Wednesday 20 March 2013

சிட்டுக் குருவி



குட்டி மூக்கால்

கொத்தித் தின்னும்

சிட்டுக் குருவியே

சின்னக் குருவியே

க்ரீச், க்ரீச் என்று

மனதுக்கிசைந்த

குரல் கொடுக்கும்

உன்னைப் பார்த்து

ரொம்ப நாளாச்சுதே.

உன் இனம்

பல்கிப் பெருகி

உலகை விட்டு

அழியாதிருக்க

நீதான் முயற்சி

எடுக்க வேண்டும்

மரங்களை அழித்து,

காடுகளை ஒழிக்கும்

மனிதனை நம்பாதே.

கண்காணாத தூரத்தில்

மனித வாசம் இல்லாத

தேசமாகப் பார்த்து

உன் இருப்பிடத்தை

மாற்றிக் கொள்

நீடூழி வாழ

கற்றுக் கொள்.

11 comments:

  1. மீண்டும் சிட்டுக் குருவிகளின் வருகை கண்டு
    உள்ளம் குளிர்ந்து அழகிய இப் பறவைகளுக்கு
    அடைக்கலம் தரும் மரங்களை வெட்டாதீர்கள்
    என்று சொல்லாமல் சொல்லும் கவிதை வரிகள்
    நெஞ்சைத் தொட்டது .வாழ்த்துக்கள் அம்மா இனிய
    கவிதை இது போல் என்றும் தொடரட்டும் .இன்று
    என் தளத்தில் ஒரு போட்டிக் கவிதை காத்திருக்கிறது
    நேரம் கிடைத்தால் வாருங்கள் .

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி. உங்கள் கவிதை அருமை. நானும் ஒரு கவிதை எழுதி இருக்கிறேன். அன்னம் விடு தூது. இன்று அனுப்பி விடுவேன். ஆனால் என் கவிதை ரொம்ப சாதாரணமாக இருக்கும். ஸ்டைலா புதுக்கவிதைன்னு சொல்லிக்க வேண்டியதுதான்.

      Delete
  2. சிட்டுக் குருவி பெயர் சொல்லும்போதே ஒரு மகிழ்ச்சி ஓடி வந்து ஒட்டிக்கொள்ளும்.இவை அழிந்து வருவது கவலைக்குரியது.
    அழகான கவிதை.
    சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு? என்ற பாட்டை
    சிட்டுகுருவிக்கினி தட்டுப்பாடு என்றுதான் பாடவேண்டும் போலிருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. கடல், யானை .. இத்துடன் அலுக்காமல் பார்க்கும் விஷயங்களில் சிட்டுக்குருவியையும் சேர்த்துக் கொள்ளலாம். நம் இனம் அழிவதைப் பற்றியே நாம் கவலைப் படுவதில்லை. அப்புறம்தானே மற்ற இனத்தைப் பற்றிக் கவலைப்பட.

      Delete
  3. Replies
    1. கண்டிப்பாட இன்று படித்துவிடுகிறேன்.
      பகிர்விற்கு நன்றி.

      Delete
  4. குருவிகள் மேல் உள்ள அக்கறையை அழகாக அவற்றிற்கு ஓர் ஆலோசனையாகத் தந்துள்ளீர்கள். பாராட்டுக்கள்.

    மிகவும் பொருத்தமான வரிகள்:-

    //உன்னைப் பார்த்து ரொம்ப நாளாச்சுதே.// ;(((((

    ReplyDelete
    Replies
    1. சென்னையில் காணாமல் போன சிட்டுக் குருவிகளை நாங்கள் 2012ல் மூணாறு சென்ற போது பார்த்தேன்.

      Delete
  5. சிட்டுக்குருவிகளை படத்திலாவது பார்க்க முடிந்ததில் மனதுக்கு ஓர் ஆறுதலாக உள்ளது.

    சேவிக்க ஏற்பாடு செய்வித்ததற்கு என் நன்றிகள்.

    ReplyDelete
  6. அழகு... அருமை...

    எங்கள் ஊரில் இல்லை... பார்த்து பல வருடங்கள் ஆகி விட்டது...

    இப்படியாவது சந்தோசப்பட்டுக் கொள்ள வேண்டியது தான்...

    ReplyDelete
    Replies
    1. இன்னும் பல வருடங்களுக்குப் பிறகு நிறைய விஷயங்களை படத்தில் தான் குழந்தைகளுக்குக் காட்ட முடியும் என்று நினைக்கிறேன்.

      Delete