Thursday 29 November 2012

ஐந்தறிவா, ஆறறிவா?





’புதிய தலைமுறை’ 29 நவம்பர் 2012 இதழில் ‘வேலைக்குச் செல்லும் பெண்களின் டைரி’ என்ற தலைப்பில் வெளிவந்த என் கட்டுரை.

புதிய தலைமுறை பத்திரிகைக்கு என் மனமார்ந்த நன்றி.
உங்களுக்கு படிக்க சிரமமாக இருக்கும் என்பதால் மீண்டும் கட்டுரையை இங்கு பதிகிறேன்.






ஒரு நாள் காலையில் பரங்கி மலை ரயில் நிலையத்தில் வழக்கம் போல் அலுவலகம் செல்ல மின்சார ரயிலுக்காக காத்துக்கொண்டிருந்த போது, எதேச்சையாக நிமிர்ந்து மேலே பார்த்தேன். நடைமேடையின் மேற் கூரையில் உள்ள கம்பங்களுக்கு இடையே அழகான ஒரு கூடு.
காசு வேண்டாம், பணம் வேண்டாம், வீடு கட்ட அனுமதி வாங்க வேண்டாம், வங்கிக் கடன் வேண்டாம், செங்கல் வேண்டாம், சிமென்ட் வேண்டாம், மனைவி கிட்ட இருந்து “போயும் போயும் இங்க வந்து வீடு கட்டி இருக்கீங்களே, ரயில் சத்தத்தில தூங்க முடியலையேன்னு” திட்டும் வாங்க வேண்டாம். (வீட்டைக் கட்டினதே அம்மா காக்காதானேன்னு சொல்லறீங்களா, இருக்கலாம்). கொஞ்சம் துடைப்பக் குச்சிகள், தேங்காய் நார், கம்பிகள் இத்யாதி இத்யாதி - அழகான வீடு தயாராகிவிட்டது. வீட்டுக்குள் ரொம்பவும் மெத்த்தென்று இருக்குமோ. அம்மாவோட பழைய பருத்திப் புடைவையில் நம்ப வீட்டுக் குழந்தைகள் படுத்துத் தூங்குமே அந்த மாதிரி. எனக்கு ஆசைதான் கூட்டுக்குள்ள எட்டி பார்க்க. அவ்வளவு உசரத்தில நான் எங்க ஏறி பார்க்கறது. தினமும் காலையிலும், மாலையிலும் கூட்டை கவனித்துக் கொண்டிருந்தேன். சிறிது நாட்களில் நான்கு ரோஸ் நிற அலகுகள் மட்டும் வெளியே தெரிய ஆரம்பித்த்ன. அது என்ன அதிசயம். இந்தக் குஞ்சுகளுக்கு எப்போதுமே அகோரப் பசியாக இருக்குமா என்ன? ஆ, ஆ என்று திறந்த வாய் திறந்த படியே எனக்கு, எனக்கு என்று பறப்பது போல் இருந்தது. ஒருவேளை அம்மா பறந்து பறந்து கொண்டு வந்து ஊட்டும் தீனி போதவில்லையோ!. பின்ன என்ன நாலு வாய் (வயிறு) அல்லவா? அம்மா காக்காவும் நான் பார்க்கும் போதெல்லாம் சளைக்காமல் பறந்து போவதும் எதையோ மூக்கில் கொண்டு வந்து ஊட்டுவதுமாகவே இருந்தது.
சின்ன வயதில் அத்தையும் பாட்டியும் கல்சட்டியில் சாதம் பிசைந்து வைத்துக்கொண்டு நாம எல்லாம் சுற்றி உட்கார்ந்து கொண்டு போட்டி போட்டுக் கொண்டு கையில் வாங்கி சாப்பிடுவோமே அதுதான் எனக்கு ஞாபகத்துக்கு வந்தது.
இன்னும் கொஞ்ச நாட்களில் நாலு முழு காக்கைக் குஞ்சுகளும் வெளியில் தெரிய ஆரம்பித்தன. ஆனால் அலகு மட்டும் இன்னும் ரோஸ் நிறத்தில்தான் இருந்தன. அது என்னவோ மந்திரத்திற்குக் கட்டுப் பட்டது போலவோ, அம்மா காக்கையின் சொல்லுக்குக் கட்டுப்பட்ட்து போலவோ என்னவோ நான்கு காக்கைக் குஞ்சுகளும் கூட்டிற்குள்ளேயே இருந்தன.
அதில் மூன்று காக்கைக் குஞ்சுகள் அடுத்த சில நாட்களில் கொஞ்சம் கூட்டைவிட்டு வெளியே தத்தித் த்த்தி வந்திருந்தன. ஒன்று மட்டும் கூட்டிற்குள்ளேயே இருந்தது. இன்னும் இரண்டு நாட்களில் நான்கு குஞ்சுகளும் கொஞ்சம் கொஞ்சமாக தத்தித் தத்தி மேற் கூரையில் உள்ள கம்பங்களில் எல்லை மீறாமல், எல்லை தாண்டாமல் உட்கார ஆரம்பித்தன.
அதன் பிறகு இரண்டு நாள் அலுவலக விடுமுறை முடிந்து, அன்று பிளாட்பாரத்துக்கு வந்து, ஆவலாக மேற்கூரையில் காக்கைக் கூட்டைப் பார்த்தேன். அது வெறுமையாக இருந்த்து. அது சற்றே ஏமாற்றமாக இருந்தாலும் மனசுக்குள் இனம் புரியாத சந்தோஷமும் இருக்கவே செய்த்து. காக்கைகளுக்கு இறக்கை முளைத்துப் பறந்து வெளியில் செல்லத் தொடங்கியிருக்க வேண்டும். காக்கைகள் பறக்கும் பக்குவம் வரும்வரை மாய்ந்து மாய்ந்து இரை கொண்டு வந்தளித்த தாய்க்காகத்தின் முகம் நினைவில் வர நெகிழ்ச்சியாக இருந்தது.
யாரப்பா சொன்னது பறவைகளுக்கும், விலங்குகளுக்கும் ஐந்தறிவென்று. எனக்கென்னவோ இவைகளுக்கு ஆறுக்கும் மேல் அறிவிருக்கும் என்று தோன்றுகிறது. ஏன்னா பெத்த குழந்தையை குப்பைத் தொட்டியிலும், அரசுத் தொட்டிலிலும், மருத்துவமனை வளாகத்திலும் விட்டுச் செல்லும் ஆறறிவு படைத்த சில பெண்களை விடவும் இந்த்த் தாய்ப்பறவைகள் உயர்ந்தவைதானே!
 

10 comments:

  1. இங்க படிக்க ரொம்ப ஈசியா இருக்கு கதையும் ரொம்ப நல்லா இருக்கு.

    யாரப்பா சொன்னது பறவைகளுக்கும், விலங்குகளுக்கும் ஐந்தறிவென்று. எனக்கென்னவோ இவைகளுக்கு ஆறுக்கும் மேல் அறிவிருக்கும் என்று தோன்றுகிறது. ஏன்னா பெத்த குழந்தையை குப்பைத் தொட்டியிலும், அரசுத் தொட்டிலிலும், மருத்துவமனை வளாகத்திலும் விட்டுச் செல்லும் ஆறறிவு படைத்த சில பெண்களை விடவும் இந்த்த் தாய்ப்பறவைகள் உயர்ந்தவைதானே!

    ரொம்ப சரியா சொன்னீங்க.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி லட்சுமி அம்மா.

      Delete
    2. 4] //அதில் மூன்று காக்கைக் குஞ்சுகள் அடுத்த சில நாட்களில் கொஞ்சம் கூட்டைவிட்டு வெளியே தத்தித் த்த்தி வந்திருந்தன. ஒன்று மட்டும் கூட்டிற்குள்ளேயே இருந்தது. இன்னும் இரண்டு நாட்களில் நான்கு குஞ்சுகளும் கொஞ்சம் கொஞ்சமாக தத்தித் தத்தி மேற் கூரையில் உள்ள கம்பங்களில் எல்லை மீறாமல், எல்லை தாண்டாமல் உட்கார ஆரம்பித்தன.//

      மிகச்சிறப்பாக சிரத்தையாக ஈடுபாட்டுடன் கூடிய கவனிப்பு ;)

      5] //அது வெறுமையாக இருந்த்து. அது சற்றே ஏமாற்றமாக இருந்தாலும் மனசுக்குள் இனம் புரியாத சந்தோஷமும் இருக்கவே செய்த்து. காக்கைகளுக்கு இறக்கை முளைத்துப் பறந்து வெளியில் செல்லத் தொடங்கியிருக்க வேண்டும். காக்கைகள் பறக்கும் பக்குவம் வரும்வரை மாய்ந்து மாய்ந்து இரை கொண்டு வந்தளித்த தாய்க்காகத்தின் முகம் நினைவில் வர நெகிழ்ச்சியாக இருந்தது.//

      மறக்க மனம் கூடுதில்லையே !
      http://gopu1949.blogspot.in/2011/06/1-of-4_19.html
      மறக்க மனம் கூடுதில்லையே பகுதி 1 / 4

      http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_2.html

      தொடரும்>>>>>>

      Delete
    3. 6] //யாரப்பா சொன்னது பறவைகளுக்கும், விலங்குகளுக்கும் ஐந்தறிவென்று. எனக்கென்னவோ இவைகளுக்கு ஆறுக்கும் மேல் அறிவிருக்கும் என்று தோன்றுகிறது.//

      நிச்சயமாக மனிதர்களைவிட மிகச்சிறந்த அறிவாளிகள் தான் அவையெல்லாம். சந்தேகமே இல்லை.

      7] //ஏன்னா பெத்த குழந்தையை குப்பைத் தொட்டியிலும், அரசுத் தொட்டிலிலும், மருத்துவமனை வளாகத்திலும் விட்டுச் செல்லும் ஆறறிவு படைத்த சில பெண்களை விடவும் இந்த்த் தாய்ப்பறவைகள் உயர்ந்தவைதானே! //

      இந்த இடத்தினில் என் கண்கள் கலங்குது. அருமையான உவமையை அழகாகச் சொல்லியுள்ளீர்கள்.

      தொடரும்>>>>>>>

      Delete
    4. மிகச்சிறப்பான படைப்பினை அளித்துள்ள தங்களுக்கு என் மனமார்ந்த இனிய நல்வாழ்த்துகள். பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள். படித்ததும் மனதில் இனம் புரியாத ஓர் சந்தோஷம் ஏற்பட்டது, மேடம்.

      புதிய தலைமுறை என்ற பத்திரிகையில் தங்கள் படைப்பு வெளியானதற்கு என் மனமார்ந்த அன்பான பாராட்டுக்கள்.

      தாங்கள் எழுத்துலகில் மேலும் மேலும் ஜொலிக்க என் அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

      அன்புள்ள VGK

      Delete
  2. வெகு அழகான கட்டுரை. மிகவும் ரஸித்து இரண்டுமுறை படித்து மகிழ்ந்தேன். எவ்வளவு தூரம் கவனித்து லயித்துப்போய் எழுதியுள்ளீர்கள். ஒவ்வொன்றையும் அற்புதமாகவே சொல்லியுள்ளீர்கள், மேடம்.

    தொடரும்>>>>>>

    ReplyDelete
  3. நான் மிகவும் ரஸித்த இடங்களில் சில:

    1] //காசு வேண்டாம், பணம் வேண்டாம், வீடு கட்ட அனுமதி வாங்க வேண்டாம், வங்கிக் கடன் வேண்டாம், செங்கல் வேண்டாம், சிமென்ட் வேண்டாம், மனைவி கிட்ட இருந்து “போயும் போயும் இங்க வந்து வீடு கட்டி இருக்கீங்களே, ரயில் சத்தத்தில தூங்க முடியலையேன்னு” திட்டும் வாங்க வேண்டாம்.//

    மனித வாழ்வின் யதார்த்தம் ;)))))

    2] // வீட்டுக்குள் ரொம்பவும் மெத்த்தென்று இருக்குமோ. அம்மாவோட பழைய பருத்திப் புடைவையில் நம்ப வீட்டுக் குழந்தைகள் படுத்துத் தூங்குமே அந்த மாதிரி. எனக்கு ஆசைதான் கூட்டுக்குள்ள எட்டி பார்க்க. அவ்வளவு உசரத்தில நான் எங்க ஏறி பார்க்கறது.//

    நல்ல மிகச்சிறந்த உதாரணம் ;)))))

    3] // சின்ன வயதில் அத்தையும் பாட்டியும் கல்சட்டியில் சாதம் பிசைந்து வைத்துக்கொண்டு நாம எல்லாம் சுற்றி உட்கார்ந்து கொண்டு போட்டி போட்டுக் கொண்டு கையில் வாங்கி சாப்பிடுவோமே அதுதான் எனக்கு ஞாபகத்துக்கு வந்தது.//

    அருமையான நினைவலைகள் ;)))))

    தொடரும்>>>>>>>>

    ReplyDelete
    Replies
    1. கோபால கிருஷ்ணன் சார். அனந்த கோடி நன்றிகள்.
      என்னுடைய எழுத்தை விட உங்கள் ரசனை அருமை.
      நேரம், வலைத்தள அறிவு இவை இரண்டும் குறைவாக இருப்பதால் என் ப்ளாகை இன்னும் அழகாக மெருகூட்ட முடியவில்லை.
      உங்கள் விமர்சனம் எனக்கு அளவிலாத மகிழ்ச்சியைக் கொடுத்து விட்டது.
      மிக்க நன்றி கோபால கிருஷ்ணன் சார்.

      Delete
  4. உங்கள் டைரி குறிப்பு வித்தியாசமாக நன்றாக இருக்கிறது ஜெயந்தி.
    பாராட்டுக்கள்!
    திரு வைகோ அவர்கள் எல்லாவற்றையும் எழுதி விட்டார். அவரது பின்னூட்டம் நம் கட்டுரையை தூக்கி சாப்பிட்டு விடும்.
    அவரது பின்னூட்டமே பதிவர்களுக்கு தெம்பூட்டும் டானிக்!

    http://ranjaninarayanan.wordpress.com
    http://pullikkolam.wordpress.com
    http://thiruvarangaththilirunthu.blogspot.in/

    ReplyDelete
  5. Ranjani Narayanan 14 December 2012 23:54

    //திரு வைகோ அவர்கள் எல்லாவற்றையும் எழுதி விட்டார். அவரது பின்னூட்டம் நம் கட்டுரையை தூக்கி சாப்பிட்டு விடும்.
    அவரது பின்னூட்டமே பதிவர்களுக்கு தெம்பூட்டும் டானிக்!//

    மிக்க நன்றிகள், திருமதி ரஞ்ஜினி மேடம்.

    தங்களின் ”லாம் ..... எழுதலாம் ..... ப்ளாக் எழுதலாம்” பதிவு என் நினைவு வந்தது. இப்போதும் சிரித்தேன்.

    அன்புடன்
    VGk

    ReplyDelete