சாலையோரத்தில் ஒரு காகம்
எலியைத் துரத்தும் போதும்,
சுவற்றுப் பல்லி விட்டில் பூச்சியைப்
பிடித்து விழுங்கும் போதும்
தேசிய புவியியல் தொலைக்காட்சியில்
மானை புலி துரத்துவதையும்,
வரிக்குதிரையை சிங்கம் விரட்டிப்
பிடிப்பதையும்,
மலைப்பாம்பு முழுதாய் ஒரு ஆட்டைப்
பிடித்து விழுங்குவதையும்,
மீன்களைப் பறவைகள் கொத்திச்
செல்வதையும் பார்க்கும் போதும்,
கண்ணெதிரே ஓர் உயிர் அடங்கி
உடலை விட்டுப் பிரியும் போது,
இது உணவு சுழற்சி
இதுதான் இயற்கையின் நியதி என்று
அறிவு ஏற்றுக் கொண்டாலும்,
உணர்வு ஏற்றுக் கொள்ள மறுக்கிறதே
மனம் பதை பதைக்கிறதே.
ஐயோ இதெல்லாம் பாத்து சகிச்சுக்கவே முடியாது. சில பேரு இந்தக்காட்சிகளை ஆர்வமாக ரசிக்கும் போது பத்திகிட்டு வரும்.
ReplyDeleteஆமாம் லட்சுமி அம்மா. அதுவும் முன்பெல்லாம் கருப்பு வெள்ளை, இப்பொழுது வண்ணத் தொலைக்காட்சி. எப்படிதான் இதெல்லாம் சகிக்க முடிகிறதோ
Deleteஇங்குதான் மனிதம் வெளிப்படுகிறது! அருமை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteமிக்க நன்றி சுரேஷ்
Deleteஉண்மைதான்!
ReplyDeleteநன்றி.
Deleteமிகவும் அழகாகச் சொல்லியுள்ளீர்கள்.
ReplyDelete//அறிவு ஏற்றுக் கொண்டாலும்,
உணர்வு ஏற்றுக் கொள்ள மறுக்கிறதே
மனம் பதை பதைக்கிறதே.//
எல்லாமே அருமையான வரிகள். பாராட்டுக்கள்.
உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி கோபு சார்
Delete//கண்ணெதிரே ஓர் உயிர் அடங்கி
ReplyDeleteஉடலை விட்டுப் பிரியும் போது,
இது உணவு சுழற்சி
இதுதான் இயற்கையின் நியதி என்று//
என்னாலும் ஏற்றுக்கொள்ள முடிவது இல்லை.
இதில் என் மனம் பதைபதைத்ததை நான் என் உண்மை அனுபவமாக ”பிரார்த்தனை” என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளேன்.
http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_874.html
நேரம் கிடைத்தால் படித்துவிட்டு கருத்துச் சொல்லுங்கோ.
அன்புடன்
vgk
உங்கள் ‘பிரார்த்தனை’ பதிவைப் படித்து கருத்தும் சொல்லி விட்டேன்.
DeleteJAYANTHI RAMANI 30 December 2012 23:49
Deleteஉங்கள் ‘பிரார்த்தனை’ பதிவைப் படித்து கருத்தும் சொல்லி விட்டேன்.//
நன்றியோ நன்றிகள்.
பிரியமுள்ள
கோபு
இதற்கே மனம் ஒப்பவில்லையே சக உயிரைக் துன்புறுத்தும் மனிதனை என்ன செய்வது....
ReplyDeleteஉண்மைதான் எழில்.
Deleteஎன் மனைவியாலும் இதை சகித்துக்கொள்ள முடிவதில்லை.காட்சியை மாற்றிவிடுவார்கள்.ஆனால், நான் வேறு ரகம் - சில படங்களைப் பார்க்கும் பொழுதெல்லாம் அழுவேன்.
ReplyDeleteBalendran
Deleteஇந்த அழுகையைத் தவிர்க்கத்தான் அவங்க காட்சியை மாற்றி விடுகிறார்கள். ஆக மொத்தம் உங்கள் இருவருக்குமே இது போன்ற காட்சிகள் மனதை நெருடுகின்றன என்பது தெரிகிறது.