Monday, 17 December 2012

மாயன் காலண்டராவது மச்சான் காலண்டராவது


மாயன் காலண்டராவது
மச்சான் காலண்டராவது

22-12-2012 அன்று காலை
வழக்கம் போல்
அலாரம் அடித்த்தும்
அதன் தலையில் தட்டி
பத்து நிமிடம்
செல்லத்தூக்கம் போட்டு எழுந்து
                         
வாசல் தெளித்து
மார்கழி மாதம் என்பதால்
தம்மாத்தூண்டு கோலம் போடாமல்
கொஞ்சம் பெரிய கோலம் போட்டு

பரபரவென காபி போட்டு, சமைத்து,
ஆபீசுக்கு மணியாச்சு, மணியாச்சு
என்று பாட்டு பாடி

ரயில் நிலைய
படி ஏறி வரும் போதே
ஒரு ரயிலை விட்டு விட்டு,
நான் விட்ட ரயில்
காலியாகப் போச்சே என்று புலம்பி
அடுத்த ரயில் வர நேரமாக
ரயில்வேயைத் திட்டி

எக்மோரில் ஆள் சேர்த்து
ஆட்டோ பிடித்து
அலுவலகம் சென்று

‘ஹலோ, குட்மார்னிங்என்று
தொலைபேசியில் பதிலளித்து

நடுவில் வீட்டிலிருந்து,
வாரம் ஒரு நாள்
எதுலயாவது உப்பு போட மறந்துடுவயே,
இன்னிக்கு ரசத்துல உப்பு இல்ல,
என்று திட்டு வாங்கி

மாலை பழையபடி
ஆட்டோ, ரயில், ஆட்டோ
என்று வீடு வந்து சேர்ந்து

மீண்டும் சமையலறையில்
நுழைந்து வேலை முடித்து,
சூப்பர் சிங்கர் பார்த்துக்கொண்டே சாப்பிட்டு

நடுவில் என் ஸ்டேட்டஸுக்கு
யார், யார் லைக், கமெண்ட்
போட்டிருக்காங்கன்னு பார்த்து

நல்ல நண்பர்களின்
நல்ல கருத்துக்களுக்கு
லைக்கும், கமெண்டும் போட்டு

படுக்கப்போகும்போது
பேத்தி எங்கள் படுக்கையறையில்
வந்து கை, கால் உதறி விளையாடி,
ஆ, ஊ என்று பேசி, கண் உருட்டி,
விட்டத்தைப் பார்த்து               
வண்ணத் தொலைக்காட்சி
பார்ப்பது போல் ரசிப்பதை
ரசித்து

பனிரெண்டு மணிக்கு மேல்
மறுநாள் எழ அலாரம் வைத்துவிட்டு
தூங்கச் செல்வேன்.

மாயன் காலண்டராவது
மச்சான் காலண்டராவது
யார் ஜம்பமும்
இங்கு பலிக்காது..

34 comments:

  1. Replies
    1. மிக்க நன்றி Ranioye

      Delete
    2. //மாயன் காலண்டராவது
      மச்சான் காலண்டராவது
      யார் ஜம்பமும்
      இங்கு பலிக்காது..//

      100% உண்மை.

      காலண்டராவது கத்திரிக்காயாவது!

      உலகம் ஒருபோதும் அழியாது.

      கேவலம் .... ஒரு சிறு கொசுவையே அழிக்கவே நம்மால் முற்றிலும் முடியவில்லை.

      உலகத்தை யாரால் அழிக்க முடியும்?

      >> தொடர்ந்து மீண்டும் நேரம் கிடைக்கும்போது வருவேன் >>

      Delete
    3. மிக்க நன்றி கோபால கிருஷ்ணன் சார்

      Delete
    4. விடியற்காலம் விழித்தெழுவது முதல், நள்ளிரவு நிம்மதியாகத் தலையைச் சாய்க்கும் வரை, குடும்பப் பெண்களுக்கே உள்ள பரபரப்பான சூழ்நிலைகளை வெகு அழகாக வரிக்குவரி மிகவும் யதர்ர்த்தமாக எடுத்துக் கூறியுள்ளது அழகோ அழகு.

      இத்தகையப் பொறுப்புள்ள பத்தினிப்பெண்கள் புண்ணிய பூமியாம் நம் பாரத நாட்டில் இருக்கும் வரை .... உலகம் அழியவே அழியாது.

      அதர்மத்தால் ஒருவேளை உலகமே, ஆங்காக்கே சிற்சில இடங்களில் சிதறி சீரழிந்துபோனாலும், தர்மத்தால் நம் பாரதம் காக்கப்படும்.

      கவலையே வேண்டாம்.

      மிகவும் அற்புதமான படைப்பு. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

      அன்புடன்
      VGK

      Delete
  2. Replies
    1. மிக்க நன்றி லட்சுமி அம்மா

      Delete
  3. கோபால கிருஷ்ணன் சார். உங்கள் பாராட்டுக்கள் என்னை வேலையை விட்டு விட்டு முழு நேர எழுத்தாளராகி விடலாமா என்று எண்ண வைக்கிறது.

    மிக்க நன்றி.

    ReplyDelete
    Replies
    1. //JAYANTHI RAMANI 18 December 2012 02:51
      கோபால கிருஷ்ணன் சார். உங்கள் பாராட்டுக்கள் என்னை வேலையை விட்டு விட்டு முழு நேர எழுத்தாளராகி விடலாமா என்று எண்ண வைக்கிறது.

      மிக்க நன்றி.//

      எனக்காக தயவுசெய்து அதுபோலெல்லாம் அவசரப்பட்டு செய்து விடாதீர்கள், மேடம். ;)))))

      அவ்வப்போது எழுதுங்கள் போதும். அழகாக எழுதுகிறீர்கள்.

      அதிகம் அடிக்கடி வெளியிட்டு சிரமப்படாதீங்கோ. தோன்றுவதை எல்லாம் தோன்றும் போது மறக்காமல் எழுதி சேமித்து வைத்துக்கொள்ளுங்கள். பிறகு வாரம் ஒன்று வீதம் வெளியிடுங்கள்.

      அன்பான வாழ்த்துகள். VGK

      Delete
    2. உங்கள் ஆலோசனைக்கு நன்றி கோபாலகிருஷ்ணன் சார்.

      சார் உங்கள் பின்னூட்டங்களில் இருந்து நான் புரிந்து கொண்டது’

      “ப்ளாக் ஆரம்பித்த புதிதில் எல்லாருடைய ப்ளாகுகளைப் போல் அலங்காரமாக என்னுடைய ப்ளாகை ஆக்க நேரமும் இல்லை, தெரியவும் இல்லையே என்று வருத்தப்படுவேன். ஆனால் இப்பொழுது புரிந்து கொண்டது அலங்காரத்தைவிட ஆக்கபூர்வமான விஷயம்தான் தேவை என்று”.

      அதை உணர்த்தியதற்கு நன்றி

      Delete
  4. அருமை அம்மா! தினசரி வாழ்க்கையில் ஒரு துரும்பு அசைவதைக்கூட இது நிறுத்தாது என்று எவ்வளவு அழகாகச் சொல்லிவிட்டீர்கள்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சுபாஷ் சார்.

      Delete
  5. அடிமுட்டாள்களுக்குக் கொடுக்கப்பட்ட அறை!

    ReplyDelete
  6. எழுதுவது என்பது எல்லோருக்கும் வந்துவிடாது , உங்களால் சிறப்பாக எழுத முடியும் என்றால், நீங்கள் படித்ததில் சிறந்தவயையும், அனுபவத்தில் சிறந்தவையும்,மற்றும் உங்களுக்கே உள்ள கருத்தையும் கலந்து எழுதும் போது நீங்களும் ஒரு சிறந்த எழுத்தாளராக உருவாகலாம்....அதற்காக இருக்கும் வேலையை விட வேண்டியதில்லை (உதாரணம் எழுத்தாளர் சுஜாதா,வேலையில் இருந்துகொண்டே அவர் சாதித்ததை குறைவாக நினைக்க முடியுமா?)... வாழ்த்துகள்.....

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி பாண்டியன் சார்.
      சுஜாதா ஒரு ஜீனியஸ். அவரோட யாரையும் ஒப்பிட முடியுமா?
      இன்னும் ஒன்றரை வருடம் பணி மீதி உள்ளது. கண்டிப்பாக அதை முடித்து விட்டே ஓய்வு பெறுவேன். இன்னும் நிறைய அனுபவங்களும் கிடைக்கும் அல்லவா?
      உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது என்னுடைய மத்த பதிவுகளையும் படித்து உங்கள் மேலான யோசனைகளை சொல்லுங்கள்.

      Delete
  7. உண்மைதான் தாங்கள் சொல்வது...
    மாயன் என்ற அந்த இனத்திற்கு பாவம்
    நேரமில்லை 21 டிசம்பருக்கு பிறகு உள்ளதை
    சொல்வதற்கு... நேரமில்லை என்பதைவிட
    சொல்லத்தெரியவில்லை என்றுகூட சொல்லலாம்.
    ஒருவரின் அறியாமையை நாம் அப்படியே
    வேதவாக்காக ஏற்றுக்கொண்டு பயந்து கொண்டோ
    இல்லை அதை அப்படியே நம்புவதோ நம்முடைய
    அறியாமையையும் மூடத்தனத்தையும் அப்பட்டமாக
    வெளிச்சம் போட்டு காட்டுவதாக இருக்கிறது...

    அதற்கெல்லாம் அழகாக அமைதியாக ஜெயந்தி ரமணி
    அவர்களே தாங்கள் 22- ந்தேதி வழக்கத்தை விட உற்சாகமாக
    எழுந்து தினமும் வாடிக்கையாக நடக்கும் நிகழ்வுகளை
    தெளிவாக தங்களின் இயல்பான வார்த்தைகளின் மூலம்
    சொல்லி இருக்கும் விதம் பாராட்டுதலுக்கு உரியது...

    இதை அந்த மாயன் கோஷ்டி பார்த்திருந்தால் இந்நேரம்
    22 -க்கு பிறகு உள்ள காலண்டரை தயார்
    செய்வதில் மும்மரமாக இயங்கி இந்நேரம் அதை
    வெளியிட்டிருப்பார்கள்... பார்ப்போம் இன்னும் ஓரிரு
    நாட்களில் வருவதாக அரசல் புரசலாக என் காதுக்கு
    எட்டியது.. பொறுத்திருந்து தான் பார்ப்போமே அந்த
    மாயன் காலண்டர் எப்படித்தான் இருக்குமென்று...

    இப்படியும் எழுதி எல்லோருக்கும் ஒரு விழிப்புணர்வை
    சொல்லிய உங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்...
    இன்னும் இதுபோன்ற எண்ணற்ற பணிகளை தாங்கள்
    சேவையாக நம் மக்களுக்கு செய்யவேண்டியிருக்கும்...
    அதற்கு முன்னதாகவே என்னுடைய வாழ்த்துக்களை
    இப்போதே தெரிவித்துக்கொள்கிறேன்.. தாயாராக இருங்கள்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தேவாதி ராஜன் சார்.

      Delete
  8. ஒரு சிறந்த எழுத்து என்பதற்கு என்ன வரைவிலக்கணம் என்று ஒரு தடைவை கண்ணதாசனைக் கேட்டிருந்தார்கள்..,அதற்கு அவர், அனுபவத்தின் பதிவு என்று பதிலளித்திருந்தாராம்..அதையும், மற்றவர் புரியும் வண்ணம்..என்றும் குறிப்பிட்டிருந்தாராம்..
    உங்கள் எழுத்தும் எனக்கு அதையே நினைவூட்டுகின்றன.

    ReplyDelete
    Replies
    1. கண்ணதாசன் எங்கே, நான் எங்கே. நீங்கள் இப்படி சொல்லும் பொழுது என் எழுத்துக்களை இன்னும் செதுக்கி சீர் படுத்த வேண்டும் என்றுதான் தோன்றுகிறது.

      மிக்க நன்றி பாலேந்திரன் சார்.

      Delete
  9. யதார்த்தமான உங்கள் எழுத்து எனக்குப் பிடித்திருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி பாலேந்திரன் சார்

      Delete
    2. பாலேந்திரன் சார். உங்களுக்கு நேரம் கிடைக்கும் பொழுது என்னுடைய மற்ற பதிவுகள், சிறுகதைகள், கவிதைகளைப் படித்து உங்கள் விமர்சனங்களை அளியுங்கள். அது என்னை மேன் மேலும் செதுக்கிக் கொள்ள உதவும்.
      மிக்க நன்றி.

      Delete
  10. அருமையாக சொன்னீர்கள்.... மாயன் காலண்டராவது மச்சான் காலண்டராவது.. அழகா எழுதி இருக்கீங்க...

    ReplyDelete
  11. மிக்க நன்றி பிரியா

    ReplyDelete
  12. அசத்தலா எழுதியிருக்கீங்க..

    எந்தக் காலண்டர் வந்தாலும் நம் வண்டி எப்போதும்போல்தான் ஓடப்போகிறது இல்லையா :-))

    ReplyDelete
  13. மிக்க நன்றி அமைதிச்சாரல்.

    ReplyDelete
  14. மிக மிக அருமை
    நம்முடைய அன்றாட பணிச் சூழலில்
    மயன் நினைப்பாவது மண்ணாங்கட்டி நினைப்பாவது
    என்கிற நினைப்பை என்னுள்ளும் விதைத்துப் போன கவிதை
    மிக மிக அருமை
    சொல்லிச் சென்ற விதம் மனம் கவர்ந்தது
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. இன்றைய நாட்களில் அவ்வப்பொழுது ஏதாவது ஒரு சிறிய விஷயத்தை மீடியாக்கள் ஊதி பெரிசாக்கி விடுகின்றன.

      நம் கடன் பணி செய்து கிடப்பதே என்பதை மக்கள் புரிந்து கொண்டால் போதும் அல்லவா?

      மிக்க நன்றி ரமணி சார்

      Delete
  15. மாயன் காலண்டராவது
    மச்சான் காலண்டராவது
    யார் ஜம்பமும்
    இங்கு பலிக்காது..

    பலிக்காமல் போய் நிம்மதி தந்ததே ..பரபரப்பான பகிர்வு ..பாராட்டுக்கள்..

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கு மிக்க நன்றி ராஜி.

      Delete
  16. // மாயன் காலண்டராவது
    மச்சான் காலண்டராவது //

    ஹா... ஹா...

    அருமை அருமை

    தொடர வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கு மிக்க நன்றி நிஜாம்

      Delete