புத்தாண்டு வாழ்த்துக்களுடன் என் முதல் பதிவு
IN AND OUT CHENNAI JAN 1 - 15, 2013
இதழில் வெளி வந்த என் சிறுகதை
உங்களுக்காக இங்கு மீண்டும் வெளியிட்டுள்ளேன்.
தட்டு
“ஏங்க, எழுந்திருங்க, எழுந்திருங்க”
“என்னப்பா இது, மணி அஞ்சு தான் ஆகுது. ஆபீஸ் போற நாள்லயே ஏழு
மணிக்குதான் எழுப்புவ. இன்னிக்கு
சனிக்கிழமை. இப்பவே எழுப்பற”.
“அது சரி. விடிய விடிய கதை கேட்டு சீதைக்கு ராமன் சித்தப்பான்னானாம்.”
”நான் அப்படி ஒண்ணும் சொல்லலியே”
“சரி ஜோக்கெல்லாம் போதும். சீக்கிரம் கிளம்புங்க. ”
”எங்க கிளம்பணும்”
“என்னங்க இது. நேத்தே சொன்னேன் இல்ல.
நிஷாவை ஸ்கூல்ல சேக்கறதுக்கு அப்ளிகேஷன் வாங்கப்போணும்ன்னு”
“காலையில அஞ்சு மணிக்கா”
“அவங்கவங்க ராத்திரியே போய் ஸ்கூல் வாசல்ல படுத்துட்டிருக்காங்க. எங்க
ஆபீஸ் ராஜன், அதான் இங்க ‘ஜே’ ப்ளாக்ல குடி இருக்காரே
அவர் கிட்ட நைசா ஒரு இடம்
போட்டு வெக்க சொல்லி இருக்கேன். சீக்கிரம்
கிளம்புங்க”
“இப்ப எந்த ஸ்கூல் திறந்திருக்கும்.
பத்து மணிக்கு மேல போறேனே”.
‘குளிக்க வேண்டாம். ம் .எனக்கு சலுகை தராங்களாம்.’
“என்ன முணுமுணுக்கறீங்க.”
“ம். பொண்ணு பிறந்த தேதி என்னன்னு கேட்டா, திருவிழாவுல காணாமப் போன சின்ன
புள்ள மாதிரி முழிப்பீங்க இல்ல. அதான்
எல்லா விவரமும் வெச்சிருக்கேன்.”
“வேற ஏதாவது ஸ்கூல்ல சேக்கலாமே”
“இங்க பாருங்க, என் கோவத்தைக் கிளறாதீங்க.
என் கூட வேலை செய்யறவங்கள்ள நம்ப ஏரியால இருக்கற எல்லாரும் இந்த
ஸ்கூல்லதான் சேக்கறாங்க. ரொம்ப நல்ல
ஸ்கூல்”
“ஒண்ணும் பாக்க வேண்டாம். கிளம்புங்க”
* * *
’என்னடா இது, மணி எட்டாகப்
போகுது. வயிறு லேசா பசிக்க ஆரம்பிக்குதே’.
“ஏன் ராஜன், எத்தனை
மணிக்கு அப்ளிகேஷன் கொடுப்பாங்க”
“0930 மணிக்கு
குடுக்க ஆரம்பிப்பாங்களாம், என்ன சார், பசிக்குதா,
டீ, கீ ஏதாவது சாப்பிடணும்ன்னா போயிட்டு வாங்க.
நான் இடத்தைப் பாத்துக்கறேன்.”
“அதெல்லாம் ஒண்ணும்
வேண்டாம்ப்பா.”
பையில என்னதான்
வெச்சிருக்கா. வெயிட்டா இருக்கே. பிஸ்கெட்
பாக்கெட், 2 வாழைப்பழம், தண்ணி.. அடிப்பாவி, நேரம் ஆகும்ன்னு தெரிஞ்சுதான்
இதெல்லாம் பையில போட்டு அனுப்பி இருக்காளா?
“ராஜன், பிஸ்கெட்
சாப்பிடறீங்களா?”
“எங்க வீட்ல கூட
குடுத்து அனுப்பி இருக்காங்க சார்”
“ஏன் ராஜன், இந்த
ஸ்கூல் என்ன அவ்வளவு ஒசத்தி”
“அதெல்லாம் தெரியாது.
எங்க வீட்ல இங்கதான் சேக்கணும்ன்னு சொல்லிட்டாங்க”.
மனதுக்குள்
“வீட்டுக்கு வீடு இப்டித்தானா”.
* * *
”மணி 11 ஆயிடுத்து. நான் வரேன் ராஜன், ஒரே ப்ளாட்ல இருக்கோம்ன்னுதான் பேரு.
இன்னிக்குதான் நாம இவ்வளவு நேரம் பேசி இருக்கோம்”
“சரி வரேன் சார்”
* * *
”இந்தா நல்லா குடுத்தாங்க
அப்ளிகேஷன். 6 மணி நேரம் காக்க
வெச்சு. ஒரு அப்ளிகேஷன் 500 ரூபா. நான் காலேஜுக்குக் கூட அப்ளிகேஷனுக்கு இவ்ளோ
செலவு பண்ணினது இல்ல. நீ என்ன படிச்சிருக்க, ஒன் பொண்டாட்டி என்ன படிச்சிருக்கா,
லொட்டு, லொசுக்குன்னு நூறு கேள்வி கேட்டுட்டு குடுக்கறான் அப்ளிகேஷன்”
”சும்மா ஏதாவது சொல்லிண்டே
இருக்காதீங்க. இந்த ஸ்கூல்ல நம்பள மாதிரி,
ரெண்டு பேரும் வேலைக்குப் போகறவங்களுக்காக தனி கவுன்டரே ஓபன் பண்ணி
இருக்காங்களாம். இங்க சேத்தா +2 வரைக்கும்
கவலையே இல்லயாம். ஏன் இவங்களுக்கு காலேஜ்
வேற இருக்காம். மேல் படிப்பு முடிஞ்சதும் வேலையும் வாங்கிக்
குடுத்துடுவாங்களாம்”
“அப்படியே கல்யாணமும்
பண்ணி வெச்சு, பிரசவமும் பாத்துடுவாங்களாமா?”
“ஜோக்கு. இதுக்கு நான் சிரிக்கணுமாக்கும். இங்க பாருங்க.
இன்னிக்கு நாள் நல்லா இருக்கு.
உக்காந்து அப்ளிகேஷன பூர்த்தி செய்யுங்க.
புதன் கிழமையும் நாள் நல்லா இருக்கு.
அன்னிக்கு பணம் கட்டிடலாம்”
”அது எவ்வளோ? ஒரு லட்சமா?”
“ஒரு 40,000 ரெடியா
வெச்சுக்கோங்க”
“அம்மாடி, என்ன கூலா
சொல்லிட்டுப்போறா எல் கே ஜிக்கு நாப்பதாயிரமா?”
* * *
”ஐயா”
“என்ன கண்ணம்மா”
“ஐயா, அம்மா கிட்ட
சொன்னேன். உங்கள கேக்கணும்ன்னு சொன்னாங்க. ராணியை ஸ்கூல்ல
சேத்துட்டேன். அவங்களே புத்தகம், நோட்டு
எல்லாம் குடுத்துடுவாங்களாம்.
யூனிபார்மும் ஒரு செட் தராங்களாம்.
எனக்கு ஒரு 200 ரூபா கடனா குடுத்தீங்கன்னா இன்னும் ஒரு செட் யூனிபார்ம்
வாங்கிடுவேன். மாசம் 50 ரூபாயா பிடிச்சுக்குங்க ஐயா”
“200 ரூபா தரேன்
கண்ணம்மா. ஆனா திருப்பி எல்லாம் தர
வேண்டாம். அப்படியே நிஷாவுக்கு வாங்கும் போது ராணிக்கு பை,
தண்ணி பாட்டில் எல்லாம் வாங்கிக் குடுத்துடறேன்..
என்ன ராணி நல்லா படிக்கணும் சரியா”
அம்மாவின் புடவைத்தலைப்புக்குள்
வெட்கத்துடன் நுழைந்து கொண்டாள் ராணி.
* * *
”ஏங்க, இன்னிக்குக்
கொஞ்சம் சீக்கிரம் கிளம்பிடலாம். ஸ்கூல்ல
அப்ளிகேஷனை குடுத்துட்டு பணத்தை கட்டிட்டுப் போயிடலாம்”
“கண்ணம்மா. வீட்டையும், நிஷாவையும் பத்திரமா பாத்துக்கங்க. இட்லி,
சாப்பாடு எல்லாம் ராணிக்கும், உங்களுக்கும் சேத்து வெச்சிருக்கேன். நாங்க
கிளம்பறோம்”
“சரிங்கம்மா”
“அம்மா, எனக்கு இட்லி
வேண்டாம். எப்பப்பாரு இட்லி, புடிக்கவே இல்ல. வேற எதாவது பண்ணி வெக்கக்கூடாதா?”
இது ஏதடா வேதாளம்
முருங்கை மரம் ஏறுதே என்று “நிஷாக்குட்டி, சாயங்காலம் அப்பா ஆபீஸ்லேந்து வந்ததும்
உன்ன வெளியே அழைச்சுட்டுப் போய் என்ன வேணுமோ வாங்கித்தரேன், சரியா?”
”போங்கப்பா”
“ஏங்க நீங்க வாங்க
மணியாச்சு. கிளம்பலாம்”
* * *
”நிஷாக்குட்டி,
யூனிபார்ம், பை, எல்லாம் நல்லா இருக்கா? நாளையில இருந்து ஸ்கூலுக்குப் போகணும்.”
“அப்பா, நாளைக்கு ஒரு
நாள் நீங்களும், அம்மாவும் ஸ்கூலுக்குக் கொண்டு விட்டுடுங்கப்பா. மறுநாள்லேந்து ஸ்கூல் பஸ்ல போயிடறேன்.”
“ஆமாம் செல்லம்.
நாளைக்கு நானும், அம்மாவும்தான் அழைச்சிட்டுப் போகப் போறோம்”.
“அப்பா, அப்டியே
அம்மாகிட்ட சொல்லுப்பா. சும்மா, சும்மா
இட்லி, தோசை. வேற ஏதாவது செய்யச்
சொல்லுப்பா”
“சரிம்மா, அப்புறம்
உன் ப்ரெண்டு ராணிக்கு பை, தண்ணி பாட்டில் எல்லாம் புடிச்சுதாமா?”
“ரொம்பப்
புடிச்சிருக்காம்ப்பா”
“அம்மா, நாளைக்கு லஞ்சுக்கு என்ன தரப்போற”
“நாளைக்கு லஞ்ச்
எல்லாம் இல்ல. அரைநாள் தானாம்
ஸ்கூல். அம்மா லீவு போட்டிருக்கேன். உன்னோடயே இருக்கேன் என்ன?”
”அப்ப முழு நாள்
ஸ்கூலுக்கு லஞ்சுக்கு என்ன தருவ”
“அத அப்புறம் பார்த்துக்கலாம்”
“அப்டின்னா நாளைக்கு ஸ்கூல்லேந்து
வந்ததும் எனக்கு பூரி, கிழங்கு பண்ணித் தரணும், சரியா?”
”சரி”
“அம்மா, ராணிக்கும்
குடுக்கணும் என்ன”
* * *
”நிஷாக்குட்டி, உனக்கு ஸ்கூல் பிடிச்சிருக்கா?. இன்னிக்கு பஸ்ல போனியே,
ப்ரெண்ட்செல்லாம் புடிச்சுட்டியா?”
“அப்பா, ஸ்கூல்
எல்லாம் நல்லாதான்ப்பா இருக்கு. ஆனா”
“ஆனா என்ன சொல்லும்மா”
“அம்மா முறைச்சு
பாக்கறாப்பா”
“நீ சும்மா சொல்லு செல்லம்”
“அது வந்துப்பா. என் ஸ்கூல் நல்லாதான் இருக்கு. ஆனா ராணி ஸ்கூல்தாம்ப்பா பெஸ்ட்”
“ஏண்டா செல்லம்”
“அவங்க ஸ்கூலுக்கு
வெறும் தட்டு மட்டும் எடுத்துட்டுப் போனாப் போதுமாம்பா. லஞ்சுக்கு சூடா சாப்பாடு போடுவாங்களாம்”.
மனைவி முறைப்பதையும்
லட்சியம் செய்யாமல் கண்ணில் நீர் வர விழுந்து விழுந்து சிரித்தான் நிஷாவின்
அப்பா. அப்பா ஏன் இப்படி சிரிக்கிறார்
என்று புரியாமல் விழித்தாள் நிஷாக்குட்டி.
&/ &/ &/
IN AND OUT சென்னையைத் தங்கள் எழுத்துக்களால் கலக்கி வருகிறீர்கள். வாழ்த்துகள்.
ReplyDeleteமுழுவதும் படித்து விட்டு மீண்டும் வருவேன். ஜாக்கிரதை ! ;))))))
அன்புடன் கோபு
IN AND OUT சென்னையைத் தங்கள் எழுத்துக்களால் கலக்கி வருகிறீர்கள். வாழ்த்துகள்.//
Deleteஎல்லாம் உங்கள் ஆசிகள்தான் காரணம்.
வாங்க. வாங்க. உங்க பின்னூட்டம்தான் அடுத்த கதைக்கு பூஸ்ட், போன்விடா, மால்டோவா எல்லாம்.
உரையாடல், இயல்பு..
Deleteகதை பிரமாதம்.. நிதர்சனம்..
வாழ்த்துக்கள் மேடம்.. ..
மிக்க நன்றி அரவிந்த். உங்க பையன ஸ்கூல் சேக்கும்போது கண்டிப்பா இந்தக்கதை ஞாபகத்துக்கு வரும்.
Deleteசிறுகதை ரொம்ப நல்லாருக்கு..
ReplyDeleteஉங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி அமைதிச்சாரல்.
Delete//“ம். பொண்ணு பிறந்த தேதி என்னன்னு கேட்டா, திருவிழாவுல காணாமப் போன சின்ன புள்ள மாதிரி முழிப்பீங்க இல்ல. அதான் எல்லா விவரமும் வெச்சிருக்கேன்.”//
ReplyDeleteபலக்கச்சிரித்தேன் .... இந்த இடத்தில்.
எவ்வளவோ கணவர்கள் இதுபோன்ற தங்களின் புத்திசாலி மனைவிகளிடம் அகப்பட்டுக்கொண்டு,
எலிக்கூண்டில் அகப்பட்ட எலிபோலத்தான் முழிக்கிறார்கள், பாவம்.
>>>>>>>
ஆமாம். நாங்க எங்க வூட்டுக்காரங்களுக்கு அப்பப்போ க்விஸ் ப்ரொக்ராம் வைத்து (வீட்டில் இருக்கறவங்களோட பிறந்த தினம், கல்யாண தினம் etc. etc.) அவங்க ராஜெஷ் குமாரின் கதாநாயகன் போல ‘ஙே’ என்று விழிப்பதை பார்த்து ரசிப்போமில்ல.
Delete//”மணி 11 ஆயிடுத்து. நான் வரேன் ராஜன், ஒரே ப்ளாட்ல இருக்கோம்ன்னுதான் பேரு. இன்னிக்குதான் நாம இவ்வளவு நேரம் பேசி இருக்கோம்”//
ReplyDeleteமிகவும் யதார்த்தமான நிகழ்ச்சி தான். இதை இந்த இடத்தில் கொண்டுவந்து போட்டுள்ள ‘ஜெ’ க்கு ஒரு ‘ஜே ஜே’ ! ;)))))
>>>>>>>
ஆமாம் பக்கத்து ப்ளாட்ல, வீட்டில யார் இருக்காங்கன்னு தெரியாம எத்தனையோ பேர் இருக்காங்களே.
Delete”சும்மா ஏதாவது சொல்லிண்டே இருக்காதீங்க. இந்த ஸ்கூல்ல நம்பள மாதிரி, ரெண்டு பேரும் வேலைக்குப் போகறவங்களுக்காக தனி கவுன்டரே ஓபன் பண்ணி இருக்காங்களாம். இங்க சேத்தா +2 வரைக்கும் கவலையே இல்லயாம். ஏன் இவங்களுக்கு காலேஜ் வேற இருக்காம். மேல் படிப்பு முடிஞ்சதும் வேலையும் வாங்கிக் குடுத்துடுவாங்களாம்”
ReplyDelete“அப்படியே கல்யாணமும் பண்ணி வெச்சு, பிரசவமும் பாத்துடுவாங்களாமா?”//
அருமையான நகைச்சுவை உணர்வினை அப்படியே எழுத்தில், தகுந்த இடத்தில் டக்குடக்குன்னு போட்டு விடுகிறீகள்!
என்னடா இந்த திருமதி. ஜயந்தி ரமணி அவர்களைப் பார்த்தவுடனேயே நமக்கு ஒரு பரிச்சயம் ஏற்பட்டுப் போச்சூன்னு நினைத்திருந்தேன்.
இப்போதான் தெரியுது நீங்களும் என்னைப்போலவே ஓர் நகைச்சுவை விரும்பி + எழுத்தாளர் என்பது.
சர்க்கரைப்பந்தலில் தென்மாரி பொழிந்தது போல உணர்கிறேனம்மா, உண்மையில் நல்லவே எழுதுகிறீர்கள். பாராட்டுக்கள். ;)))))
>>>>>>>>
நன்றியோ நன்றி.
Deleteஇந்த நகைச்சுவை உணர்வு பரம்பரை சொத்து.
என் பெண் சொல்வாள் “எல்லார் வீட்டிலயும் குழந்தைங்க வாலா இருக்கும். எங்க வீட்டிலமட்டும் அம்மாதான் வால்” என்று.
//இந்த நகைச்சுவை உணர்வு பரம்பரை சொத்து.//
Deleteஅப்போ நாம் இருவரும் ஒரே பரம்பரை தான் என்பதில் எனக்கு மேலும் மகிழ்ச்சியாக உள்ளது.
நம் சொத்தினைக் காபாற்றுவோம் நம் பிற்கால சந்ததிகளுக்காக.
//என் பெண் சொல்வாள் “எல்லார் வீட்டிலயும் குழந்தைங்க வாலா இருக்கும். எங்க வீட்டிலமட்டும் அம்மாதான் வால்” என்று.//
இதை நான் முன்பே என் ஞானதிருஷ்டியில் தெரிந்துதான்,
உங்களின் ’வால்’ தனத்தை, என் MAIL ID க்கு val [வால்] என்ற மூன்று எழுத்துக்களாக ஆரம்பத்தில் வைத்திருப்பேனோ ? ;)))))
//இந்த நகைச்சுவை உணர்வு பரம்பரை சொத்து.//
Deleteஅப்போ நாம் இருவரும் ஒரே பரம்பரை தான் என்பதில் எனக்கு மேலும் மகிழ்ச்சியாக உள்ளது.
நம் சொத்தினைக் காபாற்றுவோம் நம் பிற்கால சந்ததிகளுக்காக.
//என் பெண் சொல்வாள் “எல்லார் வீட்டிலயும் குழந்தைங்க வாலா இருக்கும். எங்க வீட்டிலமட்டும் அம்மாதான் வால்” என்று.//
இதை நான் முன்பே என் ஞானதிருஷ்டியில் தெரிந்துதான், உங்களின் ’வால்’ தனத்தை, என் MAIL ID க்கு val [வால்] என்ற மூன்று எழுத்துக்களாக ஆரம்பத்தில் வைத்திருப்பேனோ ? ;)))))
>>>>>>>>
“அதெல்லாம் தெரியாது. எங்க வீட்ல இங்கதான் சேக்கணும்ன்னு சொல்லிட்டாங்க”.
ReplyDeleteமனதுக்குள் “வீட்டுக்கு வீடு இப்டித்தானா”.///
குழந்தையின் மன உணர்வுகளை அற்புதமாய் படம்பிடித்துக்காட்டிய அருமையான நிதர்சன்மான கதை .. பாராட்டுக்கள்..
மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி. நீங்க என்னை விட பெரியவங்களா என்னன்னு தெரியல. நான் பாட்டுக்கு உங்கள ராஜின்னு சொல்லிட்டிருந்தேன்.
Deleteவாழ்த்துக்கு ரொம்ப ரொம்ப நன்றி.
சென்ற பின்னூட்டத்தில் ‘தென்மாரி’ என்பதைத் ’தேன்மாரி’ என தயவுசெய்து மாற்றிக்கொண்டு படியுங்கள்.
ReplyDeleteஅவசரத்தில் சந்தோஷத்தில் பின்னூட்டம் கொடுக்கும் போது எனக்குக் கையும் ஓடலை காலும் ஓடலை. அதனால் சில எழுத்துப்பிழைகள் வந்து விடுகிறது.
இரட்டைக்கொம்பினில் ஒன்றை ஒடித்து விட்டேன் போல .. ’தே’ பதில் ‘தெ’ .. இப்போது தான் கவனித்தேன். காணாமல் போய் விடாமல் இருக்க Copy + Paste செய்து வருகிறேன் .. இன்று முதல்.
>>>>>>>
நான் கூட சில நேரங்களில் இந்த மாதிரி ஏதாவது செய்து விடுவேன். நான் கொஞ்சம் ஆர்வக் கோளாறான ஆள்தான்.
Deleteஇப்பதான் உங்க புண்ணியத்துல பின்னூட்டம் ஒழுங்கா கொடுக்க கத்துட்டிருக்கேன். முன்பெல்லாம் கடைசி பின்னூட்டத்தை முதலிலும், முதல் பின்னூட்டத்தை கடைசியிலும் மாத்தி மாத்தி போட்டுடுவேன்.
தானிக்கி தீனி சரிக்கப் போயிந்தி
//தானிக்கி தீனி சரிக்கப் போயிந்தி//
Deleteமகிழ்ச்சியோ மகிழ்ச்சி ! ;)))))
புத்தாண்டு வாழ்த்துக்களுடன் என் முதல் பதிவு
ReplyDeleteIN AND OUT CHENNAI JAN 1 - 15, 2013
இதழில் வெளி வந்த சிறுகதை ..//
மனம் நிறைந்த வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்...
மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி.
Deleteஅழகான தட்டு...தட்டவேண்டிய தட்டு...
ReplyDeleteஆடம்பரத்தை அக்கம் பக்கமுள்ளவர்களை
பார்த்து நம்மை மாற்றிக்கொள்ள நினைப்பவர்களுக்கு
தலையில் ஓங்கி போடவேண்டிய ஒரு தட்டு....
பள்ளியினை பார்க்காமல் பிள்ளைகளின் விருப்பங்களை கேட்காமல் அந்த பிஞ்சுகளின்
இளவயிதிலே நஞ்ஜெனும் சுமையை ஏற்றி வைக்கும் பெற்றோர்கள் திருந்த ஒரு தட்டு...
தன் வீட்டில் பணி புரியும் ஏழை ஊழியரின்
குழந்தையும் தன் குழந்தை போல பாவித்து
நடத்து அந்த நிஷாவின் பெற்றோர்களுக்கு
முதுகிலே தட்டி பாராட்ட வேண்டிய ஒரு தட்டு...
இனியாவது இதை படித்த பிறகாவது மற்ற
பெற்றோர்கள் குழந்தைகளின் விருப்பத்திற்கு
ஏற்ப படிப்பும் ஒழுக்கமும் நம்மை விட்டு அகலாத
அன்பும் பாசமும் இருக்கும் வகையில் பள்ளியில் சேர்க்கும் எண்ணத்தை வளர்த்துக்கொள்ள தட்டி தட்டி எழுப்பும் உன்னதமான தட்டோ தட்டு...
பாராட்டுக்கள் ஜெயந்தி ரமணி அவர்களே
உங்களுக்கும் என்னுடைய இருகரத்தின் மூலமாக
தட்டோ தட்டு என்று தட்டி கை வலிக்கும் அளவிற்கு தட்டி எனது வாழ்த்தினையும் பாராட்டினையும்
இந்த தட்டிற்கு கொடுப்பதில் மகிழ்கின்றேன்...
என்ன சொல்றதுன்னு தெரியல தேவாதி ராஜன் சார்.
Deleteசும்மா படிச்சுட்டுப் போகாம வரிக்கு வரி அழகான பாராட்டுப் பத்திரம். உங்கள் கைகளால் கிடைத்த தட்டு நிச்சயம் என்னை தட்டி எழுப்பி விட்டது.
மிக்க நன்றி.
உண்மை தானே! குழந்தைகள் நிஜத்தை நேசிக்க, பெற்றோர்கல் நிழலை நேசிக்க என்ன செய்ய!
ReplyDeleteCHILDREN ARE BEST JUDGES என்று சொல்வார்கள். ஆனால் நாம் தான் அவர்களது JUDGEMENTஐக் கேட்கத் தயாராக இல்லை.
Deleteஇன்றைய காலக்கட்டத்தில் உள்ள கல்வியின் போக்கு, ஏழைக்கான கல்வி பணக்காரர்களுக்கான கல்வி என்ற பாகுபாடு, பெற்றோர்களின் மனநிலை, பொருளாதார நிலை போன்றவைகளை வெகு அழகாகக் கொண்டுவந்து காட்சிப்படுத்தியுள்ளீர்கள்.
ReplyDeleteஇவை எல்லாவறையும் விட ஏழைக்குழந்தையோ பணக்கார வீட்டுக் குழந்தையோ அவர்களுக்குள் இந்தச்சின்ன வயதில், மனதளவில் எந்தவொரு வித்யாசமும் இருபதில்லை. குழந்தைகள் எல்லோருமே குழந்தைகள் தான்.
நான் என்னுடைய “மழலைகள் உலகம் மகத்தானது” என்ற நகைச்சுவைக் கட்டுரையில் இதை நன்கு எடுத்துச்சொல்லியுள்ளேன்.
முடிந்தால் நேரம் இருக்கும் போது படித்துப் பாருங்கோ. கருத்தும் சொல்லுங்கோ.
இணைப்பு இதோ:
http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_4556.html
இப்போது நீண்ட இடைவெளை ......
பிறகு மீண்டும் நான் வந்தாலும் வருவேன்
பிரியமுள்ள
கோபு
கண்டிப்பா வாங்கோ. இன்னும் மிச்சம் இருக்கற பஞ்ச் டயலாக்குக் கெல்லாம் அழகா பதில் சொல்லணுமே.
Deleteஉங்க கட்டுரையையும் படிக்கறேன்.
நிரம்ப பிடிச்சிருக்கு அம்மா :-)
ReplyDeleteசிவா, அம்மான்னு சொல்லிட்டீங்க இல்ல.
Deleteஅம்மான்னா பிள்ளைங்களுக்கு பிடிச்சதைதானே கொடுக்கணும்.
பிடிச்சதுக்கு நன்றி.
//“அது வந்துப்பா. என் ஸ்கூல் நல்லாதான் இருக்கு. ஆனா ராணி ஸ்கூல்தாம்ப்பா பெஸ்ட்”
ReplyDelete“ஏண்டா செல்லம்”
“அவங்க ஸ்கூலுக்கு வெறும் தட்டு மட்டும் எடுத்துட்டுப் போனாப் போதுமாம்பா. லஞ்சுக்கு சூடா சாப்பாடு போடுவாங்களாம்”.//
இது .... இது... இதுதான் குழந்தைகள் உள்ளம்.
கள்ளங்கபடமற்ற மழலைச்சொல்.
கனக்கச்சிதமாக அதை வெளிப்படுத்தி எழுதியுள்ள தங்களின் கை விரலுக்கு ஓர் வைர மோதிரமே போடலாம் தான். ஒன்று மட்டும் போதாது. பத்து விரலுக்குமே போட வேண்டும். அதனால் அது இப்போது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது, என்னால்.
அருமையான நிகழ்வுகளை அழகாகக் கற்பனையில் கொண்டு வந்து இதுபோல ஆங்காங்கே எழுதுவதில் தான், உங்களின் தனிச்சிறப்பினை நான் உணர்கிறேன். மனமார்ந்த அன்பான இனிய பாராட்டுக்கள்.
>>>>>>>
கள்ளங்கபடமற்ற மழலைச்சொல். //
Deleteஆமாம். பள்ளியில் சேர்க்கும் முன் என் பெண்ணை ஸ்கூலுக்கு என்ன எடுத்துண்டு போவன்னு கேட்டா மழலையில் முதல்ல “சிச்சம்பாஸ்” என்று ராகத்தோட சொல்வாள். அதான் டிபன்பாக்ஸ்.
அப்புறம்தான் நோட், புக், பென்சில், ரப்பர் எல்லாம்.
சின்ன குழந்தைங்க அம்மாவை SMALL LUNCHக்கு என்ன வெச்சிருக்க, BIG LUNCHக்கு என்ன வெச்சிருக்கன்னு கேட்டு பார்த்திருக்கேன்.
சின்ன விஷயங்களக் கூட ரசிப்பேன். அதே மாதிரி எவ்வளவு நேரமானாலும் குழந்தைகளுக்கு சாதம் போடும்போது கதைகள் சொல்வேன். பையன் பெரியவனான பிறகும் பெண்ணுக்குக் கதை சொல்லும்போது உட்கார்ந்து கேட்பான்.
விரலெல்லாம் தயாரா காலியாதான் இருக்கு. உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான விஷயம். விரலெல்லாம் ஒல்லிதான். பருமன் கூட இல்லை.
//விரலெல்லாம் தயாரா காலியாதான் இருக்கு.//
Deleteஇதிலும் நகைச்சுவையா?
விரலெல்லாம் தயாரா காலியாத்தான் இருக்கா?
என் பர்ஸும் பேங்க் பாலன்ஸும் அதே போலக் காலியாக வேண்டுமா?
OK OK உனக்காக .... எல்லாம் உனக்காக! இந்த உயிரும் உடலும் ஒட்டியிருப்பது என் எழுத்துக்களின் தீவிர ரஸிகையான
திருமதி ஜயந்தி ரமணி அவர்களுக்காக என்று பாடட்டுமா?
அதற்கு முன்பு என் நகைச்சுவைக் கவிதையொன்றை அவசரமாகப்படியுங்கோ:
தலைப்பு: “உனக்கே உணக்காக”
இணைப்பு: http://gopu1949.blogspot.in/2011/03/blog-post_28.html
மறக்காமல் கருத்துச்சொல்லுங்கோ.
>>>>>>>>
//உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான விஷயம். விரலெல்லாம் ஒல்லிதான். பருமன் கூட இல்லை.//
Deleteஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !
அவசரப்படாதீங்கோ, அந்த ஒல்லி விரல்கள் குண்டாகட்டும்.
விரைவில் பணி ஓய்வுபெற்ற பின் கணினியே கதி என்று ஏ.ஸி. ரூமில் வந்து அமர்ந்து விடுவீர்கள் அல்லவா?
அப்போ என்னைப்போல உங்கள் உடம்பும், கை விரல்களும், தானகவே ஓர் மகிழ்ச்சியில் குண்டாகிடும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
அப்போது தான் நான் 10 விரலுக்கும் வைர மோதிரம் வாங்கித்தந்தால் பொருத்தமாக இருக்கும்.
உங்களுக்கும் அதுவே லாபகரமாக இருக்கும்.
இப்போதே உயில் வேண்டுமானாலும் எழுதித்தந்து விடுகிறேன்.
மேலும் ஒரு இரகசியமான விஷயம். ஒல்லியாக, ஒடிசலாக, வத்தக்காச்சியாக இருப்பவர்களும் அழகு தான். அதிர்ஷ்டக்காரிகள் தான்.
மோதமொழங்க இருப்பவர்களும் ஓர் அழகு தான்.
அவர்களும் கும்மென்று ஜம்மென்று இருக்கும் கம்பீரமான அழகுள்ளவர்கள் தான் என்பதைத்தான் என் “தேடி வந்த தேவதை” சிறுகதையில் தெளிவாக எழுதியிருக்கேனே!
அந்த என் “தேடி வந்த தேவதை” ஐத் தேடி வந்து படிக்கும் தேவதையாக என்று தான் மாறப்போகிறீர்களோ?
இணைப்பு இதோ:
http://gopu1949.blogspot.in/2011/12/blog-post_14.html
உங்களின் பழைய பதிவுகளை ஒவ்வொன்றாக படித்து ரஸித்து பின்னூட்டமும் கொடுத்து வருகிறேன். அது முடியும் தருவாயில் உள்ளது. இன்னும் ஒரு வாரத்திற்குள் முடித்தும் விடுவேன்.
அதுபோல என் பழைய பதிவுகள் அத்தனையிலும் உங்கள் கருத்துக்கள் இடம் பெற வேண்டும் என ஆசைப்படுகிறேன்.
நீங்களும் அது போல என் ஆசையை நிறைவேற்றி முடித்தவுடன் வைர மோதிரங்கள் உங்களைத் தேடி தானே வந்து சேரும். OK தானே? ;)))))
பிரியமுள்ள
கோபு
//மனைவி முறைப்பதையும் லட்சியம் செய்யாமல் கண்ணில் நீர் வர விழுந்து விழுந்து சிரித்தான் நிஷாவின் அப்பா. அப்பா ஏன் இப்படி சிரிக்கிறார் என்று புரியாமல் விழித்தாள் நிஷாக்குட்டி.//
ReplyDeleteராணியும் என்னுடனேயே என் பள்ளியிலேயே தான் படிக்கணும் என பிடிவாதம் பிடிக்காமல் விட்டாளே, நிஷாக்குட்டி என நினைத்துச் சிரித்திருப்பாரோ, நிஷாவின் அப்பா?
இவ்வாறு ஒரு கோணம் உள்ளது அல்லவா?
அழகாக முடித்துள்ளீர்கள்.
IN AND OUR CHENNAI யில் வெளியிடப்பட்டதும், அதுவும் நேற்றைய புத்தாண்டில் வெளியிடப்பட்டுள்ளதும், தங்களின் புகைப்படத்துடன் வெளியிடப்பட்டுள்ளதும், எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
மனமார்ந்த பாராட்டுக்கள், அன்பான வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.
பிரியமுள்ள
கோபு
அப்பா, அம்மா கஷ்டப்பட்டு ராத்திரியே போய் படுத்து அப்ளிகேஷன் வாங்கி ஒரு பெரிய தொகையை கட்டி (கூடவே டொனேஷன் தண்டம் அழுது) பெரிய ஸ்கூல்ல சேத்தா, இந்தக் குட்டிப் பொண்ணு சத்துணவு ஸ்கூல பெஸ்ட்ன்னு சொல்லறது.
Deleteபாராட்டுக்கு நன்றி.
கான்வெண்ட் மோகத்தை நக்கலடிக்கும் நல்லதொரு சிறுகதை! பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteநன்றிக்கு நன்றி. மனதில் தோன்றியதை எழுதினேன். அவ்வளவுதான். நக்கல் என்று நினைத்து எழுதவில்லை.
Deleteமேல் படிப்பு முடிஞ்சதும் வேலையும் வாங்கிக் குடுத்துடுவாங்களாம்”
ReplyDelete“அப்படியே கல்யாணமும் பண்ணி வெச்சு, பிரசவமும் பாத்துடுவாங்களாமா?”
அருமை. நிஜம் தான். எனது சென்னை நண்பர் 5 வருடங்களுக்கு முன்பே சொன்னார். விண்ணப்ப படிவம் வாங்க முந்தைய நாள் இரவு அவரது மைத்துனர் போய் வரிசையில் நின்றாராம். மறு நாள் காலை இவர் போய் relay ஐ தொடர்ந்தாராம்.
அருமையான கதை. நன்றி. வாழ்த்துகள்.
ரத்னவேல் சார், உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி.
Deleteஅப்ளிகேஷன் வாங்கறது கூட ரிலே ரேசாயிடுத்து.
அதே மாதிரி குழந்தைகளை பள்ளியில் சேர்த்து விட்டு மார்க், மார்க் என்று அம்மாக்கள் செய்யும் அலம்பல் தாங்க முடியாது.
jaya, very very minute descriptions.Feelings, expressed in an effective manner.Though,the "plot" is normal,the way in which it is presented..is your "punch".Congrats..
ReplyDeleteஉங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி.
Deleteஇந்தா நல்லா குடுத்தாங்க அப்ளிகேஷன். 6 மணி நேரம் காக்க வெச்சு. ஒரு அப்ளிகேஷன் 500 ரூபா. நான் காலேஜுக்குக் கூட அப்ளிகேஷனுக்கு இவ்ளோ செலவு பண்ணினது இல்ல. நீ என்ன படிச்சிருக்க, ஒன் பொண்டாட்டி என்ன படிச்சிருக்கா, லொட்டு, லொசுக்குன்னு நூறு கேள்வி கேட்டுட்டு குடுக்கறான் அப்ளிகேஷன்”
Deleteமிகவும் அருமையாக உள்ளது உங்கள் கதை !...இன்றைய நடைமுறை வாழ்க்கையை அப்படியே ததுரூபமாகப் படம்
பிடித்துப் போட்டுள்ளீர்கள் .வாழ்த்துக்கள் அம்மா மென்மேலும் தொடரட்டும் .....மிக்க நன்றி பகிர்வுக்கு .
உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி அம்பாளடியாள்.
Deleteஏன் எதற்கு எனத் தெரியாமல் அவர்கள் செய்கிறார்கள்
ReplyDeleteஅதைப் போல நாமும் செய்யவேண்டும் என்கிற
அதிகப் படியோரின் மன நிலையை விளக்கியவிதமும்
நமக்கு நேர் மாறாக இருக்கிற குழந்தைகளின் மன நிலையைச் சொல்லி
கதையை முடித்த விதமும் மிக மிக அருமை
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
வருகைக்கும், பாராட்டுக்கும் மிக்க நன்றி ரமணி சார்.
Deleteரொம்பவே அருமையான எதார்த்தத்தில் நடக்கும் கதை. ரஸித்துப் படித்தேன்.
ReplyDeleteகாமாட்சி அம்மா. இங்கு வருகை தந்ததற்கு மிக்க நன்றி.
Deleteஉங்கள் பாராட்டுக்கும் மிக்க நன்றி.
இதயம் நிறைந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!
ReplyDeleteநன்றி இராஜராஜேஸ்வரி, உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனி உளம் கனிந்த இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
Deleteசத்துணவு சத்தில்லா உணவாக அல்லவா இருக்கிறது நம் நாட்டில்..! எப்படியோ..
ReplyDeleteசிறுகதை நல்லா இருக்கு.
Mazhai.net உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி.
ReplyDeleteபசித்த குழந்தைக்கு ருசி தெரிவதில்லை.
ருசித்த குழந்தை மேலும் ருசி கேட்கிறது. வகை, வகையான உணவை ருசிக்க ஆசைப் படுகிறது.