சிறப்பான
மாதமான மார்கழியில் அமாவாசை திதியும் மூல நட்சத்திரமும் இணைந்திருக்கும் நாளில்
அஞ்சனையின் மகனாக அவதரித்தவனே ஆஞ்சநேயன். இந்த ஆண்டு இன்று அனுமன் ஜெயந்தியாக நாடெங்கும்
கொண்டாடப்படுகிறது.
ஆஞ்சநேயரை வழிபட்டால் சிவனையும் பெருமாளையும்
சேர்த்து வழிபட்ட புண்ணியம் கிடைக்கும். ஆஞ்சநேயரை வழிபடுவதால் நமக்கு சகல
மங்கலங்களும் உண்டாகும். நினைத்த காரியம் கைகூடும். துன்பம் விலகும்.
குடும்பத்தில் இன்பம் பெருகும். ஆஞ்சநேயரை ராம நாமத்தால் சேவிப்பதோடு, வடைமாலை
சாத்தி, வெற்றிலை மாலை அணிவித்து, வெண்ணெய் சாத்தி, ஆராதிக்க வேண்டும்.
வெற்றிலை மாலை ஏன்?
அசோகவனத்தில்
சீதை சிறை வைக்கப்பட்டிருந்த போது சீதையை தேடிப்போன அனுமன் சிம்சுகா மரத்தடியில்
வீற்றிருந்த சீதையை கண்டதும் ஸ்ரீ ராமனை பற்றி சொல்லி சீதையின் நம்பிக்கைக்கு
பாத்திரமானார். பொதுவாக யாரேனும் பெரியவர்களை நமஸ்கரித்தால் அவர்களை அட்சதை தூவி
ஆசீர்வதிப்பது வழக்கம். அனுமன் சேவித்த போது சீதைக்கு அட்சதையோ புஷ்பமோ
கிடைக்கவில்லை.
ஆனால்
அருகில் தடவிய போது வெற்றிலை இலைகள் கிடைக்க அதனையே அனுமன் தலை மீது தூவ அனுமனும்
அந்த வெற்றிலைகளை ஒரு நூலில் கோர்த்து சீதையிடம் கொடுத்து தனக்கு மாலையாக
அணிவிக்குமாறு கேட்டு அதை கழுத்தில் அணிந்ததாகவும் அதன் காரணமே அனுமனுக்கு
வெற்றிலை மாலை சாத்தப்படுவதாகவும் சொல்கிறார்கள்.
செந்தூரம்
ஏன்
நெற்றியில்
சிறியதளவு இட்டதற்கே இத்தனை பெரிய வெற்றி ராமனுக்கு என்ற போது உடல் முழுவதும், பூசினால்
ராமன் எவ்வளவு வெற்றி வாகை கூட முடியும் என எண்ணி உடல் முழுதும் ஆஞ்சநேயர்
செந்தூர் அணிந்து கொண்டதாகவும், இதுவே அனுமனுக்கு செந்தூரம் சாத்தும் வழக்கம்
வர காரணம் என்பதாகவும் வரலாறு.
வழிபாடு
ஆஞ்சநேயருக்கு
மிகவும் பிடித்தது ராம நாமம். அனுமன் ஜெயந்தியன்று `ராம ராம ராம' நாமம் சொல்வது விசேஷம். `ஓம்
ஆஞ்சநேயாய வித்மஹே, வாயுபுத்ராய தீமஹி, தந்தோ
ஹனுமன் ப்ரசோதயாத்' என்பது அனுமனுக்கான காயத்ரி மந்திரமாகும்.
இதையும் சொல்லி வழிபடலாம். அனுமன் ஜெயந்தியன்று ஆஞ்சநேயருக்கு துளசி மாலை
அணிவித்து, துளசி அர்ச்சனை செய்யலாம்.
வெண்ணெய் சாத்துவது ஏன்?
ராம
ராவண யுத்தம் நடந்தபோது ராமரையும் லட்சுமணரையும் தன் தோளில் சுமந்து கொண்டு
சென்றார் அனுமான். அப்போது ராவணன் சரமாரியாய் அம்பு தொடுக்க சக்திமிக்க அம்பால்
அவர் தாக்கப்பட்டார்.
அந்த காயத்திற்கு மருந்தாக தன் உடம்பில் வெண்ணெய்
பூசிக்கொண்டாராம். வெண்ணெய் சீக்கிரமாக உருகும் தன்மை உடையது. அந்த வெண்ணை
உருகுவதற்கு முன்பாகவே நாம் நினைத்த காரியம் நடந்து விடும் என்ற நம்பிக்கை. அதனால்
ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சார்த்தும் பழக்கம் உள்ளது.
நமது
உடல் தசையால் ஆனது. தசை வளர்ச்சிக்கு உளுந்து முக்கிய காரணமாகிறது. ஒல்லியாக
இருப்பவர்கள் இட்லி, தோசை, உளுந்து வடை சாப்பிட்டால் தசைப்பிடிப்பு
ஏற்படும். ஆனால், சதையாலான இந்த உடம்பு எதற்காவது பயன்படுமா எனவே, பயனற்ற
இந்த உடலை உனக்கே அர்ப்பணிக்கிறேன் ஆஞ்சநேயா என்ற தத்துவார்த்தத்தின்
அடிப்படையிலேயே உளுந்துவடை மாலை அணிவிக்கிறோம். அனுமானுடைய தாய் அஞ்சனாதேவி தன்
மகன் திடமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க உளுந்து வடை செய்து கொடுத்ததாக
ஐதீகம்.
சனியின்
தாக்கத்திலிருந்து தப்பிக்க
இலங்கைக்கு
பாலம் அமைக்கும் திருப்பணியில் அனுமன் தீவிரமாக இருந்தபோது வந்தார் சனி பகவான் `ஆஞ்சநேயா! உன்னை இரண்டரை மணி
நேரம் பிடிக்க வேண்டும். உன் உடலில் ஏதாவது ஒரு பகுதியை சொல். அங்கு இரண்டரை மணி
நேரம் இருந்துவிட்டு போய்விடுகிறேன்'' என்றார்.
``கடமையை செய்து கொண்டிருப்பவர்களை தொந்தரவு செய்தல் தவறு.
அதனால், தலையில் உட்கார்ந்து கொள்'' என்றார். சனி பகவானும் ஏறி அமர்ந்தார்.
கற்களையும் மலைகளையும் மாறி மாறி தலையில் ஏற்றினார் அனுமன். பாரம் தாங்காமல்
சனிபகவான் அலறினார். ``சொன்ன சொல் தவறக்கூடாது. இரண்டரை மணி நேரம் கழித்து தான்
இறங்க வேண்டும்'' என்றார் அனுமன்.
அதன்
பிறகே இறக்கிவிட்டார். `ராம பக்தர்களையும் ஆஞ்சநேய பக்தர்களையும் இனி தொடுவதில்லை' என்று
கூறிவிட்டு அகன்றார் சனீஸ்வரன். அனுமனுக்கு துளசி சாத்தி வழிபட்டால், சனீஸ்வரனின்
பாதிப்புகளில் இருந்து விடுபடலாம்.
மாருதியை வணங்கி மகத்தான வாழ்வு பெறுங்கள்.
அனைத்து தகவல்களும் அறியாத அரிய
ReplyDeleteஅருமையான தகவல்கள்
அனுமந் ஜெயந்தி சிறப்புப் பதிவு
வெகு வெகு சிறப்பு
பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய பொங்கல் திரு நாள் நல்வாழ்த்துக்கள்
நன்றி திரு ரமணி சார். உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் என் மனமார்ந்த இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
Deleteஎழில் உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் என் மனமார்ந்த இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஸ்ரீ ஹனுமாரைப்பற்றியும், ஹனுமத் ஜயந்தி பற்றியும் அழகான விரிவானதோர் பதிவு.
ReplyDeleteஇவை பற்றியெல்லாம் எவ்வளவோ முறை ஆங்காங்கே வேறு சில பதிவுகளில் படித்து கேள்விப்பட்டிருந்தும் திருமதி ஜெயந்தி ரமணி மூலமாக ஹனுமத் ஜயந்தியைப்பற்றி தெரிந்து கொண்டது தான் இதில் உள்ள தனிச்சிறப்பு.
பாராட்டுக்கள், வாழ்த்துகள், பகிர்வுக்கு நன்றிகள்.
பிரியமுள்ள
கோபு
மாருதியை வணங்கி மகத்தான வாழ்வு பெறுங்கள்.
ReplyDeleteசிறப்பான பகிர்வுகள்..பாராட்டுக்கள்