Sunday, 30 December 2012

புத்தாண்டு பிறக்குது



புத்தாண்டு பிறக்குது
புத்தாண்டு பிறக்குது
முத்தான கோரிக்கைகள்
முன்னே வைக்கின்றேன்
முடிந்தால் நிறைவேற்றிடு
முழு முதற் கடவுளே – முடிந்தால்
முழுவதும் நிறைவேற்றிவிடு

மொழிச்சண்டை,
இனச்சண்டை,
மதச்சண்டை,
ஜாதிச்சண்டை,
அண்டை, அயல் நாட்டுச் சண்டை
எல்லா சண்டைகளையும்
அறவே ஒழித்திடு.

கொலை, களவு, கற்பழிப்பு,
நரபலி, தீண்டாமை,
நம்பிக்கைத் துரோகம், தீவிரவாதம்
நச்சென்று நசுக்கி
நலம் கெட்டுப்போகவை.

நீ கொடுத்த இன்னுயிரை
தானே அழிக்கும்
தரங்கெட்ட செயலை
தப்பாமல் மாற்றிடு.

பிறர் பொருள்,
பிறர் மனை கவரும்
பேராசையை
கட்டாயம் விரட்டி விடு.

பிச்சையில்லா பாரதம்
நிச்சயம் உருவாக்கிடு

உழைப்பின் உயர்வு,
உயிரின் விலை,
பாரம்பரியம்,
நல்ல பழக்க வழக்கங்கள்
புரியாதவர்களுக்குப்
புரிய வைத்திடு.

முட்டாள் மனிதனை
மூளைச் சலவை செய்தாவது
முடிந்தவரை நிறைவேற்றிடு.


14 comments:

  1. அனைத்தும் அற்புதமான வேண்டுகோள்...
    முடிந்தால் முழுவதும் அருமையான வார்த்தைகள்...
    வினை தீர்க்கும் விநாயகர் தீர்த்திடுவார் அனைத்தும்.
    அனைத்து சண்டைகளும் நீங்கினால் நாள் நன்றாகும்.
    ஒற்றுமை இருந்தாலே சண்டைகள் உட்புகாது...

    பெண்களை வன்கொலை செய்யவேண்டாமே...
    மனித உயிர்களை முடிந்தவரை காக்கலாமே....
    அப்படியென்ன கேவலமாய் ஒருசில மனிதர்கள்...
    மன்னிக்கவும் மனித உருவில் சில கொடும்பாவிகள்..

    தேவையில்லா ஜென்மங்களை அழைத்துகொ(ள்)ல்.
    யானை முகத்தோனே என்னருமை விநாயகனே...
    தற்கொலை எண்ணத்தை மாய்த்து விடு கடவுளே...
    அம்மா, தாயே வேண்டாமே இந்த அவல குரல்...

    இனியாவது புரியும் மனிதர்களை படைத்திடு...
    இல்லையேல் அவர்களை களை எடுத்து விடு..
    முட்டாள்களை முடிந்தவரை சலவை செய்திடு...
    முடியாத பட்சத்தில் உயிரை காற்றோடு கலந்திடு...

    தங்களுக்கும் தங்களின் நல்லெண்ணம் அனைத்தும்
    ஈடேற அந்த பானை வயிற்றோனை வேண்டியே
    என்னுடைய புத்தாண்டு வாழ்த்தினை உரித்தாக்குகிறேன்... வாழுங்கள் வளமோடு...

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வாழ்த்துக்கும், பாராட்டுக்கும் மிக்க நன்றி.

      Delete
  2. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ராஜி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
      வாழ்க வளமுடன்.

      Delete
  3. அருமையான கவிதையில் புத்தாண்டை வரவேற்றிருக்கிரீர்கள். இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி லட்சுமி அம்மா.
      உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
      வாழ்க வளமுடன்.


      உங்க ‘சிங்கப்பூர் பயணம்’4 வரை படித்தேன். ரொம்ப அருமை. நேரம் கிடைக்கும் போது படிக்கிறேன். ரொம்ப சுவாரசியமாக இருக்கிறது.

      Delete
  4. நிறைந்த மனித நேயத்துடன் வேண்டி நிற்கும் தங்கள் வேண்டுதல்
    கண்டு எனக்கே மனம் உருகி விட்டது ....நிட்சயம் இறைவன் தங்கள்
    வேண்டுதலை நிறைவேற்றுவார் அம்மா ..இனிய புத்தாண்டில் நீங்கள்
    எண்ணியதெல்லாம் நிறைவேற மனம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்
    உங்களுக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் .....

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி அம்பாளடியாள்.
      நம்பாள் சொன்னா என்ன, அம்பாள் சொன்னா என்ன?
      மிக்க நன்றி.
      உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
      வாழ்க வளமுடன்.

      Delete
  5. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! முழுமுதல் கடவுள் நல் அருள் புரியட்டும்!

    ReplyDelete
    Replies

    1. மிக்க நன்றி.
      உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
      வாழ்க வளமுடன்.

      Delete
  6. தங்களின் இந்தக்கவிதை அருமை. தங்களுக்கும் ‘லயா’க்குட்டி உள்பட தங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் என் அன்பான புத்தாண்டு வாழ்த்துகள். மற்ற விஷயங்கள் யாவும் வழக்கம் போல ____ மூலம்.

    பிரியமுள்ள
    கோபு

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி கோபு சார்.
      உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
      மாமியிடம் என் ஸ்பெஷல் வாழ்த்துக்களைச் சொல்லி விடுங்கள்.
      வாழ்க வளமுடன்.

      Delete
  7. எல்லாமே நன்றாக நிறைவேற வேண்டுமம்மா.
    எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டுமம்மா.

    ReplyDelete
    Replies
    1. காமாட்சி அம்மா வருகைக்கு மிக்க நன்றி

      எல்லாமே நன்றாக நிறைவேற வேண்டுமம்மா.
      எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டுமம்மா.

      உங்கள் வாக்கு பலிக்க வேண்டும்.

      Delete