிப்பு
கொவ்வைச்
செவ்விதழில்
குழைந்து
வருகிறதோ?
யாமறியோம்
பராபரமே!
பேத்தியினை பார்த்து பாட்டி எழுதிய கவிதை வரிகள் அருமை.. எல்லா செல்வங்களுடன் குழந்தை நலமுடன் வாழ வாழ்த்துக்கள்.. மாமி
ReplyDeleteநன்றி FAIZA உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி
Deleteஅழகு... அருமை... வாழ்த்துக்கள்...
ReplyDeleteநன்றி...
எந்தப் பதிவு போட்டாலும் உடனடியாக பார்த்து (நாங்க அதை செய்யறதில்ல) பின்னூட்டம் கொடுக்கும் தனபாலன், உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி
Deleteலயாவுக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteபேத்திக்கு கவிதையும் அருமை
அருமையான தரணத்தை அனுபவித்து கொண்டு இருக்கிறீர்கள்
ஜே மாமி ஜே ஜே மாமி
நன்றி ஜலீலா. ஆமாம. லயாக்குட்டியின் ஒவ்வொரு அசைவையும் ரசித்துக்கொண்டிருக்கிறோம்.
Deleteபேத்தியை பார்த்த சந்தோஷத்தில் பாட்டிக்கு கவிதை எழுத தோன்றியதோ நல்லா இருக்கு பேத்திக்கும் கவிதைக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteஆமாம் லட்சுமி அம்மா. உங்கள் வாழ்த்துக்கு நன்றி
Deleteகவிதை அருமை அக்கா. உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் என் வாழ்த்துக்கள். லயாக்குட்டி க்யூட்டா இருக்காங்க, ஒரு கிஸ்.
ReplyDeleteஇமா வாழ்த்துக்கு ரொம்ப நன்றி. உங்கள் கிஸ்ஸை குட்டிக்கு பரிசளித்து விட்டேன்.
Deleteகவிதையும் அழகு...தங்கள் பேத்தியின் புன்னகையும் அழகு வாழ்த்துக்கள்...
ReplyDeleteகவிதையும் அழகு...தங்கள் பேத்தியின் சிரிப்பும் அழகு...வாழ்த்துக்கள்...
ReplyDeleteநன்றி கந்தன்
Deleteஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
ReplyDeleteமேலும் விவரங்களுக்கு இங்கே http://blogintamil.blogspot.in/2012/11/4.html) சென்று பார்க்கவும்...
நன்றி...
கவிதை மிக அழகு.பேத்திக்கு நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteஉங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி ஆசியா
Deleteஉறவில் புதுவரவு
ReplyDeleteவாழ்வில் பெருமகிழ்வு...
உலகை நேசிக்கவந்த புதுமலருக்கு வாழ்த்துக்கள்...
நன்றி கந்தசாமி சார்.
Deleteஉறவில் புதுவரவு
ReplyDeleteவாழ்வில் பெருமகிழ்வு...
உலகை நேசிக்கவந்த புதுமலருக்கு வாழ்த்துக்கள்...
Sivakumar. A.,
South Sudan,
Africa
nirmalshiva1968@gmail.com
உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி சிவகுமார் சார்.
DeleteNalla varthaikalai nayamaga serthullirgal...nall kavithai
ReplyDeleteமிக்க நன்றி கணேஷ் சார்
Deleteலயாக்குட்டி நல்ல அழகு.
ReplyDelete“லயா” பெயரிலேயே நல்ல லயம் உள்ளது.
குழந்தக்கும் பாட்டிக்கும் என் அன்பான வாழ்த்துகள். ;)
கவிதையும் மிகவும் பொருத்தமே! பாராட்டுக்கள்.
//தாயுமான இறைவன்
தாமரைப்பூ கொண்டுவந்து
காட்டும்போது குஞ்சிரிப்பு
கொவ்வைச் செவ்விதழில்
குழைந்து வருகிறதோ?//
ஆம், தாயுமானவரின் கிருபையே தான்,
தாயும் சேயும் நலமாயிருத்தல்.
கீழ்க்கண்ட குட்டியூண்டு பதிவினில் தாயுமானவரைப் பாருங்கோ!
http://gopu1949.blogspot.in/2011/07/blog-post_27.html
தலைப்பு:
காது கொடுத்துக்கேட்டேன் ....... ஆஹா ..... குவா குவா சப்தம்!
அன்புடன்
VGK