Tuesday 19 March 2013

என் கவிதை / குட்டிக்கதை


போன மச்சான் திரும்பி வந்தான்.

ஏற்கனவே ரெண்டு நாய் இருக்கறது போதாதா? இது வேறயா?  சரியான நாய்ப் பைத்தியம்” 

சின்னக்கொட்டாங்கச்சியில் பாலை ஊற்றி வைத்து, வாலை ஆட்டிக்கொண்டே பாலைக் குடித்துக்கொண்டிருந்த கறுப்பு நாய்க்குட்டியை அக்கம் பக்கத்து வீட்டு அரை டிக்கெட்டுகளுடன் சேர்ந்து ரசித்துக்கொண்டிருந்த சந்தியாவைப்பார்த்து கத்தினாள், அலுவலகத்திலிருந்து வீட்டிற்குள் நுழைந்த ஜெயா. 

அப்படி எல்லாம் சொல்லதம்மா.  பாவம்மா! இந்தக் குளிரில இது எங்கம்மா போகும்? நாளைக்குக் கார்த்தால கண்டிப்பா எங்கயாவது கொண்டு விட்டுடலாம்மா.  அப்பா கூட சரின்னுட்டார்மா, ப்ளீஸ் இன்னிக்கு ராத்திரி மட்டும் இங்க இருக்கட்டும்மா”  என்று கெஞ்சினாள் சந்தியா.

அப்பாக்கும் பொண்ணுக்கும் வேற வேலை இல்லை.  நாளைக்குக் கண்டிப்பா அனுப்பிடணும். சொல்லிட்டேன்என்றாள் ஜெயா.

###


மறுநாள் ஞாயிற்றுக்கிழமை.  நாய்க்குட்டியை வீட்டிலிருந்து வெளியேற்றிய பிறகுதான் சமைக்கவே ஆரம்பித்தாள் ஜெயா.

மாலை ஆறு மணி.  “மாமி, மாமி”, என்று அழைக்கும் குரல் கேட்டு வெளியே வந்தாள் ஜெயா.  பக்கத்து வீட்டு குட்டிப்பையன் அரவிந்த். 

“மாமி, நாங்க இன்னிக்கு பீச்சுக்குப் போயிட்டு வந்தோமா.  அப்ப நம்ப பஸ் ஸ்டாண்ட் கிட்டக்க நேத்திக்கு சந்தியா அக்கா கொட்டாங்கச்சில பால் ஊத்தி குடுத்துண்டிருந்தாளே அந்த கறுப்பு நாய்க்குட்டி தனியா கத்திண்டிருந்தது.  நீங்க காணும்ன்னு தேடுவீங்களேன்னு தூக்கிண்டு வந்துட்டேன். இந்தாங்கஎன்று நாய்க்குட்டியை ஜெயாவின் முகத்திற்கெதிரே நீட்டினான்.

###


18 comments:

  1. போன மச்சான் திரும்பி வந்தான் ‘நாய்’க்கதை அருமையாக சிரிப்பாக உள்ளது. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி கோபு சார்.

      Delete
  2. ”மழலை வேண்டும் மங்கை” கவிதை சூப்பரோ சூப்பர்.

    ஒரு பெண்ணின் ஏக்கத்தையும், எதிர்பார்ப்புகளையும் அப்படியே எழுத்தில் கொண்டு வந்து கொடுத்துள்ளது மிகச்சிறப்பாக உள்ளது.

    மனமார்ந்த பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கு மிக்க நன்றி கோபு சார்

      Delete
  3. http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_4903.html

    தங்களின் நாய்க்கதையைப்படித்ததும் நான் எழுதிய குட்டியூண்டு கதை “தாலி” நினைவுக்கு வந்தது. இணைப்பு மேலே கொடுத்துள்ளேன்.

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக படித்து பின்னூட்டம் கொடுக்கிறேன். கொஞ்சம் இல்ல, இல்ல ரொம்ப பிசி. அதனால தாமதமா உங்க ப்ளாகிற்கு வரதுக்கு கொஞ்சம் மன்னிச்சுக்கோங்கோ.

      Delete
  4. ’மழலை வேண்டும் மங்கை’ என்ற கருத்தினை வலியுறுத்தி நான் எழுதிய சிறுகதை:

    ’நாவினால் சுட்ட வடு’

    இணைப்பு இதோ:

    http://gopu1949.blogspot.in/2011/01/1-of-2_13.html
    http://gopu1949.blogspot.in/2011/01/2-of-2.html




    ReplyDelete
    Replies
    1. என்ன சொல்ல. GREAT MEN THINK ALIKE.

      Delete
  5. தொடர்ச்சியாக மாதம் இருமுறை "IN and OUT CHENNAI' ஐக் கலக்கிவரும் தங்களுக்கு என் அன்பான பாராட்டுக்கள். மனமார்ந்த இனிய நல்வாழ்த்துகள்.

    தொடர்ந்து கலக்குங்கோ ! ;)))))

    ReplyDelete
  6. மழலை வேண்டும் மங்கை - மனதை கவர்ந்தது...

    அரவிந்த் நல்ல பையன்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தனபாலன் சார்

      Delete
  7. படிக்க முடியவில்லை! ஸ்கிரீன் ஷாட் எடுத்தோ அல்லது தனியாகவோ பதிவிட்டு இருக்கலாம்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்காகவே கதையை EDIT செய்து போட்டிருக்கிறேன்.
      வாழ்த்துக்கு நன்றி.

      Delete
  8. கவிதை நன்றாக உள்ளது. கதையை படிக்க முடியவில்லை. கவிதை மற்றும் கதையை தனித்தனியாக ஸ்கேன் செய்து போடவும் அப்போதுதான் அதை க்ளிக் பண்ணி பெரிதாக்கி படிக்க முடியும் என்பது என் கருத்து

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்காகவே கதையை EDIT செய்து போட்டிருக்கிறேன்.
      வாழ்த்துக்கு நன்றி.

      NOTED FOR FUTURE GUIDANCE.

      Delete
  9. ஜே மாமி நலமா?
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நலம் ஜலீலா.
      வாழ்த்துக்கு நன்றி.

      Delete