HOME SWEET HOME
இல்லம்
இனிய இல்லம்.
பகுதி
1.
இந்தப் பதிவு எனது 50வது பதிவாக அமைந்ததில் எனக்கு மட்டற்ற
மகிழ்ச்சி.
முன்னுரை
முதற்கண்
எனக்கு இப்படி ஒரு தொடர் பதிவிட வாய்ப்பளித்த
பின்னூட்டப்புயல்
CUM சுனாமி CUM அருவி
ETC. ETC.
திருச்சி கோபு என்கிற
திரு வை
கோபால கிருஷ்ணன்
என்ற
வலைப்பதிவின் உரிமையாளர் அவர்களுக்கு என்
நெஞ்சார்ந்த,
மனமார்ந்த,
சிரம் தாழ்ந்த நன்றிகளை
சமர்ப்பித்துக்
கொள்கிறேன்.
கோபு சாரின் இந்த மூன்று பதிவுகளையும்
படித்த பிறகும், உனக்கு தொடர் பதிவிட தைரியம் இருக்கான்னு என்னையே நான் வடிவேலு
மாதிரி கேட்டுக் கொண்டேன். சரி ’புலியைப்
பார்த்து பூனை சூடு போட்டுண்டா மாதிரி, கான மயிலாடக் கண்டிருந்த வான் கோழி தானும்
தன் பொல்லாச் சிறகை விரித்தாடினாற் போல்’
இருக்குன்னு யாரும் சொல்லாத அளவுக்கு சமாளிப்போம் என்று ஆரம்பிக்கிறேன்.
'வீடு' என்ற தலைப்பில் நான்
எழுதிய கவிதை. முதல்
பாதியில் சொன்னது போல் வீடு அமைந்தால்,
அதுவும் இந்தக்காலத்தில்... ஆஹா, அருமையாக இருக்குமே. ஆனால் முக்கால்வாசி நகரங்களில் கிடைப்பதென்னவோ இரண்டாம் பாதியில் சொல்லப்பட்டது
போல் புறாக்கூடுகள்தான்.
வீடு
வாசலிலே நிதம்
பூத்து
இதமான மணம்
பரப்பும்
நித்ய மல்லிக்கொடி,
வீட்டைச் சுற்றி
மணம் நிறைந்த
நிறம் மிகுந்த
மலர்ச் செடிகள்,
விசாலமான அறைகள்,
வீடு நிறைய
மனிதர்கள்,
தாத்தா, பாட்டி, பெரியப்பா, பெரியம்மா,
சித்தி, சித்தப்பா, அத்தை, மாமா
என்று,
கருவண்டு கண்கள்
சுழற்றி
நொடிக்கொரு சேட்டை
செய்யும்
குஞ்சு குளுவான்கள்,
புது மனிதர்
வருகையை
கட்டியம் கூறும்
பைரவர் வாசலிலே,
கொல்லையிலே கல்கண்டுத்
தண்ணீருடன்
எப்போதும் வற்றாத
கிணறு,
மா, பலா, வாழை மரங்கள்,
தினத் தேவை
பூர்த்தி செய்யும்
காய்கறிச் செடிகள்,
இப்படி என்
பிறந்த வீடு
போலவே
புகுந்த வீடும்
இருக்கும்
என்ற கனவுகளுடன்
கை பிடித்த
மணாளனுடன்
மகிழுந்திலிருந்து வலது
கால் எடுத்து
நிலம் பதித்து
புது வீடு
வந்து சேர்ந்தேன்.
ஒன்றல்ல, இரண்டல்ல
எண்ணிலா புறாக்கூண்டுகள்
விருந்தினர் வருகையை
சூசகமாகத் தடுப்பது
போல்
ஒற்றைப் படுக்கையறை,
பக்கத்து வீட்டில்
இருப்பது
யார் என்று
தெரியவே
பல நாட்களாயிற்று.
வாசலில் வந்து
பார்த்தாலும்,
சாளரத்தின் வழியே
பார்த்தாலும்
கண்ணில் பட்டது
சாத்திய கதவுகளே!
காய்கறி வண்டிக்காரன்,
விற்பனையாளன்,
அறிமுகம் இல்லாதவர்
அனைவருமே நிறுத்தப்பட்டனர்
வெளி வாசலிலேயே
பாதுகாப்பான இடம்
தண்ணீர் வசதி
எப்பொழுதும் மின்சாரம்
அன்பான கணவன்
இல்லை என்ற
சொல்லுக்கே
இடமில்லாத ஒரு
வாழ்க்கை
ஆனால் என்
உள் மனம்
மட்டும் சொல்கிறது.
‘அடியே! நீ ஒரு
தங்கக் கூண்டுக்கிளி’
என்று.
இந்த மாதிரி தண்ணிக்குள்ள ஒரு வீடு கட்டிக்கொண்டு வாழ எனக்கும் ஆசை தான்.
ஆனா இந்த மாதிரி வீட்டில் வாழ முடியாது. வேணும்ன்னா ரெண்டு, மூணு நாள் பிக்னிக் போகலாம். அதுவும் இயற்கை அன்னையின்,
அன்பும், ஆசியும் ஒத்துழைப்பும் இருந்தால்தான்.
சரிங்க இப்ப விடை பெற்றுக் கொள்கிறேன்.
நாங்க (அதாங்க நானும் என்
வூட்டுக்காரரும்) வீடு வாங்கிய கதை அடுத்த பகுதியில்.
...........
தொடரும், தொடரும்,
இது தொடர்கதை
போல தொடரும்.
தங்களின் ஐம்பதாவது பதிவுக்கு என் அன்பான இனிய நல்வாழ்த்துகள்.
ReplyDelete>>>> நீண்ட இடைவேளைக்குப்பின் தொடர்வேன் >>>>>>
கோபு சார்,
Deleteவாழ்த்துக்கு நன்றி.
மெதுவாக வாங்க உங்க வேலையெல்லாம் முடித்துவிட்டு.
முதல் பதிவு உங்களதாக அமைந்ததில் மகிழ்ச்சி.
>>>> நீண்ட இடைவேளைக்குப்பின் தொடர்வேன் >>>>>>//
ரயில் நிலையத்தில் காலையில் மின்சார ரயிலுக்காகக் காத்திருக்கும் போது ‘இன்னும் சிறிது நேரத்தில் பீச் செல்லும் மின்சார ரயில் முதலாவது ப்ளாட்பாரத்திற்கு வந்து சேரும்’ என்று அறிவிப்பு வரும். அப்ப எப்படா ரயில் வரும் நேரத்துக்கு அலுவலகத்துக்கு போய் சேரணுமேன்னு காத்திருப்போம்.
அந்த மாதிரி காத்திருக்கிறேன் உங்கள் வரவிற்காக.
நன்றியுடன்
ஜெயந்தி ரமணி
//HOME SWEET HOME இல்லம் இனிய இல்லம்.//
ReplyDeleteதலைப்பே மிகவும் இனிப்பாக உள்ளது. சந்தோஷம்.
>>>>>>
கோபு சார்
Delete'YOU CAN BUILD A HOUSE BUT NOT A HOME" என்பது ஆங்கிலப்பழமொழி.
இறைவனருளாலும், உங்களைப் போன்ற பெரியவர்களின், நல்லவர்களின் ஆசியாலும் எனக்குக் கிடைத்தது வீடு அல்ல ‘இல்லம்’.
அதனால்தான் அந்தத் தலைப்பை வைத்தேன்.
//இந்தப் பதிவு எனது 50வது பதிவாக அமைந்ததில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.//
ReplyDeleteஅதைவிட எனக்கு மற்றொரு மகிழ்ச்சி என்ன தெரியுமா?
தங்களின் அத்தனைப்பதிவுகளையும் ஒன்று விடாமல் படித்து மகிழ்ந்து பின்னூட்டம் கொடுத்துள்ள ஒரே நபர் நான் தான் என நினைக்கிறேன்.
இது போல நான் வேறு எந்தப்பதிவருக்குமே செய்துள்ளதாக எனக்கு நினைவு இல்லை. இனிமேல் தான் அதைப்பற்றி ஆராய்ச்சி செய்ய வேண்டும்.
>>>>
>>>>>
தங்களின் அத்தனைப்பதிவுகளையும் ஒன்று விடாமல் படித்து மகிழ்ந்து பின்னூட்டம் கொடுத்துள்ள ஒரே நபர் நான் தான் என நினைக்கிறேன்.//
Deleteஇதில் இரண்டாவது கருத்துக்கு இடமே இல்லை. நீங்க தான், நீங்கதான், நீங்களேதான், நீங்க மட்டும் தான்.
தன்யனானேன்.
இது போல நான் வேறு எந்தப்பதிவருக்குமே செய்துள்ளதாக எனக்கு நினைவு இல்லை. இனிமேல் தான் அதைப்பற்றி ஆராய்ச்சி செய்ய வேண்டும்.//
அந்த ஆராய்ச்சியை நானே செய்து Ph.D வாங்கலாம்ன்னு பார்க்கறேன்.
//முன்னுரை
ReplyDeleteமுதற்கண் எனக்கு இப்படி ஒரு தொடர் பதிவிட வாய்ப்பளித்த
பின்னூட்டப்புயல் CUM சுனாமி CUM அருவி ETC. ETC. திருச்சி கோபு என்கிற
திரு வை கோபால கிருஷ்ணன் http://gopu1949.blogspot.in என்ற வலைப்பதிவின் உரிமையாளர் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த, மனமார்ந்த, சிரம் தாழ்ந்த நன்றிகளை சமர்ப்பித்துக் கொள்கிறேன்.//
அடடா, ‘முன்னுரை’ என்பதிலேயே கோயில் தேர் போன்ற மிகவும் வெயிட் ஆன [92-93 KGs] என்னை, தரதரன்னு இழுத்து வந்து முன்னுக்குக் கொண்டு வந்துட்டீங்களே!
உங்களிடம் உள்ள ஆர்வம் + திறமை + சுறுசுறுப்பு + ஆற்றல் + தனித்தன்மை இவற்றையெல்லாம் பார்த்து வாய்ப்பு தங்களைத்தேடி தானாகவே வந்துள்ளது.
இதில் என் பங்கு ஒன்றுமே இல்லை. நான் மிகச் சாதாரணமானவனாக்கும்.
>>>>>
அனுமனைப் போல் உங்கள் பலம் உங்களுக்குத் தெரியாது.
Deleteஎனக்கு INSPIRATION உங்கள் எழுத்துக்கள் மற்றும் பின்னூட்டங்கள்.
நன்றியோ நன்றி.
வாழ்த்துக்கள்,தொடருங்க ஜெ.மாமி..
ReplyDeleteவாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ஆசியா.
Deleteதங்களின் உளமார்ந்த நன்றிக்கு என் நன்றிகள்.
ReplyDelete// http://gopu1949.blogspot.in/2013/02/blog-post.html
http://gopu1949.blogspot.in/2013/02/2.html
http://gopu1949.blogspot.in/2013/02/blog-post_5541.html
கோபு சாரின் இந்த மூன்று பதிவுகளையும் படித்த பிறகும், உனக்கு தொடர் பதிவிட தைரியம் இருக்கான்னு என்னையே நான் வடிவேலு மாதிரி கேட்டுக் கொண்டேன். சரி ’புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுண்டா மாதிரி, கான மயிலாடக் கண்டிருந்த வான் கோழி தானும் தன் பொல்லாச் சிறகை விரித்தாடினாற் போல்’ இருக்குன்னு யாரும் சொல்லாத அளவுக்கு சமாளிப்போம் என்று ஆரம்பிக்கிறேன்.//
ஆஹா, என்ன ஒரு தன்னடக்கம். மெயிர்சிலிரிக்க வைக்குது என்னை. ;)
சமாளிப்பதா? ஜமாய்த்து விடுவீர்கள் - அந்த நம்பிக்கை எனக்கு உள்ளது.
>>>>>
ஆமாம், டபாய்க்காம ஜமாய்க்கணும்.
Deleteஆனா நாங்க நிலம் வாங்கி, வீடு கட்டி, அப்புறம் மாடி கட்டி, அதுக்கு மேல மாடி கட்டி 21 வருடங்கள் அங்கு வாழந்த கதை பெரியதுதான்.
சுவாரசியமான (எனக்கு) சம்பவங்களும் நிறைய இருக்கு.
உங்கள் நம்பிக்கை வீண் போகாமல் இருக்க இறைவனை வேண்டுகிறேன்.
//விருந்தினர் வருகையை சூசகமாகத் தடுப்பது போல் ஒற்றைப் படுக்கையறை,//
ReplyDelete;))))) சூப்பரோ சூப்பர்.
//ஆனால் என் உள் மனம் மட்டும் சொல்கிறது, “‘அடியே! நீ ஒரு தங்கக் கூண்டுக்கிளி” என்று.//
கூண்டுக்கிளியாக இருப்பினும் ’தங்கமே தங்கம்’ அல்லவா தாங்கள்! அது தான் முக்கியமாக்கும்.
வெளிச்சம் தருவதற்கு முத்துப்போல் அழகாக எரியும் ஓர் சிறிய அகல் விளக்கே போதுமானது.
தீவட்டியெல்லாம் தேவையே இல்லை என்பது என் கருத்து.
>>>>>
வெளிச்சம் தருவதற்கு முத்துப்போல் அழகாக எரியும் ஓர் சிறிய அகல் விளக்கே போதுமானது. //
Deleteமறுக்க முடியாத உண்மை.
//சரிங்க இப்ப விடை பெற்றுக் கொள்கிறேன். நாங்க (அதாங்க நானும் என் வூட்டுக்காரரும்) வீடு வாங்கிய கதை அடுத்த பகுதியில்.
ReplyDelete........... தொடரும், தொடரும், இது தொடர்கதை போல தொடரும்.//
தொடரட்டும். சிறுசிறு பகுதிகளாக வெளியிட்டல் படிப்பவர்களுக்கு அலுப்புத்தட்டாமல் இருக்கும். உங்களுக்கும் பதிவு எண்ணிக்கை மளமளவென்று 50 லிருந்து 100 ஆகக்கூடும்.
அன்பான இனிய நல்வாழ்த்துகள்.
ooooo
நல்வாழ்த்துக்கு நன்றி. தொடரும் நாளை விரைவில் அறிவிக்கிறேன்.
Deleteஇந்தப் பதிவு எனது 50வது பதிவாக அமைந்ததில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.//
ReplyDeleteஐம்பதாவது பதிவுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்..
உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி திருமதி இராஜராஜேஸ்வரி
Deleteஅருமையான கவிதை! தொடர் பதிவுக்கு வாழ்த்துக்கள்!
ReplyDeleteஉங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி சுரேஷ்
Deleteஇந்த அம்பாளடியாளும் உங்களை மனதார வாழ்துகின்றாள்
ReplyDeleteஐம்பது பல ஆயிரமாகப் பல்கிப் பெருகட்டும் !.......
உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி திருமதி அம்பாளடியாள். அடியாளின் வாக்கு அம்பாளின் வாக்கு.
Deleteமாமி ஐம்பதாவது பதிவுக்கு அன்பு வாழ்த்துக்கள்.உங்களிடம் இருக்கும் பலதிறமைகளும் பதிவுலகுமூலம் வெளிப்பட்டு மேன் மேலும் பன்னூறு பதிவுகள் எழுதிட வாழ்த்துக்கள்.முழுதும் படித்து விட்டு வர்ரேன்.:)
ReplyDeleteஉங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி சாதிகா.
Deleteஅன்பு ஜெயந்தி,
ReplyDeleteஉங்களது 50 பதிவுக்கு வாழ்த்துகள்!
தொடர் பதிவு நன்றாக ஆரம்பமாகி இருக்கிறது.
மேலும் மேலும் பதிவு உலகில் சாதிக்க வாழ்த்துகள்!
உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி திருமதி ரஞ்சனி நாராயணன்.
Deleteஆனால் என் உள் மனம் மட்டும் சொல்கிறது.
ReplyDelete‘அடியே! நீ ஒரு
தங்கக் கூண்டுக்கிளி’ என்று.
//மாமி,நீங்க அப்போதான் கூண்டுக்கிளி.இப்ப நீங்கள் எந்த கிளி???????
//வீடு வாங்கிய கதை அடுத்த பகுதியில்.// சீக்கிரம் போடுங்க பதிவை.பதிவை பார்த்த பிற்பாடாவது உங்கள் இல்லத்தை காண வரும் நேரம் வரட்டும் எனக்கு:)
சாதிகா, நான் கூண்டுக் கிளியே அல்ல. சுதந்திரமாகப் பறக்கும் கிளி. வாங்க, வாங்க. இல்லத்தைக்காண
Deleteவாழ்த்துக்ள் அய்யா. . .தொடருங்கள். . .
ReplyDeleteஉங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி திரு ராஜா.
Deleteஇன்று
ReplyDeleteRs. 3000 REGCLEAN PRO V 6.2 இலவசமாக. . .
...
இது என்ன சார். ஒன்றும் புரியவில்லை.
Deleteஅருமையான பதிவுகள் பணி தொடர வாழ்த்துக்கள்
Deleteமிக்க நன்றி திரு அரசன் சே.
ReplyDelete