Friday, 22 March 2013

லயாக்குட்டி



குண்டுக்கண்ணழகி

காந்தச் சிரிப்பழகி

உள்ளம் கவர் கள்வி

எங்கள் வீட்டு

குட்டி இளவரசி

லயாக்குட்டி

16 comments:

  1. லயா..மாமி பெயரே இதமாக இருக்க்கு.அப்படியே உங்கள் துரு துரு கண்கள்.பேத்தியைப்பற்றிய நச்சென்ர கவிதையுடன் ..படத்தில் லயா க்யூயூஊஊஊஊட்டாக இருக்கிறாள்.

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி சாதிகா. பொழுதே போதல. லயாக்குட்டிகூட விளையாட்டிட்டிருந்தா.

      Delete
  2. லயாக்குட்டி அய்கோ அய்ய்காக இருக்கிறாள்.

    பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக சந்தோஷமாக உள்ளது.

    கட்டிப்பிடிச்சுத்தூக்கிக் கொஞ்சணும் போல ஆசையாக உள்ளது.

    வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. குண்டுக்கண்ணழகி
    காந்தச் சிரிப்பழகி
    உள்ளம் கவர் கள்வி
    நம் வீட்டு
    குட்டி இளவரசி
    லயாக்குட்டி

    எல்லா நலமும் வளமும் பெற்று ’ஜெ’ பாட்டி போலவே அதிர்ஷ்டமாக நீடூழி வாழ்க! வாழ்க!! வாழ்க!!! என மனமார வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. எல்லா நலமும் வளமும் பெற்று ’ஜெ’ பாட்டி போலவே அதிர்ஷ்டமாக நீடூழி வாழ்க! வாழ்க!! வாழ்க!!! என மனமார வாழ்த்துகிறேன்.//

      இதை விட என்ன வேண்டும். நன்றி.

      இப்பவே லயாவோட தாத்தா சொல்றார். உன்னைப்பார்த்தா தனி ஒரு சிரிப்பு மலர்றது அவளுக்குன்னு.

      மருமகள் சொல்றா, உங்களப் பார்த்தா அவளோட கண்ணு, வாய் எல்லாம் சிரிக்குதும்மான்னு.

      Delete
  4. வரிகளுக்கேற்ற குட்டி இளவரசிக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு மிக்க நன்றி.

      Delete
  5. அழகு! திருஷ்டி சுத்தி போடுங்கள்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி. கண்டிப்பாக சுத்தி போடுகிறேன்.

      Delete
  6. குண்டுக்கண்ணழகிகாந்தச் சிரிப்பழகி
    உள்ளம் கவர் கள்வி எங்கள் வீட்டு
    குட்டி இளவரசி லயாக்குட்டி //

    பல்லாண்டு பல்லாண்டுகள்
    இனிது வாழ
    இறைவனைப் பிரார்த்திக்கிறேன் ..

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றி ராஜி.

      Delete
  7. லயம நிறைந்த சங்கீதம் போல லயாக் குட்டி அழகு. வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி திரு முரளிதரன்

      Delete

  8. வணக்கம்!

    லயாக்குட்டியைப் படத்தில் பார்த்த எனக்கு
    பாட்டு பிறக்கிறது!

    நேரில் பார்த்துகெ்கொண்டிருக்கும் உங்களுக்கு
    நொடிக்கு நொடி பாட்டு பிறக்க வேண்டுமே! கொடுத்துவைத்தவா்!
    லயாக்குட்டிக்கு வாழ்த்துக்கள்

    லயாக்குட்டி வெண்பா!

    குண்டு விழியழகி கோல எழில்பார்த்து
    வண்டு பறந்துவரும் தேனருந்த! - விண்மதிபோல்
    கொண்டு குளிர்ந்திடவும் கொஞ்சி மகிழந்திடவும்
    நண்டு லயாவை..நீ நாடு

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. பாரதிதாசன் ஐயா மனமார்ந்த நன்றி வரவுக்கும், வாழ்த்துக்கும்.

      கவிஞருக்கு பாட்டு பிறந்ததில் என்ன ஆச்சரியம்.

      வெண்பா அருமை. வீட்டில் எல்லாரும் படித்தாயிற்று, லயாவைத் தவிர.

      Delete
  9. அருமைப் பேத்தி.
    இனிய வாழ்த்து.
    நான் எனது போரன் பற்றி ஆக்கமிட்டேன்.
    அங்கு ஜெயந்தி இங்கு நீங்கள் என்றனர் கருத்தில்.
    இன்று தான் அந்த ஜெயந்தியைக் கண்டு பிடிக்க முடிந்தது.
    வெற்றி எனும் எமது பேரன் பற்றி வலையில் '' வெற்றி '' தலைப்பிலேயே கவிதைகள் இட்டு வருகிறேன்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete