Saturday, 11 May 2013
Wednesday, 8 May 2013
சொன்னார்கள் / செய்தார்கள்
ஜவஹர்லால் நேரு – ‘தனிமைத் தீவில் தள்ளப்பட்டால் என்ன
செய்வீர்கள்?” என்று
கேட்டபோது, ‘புத்தகங்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்துவிட்டு வருவேன்’ என்று பதிலளித்தாராம்.
விவேகானந்தர் – ஒரு நூலகம் திறக்கப்படும்போது, ஒரு
சிறைச்சாலை மூடப்படும்.
பெட்ரண்ட் ரஸல்– ’என் கல்லறையில் மறக்காமல் எழுதுங்கள், இங்கே ஒரு
புத்தகப் புழு உறங்குகிறதென்று’.
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் – ‘மனிதனின்
மிகப் பெரிய கண்டு பிடிப்பு எது?’ என்று கேட்டபோது
சற்றும் யோசிக்காமல் ’புத்தகம்’ என்
பதிலளித்தாராம்.
தந்தை பெரியார் – ’பெண்களிடம், கரண்டியைப் பிடுங்கி விட்டு
புத்தகம் கொடுத்தால் போதும்’.
நெல்சன் மண்டேலா – ‘வேறு எந்தச் சுதந்திரமும் வேண்டாம். சிறையில் புத்தக வாசிப்பை மட்டும் அனுமதிக்க
வேண்டும்.’
லெனின் – ‘பிறந்த
நாளுக்கு என்ன வேண்டும் என நாடு கேட்டபோது புத்தகங்கள் வேண்டும் என சற்றும்
தயக்கமின்றி லெனின் கூறிட குவிந்த புத்தகங்கள் பல லட்சம்.
பேரறிஞர் இங்கர்சால் – குடும்பத்தை
விட்டு வெளியேறுங்கள் என்று தூக்கியெறியப்பட்டபோது சென்ற இடம் நூலகம்.
சார்லி சாப்ளின் – ஒவ்வொரு படமும் நடிக்க ஒப்புக்கொள்ளும்
போது வரும் முன்பணத்தில் முதல் நூறு டாலருக்கு புத்தகம் வாங்குவாராம்.
வின்ஸ்டன் சர்ச்சில் – ஒரு
குழந்தைக்கு நீங்கள் வாங்கித்தரும் மிகச் சிறந்த பரிசு ஒரு புத்தகம்தான்.
மகாத்மா காந்தி – ‘ஒரு கோடி ரூபாய் கிடைத்தால் என்ன
செய்வீர்கள்’ என்று
கேட்டபோது ‘ஒரு நூலகம் கட்டுவேன்’ என்று பதிலளித்தாராம்.
அறிஞர் அண்ணா – ’பம்பாய்க்கு விமானத்தில் போகாமல் காரில்
மூன்றுநாள் பயணம் செய்து மெனக்கெட்டது ஏன்?’ என்று கேட்டபோது ‘பத்து புத்தகங்கள் படிக்க
வேண்டி இருந்தது’ என்றாராம்.
மார்டின் லூதர் கிங் – ‘பயங்கரமான
போராட்ட ஆயுதங்கள் எவை?’ என் கேட்கப்பட்டபோது, ‘புத்தகங்கள்தான்’ என்றாராம்.
டாக்டர் அம்பேத்கார் – ‘எங்கே தங்க
விரும்புகிறீர்கள்’ என்று லண்டன் தோழர்கள் கேட்டபோது... ‘நூலகத்திற்கு அருகில் உள்ள இடத்தில்’ என்றாராம்.
பகத்சிங் - தான் தூக்கிலிடப்படுவதற்கு ஒரு நிமிடம்
முன்பு வரை வாசித்துக் கொண்டே இருந்தாராம்.
புத்தகங்களை நேசிப்போம்… வாசிப்போம்.
வீடு தேடி வரும் நூலகம்
புத்தகங்களுக்காக நூலகத்தைத் தேடி நாம் செல்லும் காலம் போய், புத்தகங்களே நம் வாசல் தேடி வருகிறது.
புத்தகங்களை
நேசிப்போம்… வாசிப்போம்.
இப்படி நூலகத்திற்குப் போய் தேடித் தேடி சலித்து, தலை சுற்றி உட்கார வேண்டியது இல்லை. உங்களுக்குத் தேவையான புத்தகத்தின் தலைப்பை சொன்னால் புத்தகமே உங்கள் வீடு தேடி வந்து விடும்.
இன்றைய குழந்தைகள்
தொலைக்காட்சி, வீடியோ கேம், இணைய தளம் என்று தங்கள் விடுமுறையைக்
கழிக்கின்றனர். இந்தக் குழந்தைகளுக்காகவே
ஒரு வீடு தேடி வரும் நூலகத்தை அமைத்திருக்கும் திரு சேதுராமன், மடிப்பாக்கம்
அவர்களின் பேட்டி தினமலரில் 05.05.2013 ஞாயிறு அன்று வெளிவந்திருக்கிறது. உங்களுக்காக இங்கு மீண்டும் திரு சேதுராமன்
அவர்களின் பேட்டியை கொடுத்திருக்கிறேன். படித்து
பயன் பெறுங்கள் நண்பர்களே.
”ஒரு இனத்தை
அழிக்க வேண்டும் என்றால் முதலில் மொழியை அழிக்க வேண்டும் என்றார் ஹிட்லர். மொழியே
சமுதாயத்தின் அடையாளம். மொழியைமேம்படுத்தும் இடம் நூலகம்.
நூலகத்தை அமைப்பது சாதாரணமல்ல.
மொழியின் மீதும்,
சமுதாயத்தின் மீதும் தீராத காதலும், அக்கறையும் கொண்ட மனிதர்களால் தான், நூலகத்தை அமைக்க முடியும். தனி மனிதராய், சமுதாயத்தின் மீது கொண்ட ஆதங்கத்தால், சேதுராமன்,40, மடிப்பாக்கத்தில் "ரீடர்ஸ்
கிளப்' என்ற பெயரில் குழந்தைகளுக்காகவே ஒரு நூலகத்தை
உருவாக்கியுள்ளார்.
அவரோடு உரையாடியதில் இருந்து..
அவரோடு உரையாடியதில் இருந்து..
குழந்தைகளுக்கு என தனியாக ஒரு நூலகம் அமைக்க காரணம்?
நான் கார்ப்பரேட் கம்பெனியில், 60 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கினேன். நிம்மதியான வாழ்க்கை, கை நிறைய சம்பளம், சொகுசான கார் என, ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்தேன்.
சம்பளம்... சம்பளம்... என பந்தய
குதிரை போல் ஓடிக்கொண்டே இருந்தேன். ஒருநாள் குழந்தைகள் படிப்பு பற்றி யோசிக்கும்
போது தான், அவர்கள் இணையதளம், வீடியோ கேமில் மூழ்கியிருந்தது
தெரிந்தது.குழந்தைகளின் கவனத்தை திருப்ப, புத்தக வாசிப்பை முறைப்படுத்தினோம்.
ஆரம்பத்தில் புத்தகம் படிப்பது போல், நடித்து வீடியோகேம்விளையாடினர்.
தொடர்ந்து கண்காணித்தால், புத்தக வாசிப்பில் மூழ்கினர். அவர்களின் வயதுக்கேற்ப, தேவையான புத்தகங்களை தேர்ந்தெடுத்து படிக்க கொடுத்தோம்.பின், தினசரி இதழ்கள், வரலாற்று புத்தகங்கள் என, வாசிப்பு பழக்கம் அதிகரித்தது. என் குழந்தைகள் போன்ற சமவயது
குழந்தைகளோடு பேசியதில், குழந்தைகளின் உலகம் பற்றி
அறிந்தோம். குழந்தைகளுக்கான நூலகம் அமைக்க வேண்டும் என, தோன்றியது.
தற்போது, 10 ஆயிரம் புத்தகங்கள் அடங்கிய நூலகத்தை உருவாக்கிஉள்ளேன். குழந்தைகள், மாணவர்கள், பெரியோர் என, அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற புத்தகங்கள் உள்ளன.
உங்கள் நூலகத்தின் சிறப்பு என்ன?
புத்தக வாசிப்பாளர்களுக்காக, www.readersclub.co.in தனி இணைய தளத்தை உருவாக்கியுள்ளோம். எங்கள் இணையதளத்தில் பதிவு
செய்து, தேவையான புத்தகத்தை தேர்ந்தெடுத்து, வாசிப்பாளர்களின் முழு முகவரி மற்றும் தொலைபேசி எண்ணை
அனுப்பினால் போதும். அடுத்த இரு நாட்களுக்குள், வீடு
தேடி புத்தகம் வரும். அதற்காக, தனி கட்டணம் கிடையாது. வாசித்து
முடித்ததும், வீடு தேடி வந்து பெற்று கொள்வர். நூலகத்தை தேடி எங்கும் செல்ல
வேண்டியதில்லை.
இதற்காக, மாத சந்தா, 100 ரூபாய் வரை வாங்கப்பட்டது. தற்போது, புத்தக வாசிப்பு தினத்தை ஒட்டி, குழந்தைகளுக்கு
60 ரூபாயும், பெரியவர்களுக்கு 75 ரூபாயும் மாத சந்தாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், வாரம் ஒரு புத்த கம் என்றமுறையில், புத்தக வாசிப்பை முறைப்படுத்த உள்ளோம்.
புத்தக வாசிப்பு பற்றிய உங்கள்
கருத்து என்ன?
புத்தக வாசிப்பு மூலம், சமுதாயத்தின் பிரச்னைகள், சம்பவங்களை அறிந்து கொள்ள
முடியும். படிப்பதை காட்டிலும், படித்ததை நண்பர்கள் வட்டத்தில்
பகிர்ந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு குடிமகனும் சமுதாயத்திற்கு செய்ய வேண்டிய, தனி மனித கடமை உள்ளது.அதை அறிந்து, தனிப்பட்ட வாழ்க்கையோடு, சமுதாயத்திற்கும் பயனுள்ள வகையில், ஏதாவது செய்ய வேண்டும். இன்றைய இளைய சமுதாயம், புத்தக வாசிப்பில் பெரிதளவு அக்கறை காட்டுவதில்லை. இது, ஆரோக்கியமான வளர்ச்சி அல்ல.
மேலும், ஒருவர் படித்த புத்தகங்களை மற்றவர்களுக்கு கொடுத்து படிக்க உதவ
வேண்டும். உங்களிடம், ஏதாவது படித்து முடித்த
புத்தகங்கள் இருந்தால், என் நூலகத்திற்கு கொடுங்கள்.
உங்கள் புத்தகங்கள், பலருக்கும் பயன்பட இது ஒரு
வாய்ப்பாக அமையட்டும்."ரீடர்ஸ் கிளப்' தொடர்புக்கு: 99621 00032/ 93806 55511”
Monday, 29 April 2013
Friday, 19 April 2013
Monday, 25 March 2013
பாலியல் பலாத்காரம்
தினமும்
காலையில் செய்தித் தாளைப் பிரித்தால், குறைந்தது 2,3 இடங்களிலாவது பாலியல் பலாத்காரம் என்று செய்தி
இடம் பெறாமல் இருப்பதில்லை.
இந்த வார்த்தையைக்
கேட்டாலோ, படித்தாலோ அடி வயிற்றிலிருந்து கோபம் பீரிட்டுக் கொண்டு வருகிறது. இவர்களும் ஒரு தாய் வயிற்றில் பிறந்தவர்கள்
தானே!. இவர்களுக்கும் அக்கா, தங்கை, மகள்
எல்லோரும் இருப்பார்கள் தானே. சமீபகாலமாக இந்தப் பொல்லாதவர்களின் பார்வை பிஞ்சுக்
குழந்தைகளின் மேலும் பட ஆரம்பித்திருக்கிறது.
என்ன கொடுமை இது.
முன்பெல்லாம்
ஒரு சின்ன பெண் குழந்தையைப் பார்த்தால், ஆஹா எவ்வளவு அழகாக இருக்கிறது என்றோ,
எவ்வளவு அழகாக சிரிக்கிறது, குழந்தைக்கு சுத்திப் போடச் சொல்லணும் என்றெல்லாம்
நினைப்பேன்.
ஆனால்
இப்பல்லாம் ஒரு சிறிய பெண் குழந்தையைப் பார்த்தால், வயிற்றிலிருந்து பந்து போல் ஒரு பீதியும், இறைவா
இந்தக் குழந்தை நல்லபடி வளர்ந்து நல்லா இருக்கணுமேங்கற கவலையும்தான் மேலோங்குகிறது,
அது எந்தக் குழந்தையா இருந்தாலும், யாரோட குழந்தையா இருந்தாலும். கொஞ்சம் வளர்ந்த குழந்தைகளுக்காவது
ஜாக்கிரதையாக இருக்க சொல்லிக் கொடுக்கலாம். ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு என்ன
சொல்லித் தருவது.
அதிலும்
சில இடங்களில் சில ஆசிரியர்கள், சொல்ல வார்த்தையே இல்லை. மாதா, பிதா, குரு, தெய்வம் என்று இவர்களை
தெய்வத்தை விட உயர்ந்தவர்களாக சொல்லப்பட்டிருப்பது இவர்களுக்குத் தெரியாதா? சிறிய
கிராமங்களில் குறைவான பிள்ளைகள் படிக்கும் பள்ளிக்கூடங்களுக்கு பெண் குழந்தைகளை
அனுப்பக்கூட பயப்படுகின்றனர்.
நண்பர்
திரு T.N. MURALIDHARAN அவர்கள் ’மூங்கில் காற்று’ என்ற வலைத் தளத்தில் பெண் குழந்தைகளை எப்படி பாலியல்
தொல்லைகளில் இருந்து தப்பிக்க தயார் படுத்த வேண்டும் என்று அருமையாக சொல்லி
இருக்கிறார்.
http://tnmurali.blogspot.com/2013/03/children-sexual-abuse-awareness.html
இந்தப் பதிவைப் படிப்பவர்கள் முடிந்தவரை மற்றவர்களுக்கும்
இதை எடுத்துச் சொல்லுங்கள்.
பாலியல் தொல்லைகள்-குழந்தைகளை இப்படிப் பழக்குவீர்!
குழந்தைகள் மீதான பாலியல் தொல்லைகள் வன்முறைகள் பற்றி நாளிதழ்களில் செய்திகள் வராத நாட்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். நாளுக்கு நாள் இவை அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக உள்ளது, பல காலமாக இது போன்ற சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன என்றாலும் சமீப காலங்களில்தான் அதிகமாக வெளியே தெரியவருகிறது. இன்னும் பல சம்பவங்கள் வெளியில் சொல்லாமல் மறைத்து வைக்கப்படுகின்றன. பல சமயங்களில் குழந்தைகள் இது போன்ற தொல்லைகளுக்கு ஆட்படும்போது வெளியில் சொல்வதில்லை. காரணம் இதை செய்பவர்கள் மிகவும் தெரிந்தவர்கள் குடும்ப நண்பர்கள், நெருங்கிய உறவினர்கள், ஆசிரியர்கள், வடிவங்களில் இருப்பதுதான். சில நேரங்களில் அதிக நம்பிக்கை வைத்து அடுப்படி வரை அனுமதிக்கும் நபர் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதை கேள்விப் பட்டிருப்போம்.
எங்கேயோ எப்போதோ நடக்கிறது. நமக்கு அப்படியெல்லாம் நடக்காது என்று அலட்சியத்துடன் இருந்துவிட முடியாது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை எச்சரிக்கையுடன் கவனிப்பது மட்டுமல்லாமல் குழந்தைகளுடன் விளையாட்டாகப் பேசி பள்ளியில், பள்ளிக்கு செல்லும் வழியில், வீட்டில் குழந்தை தனித்திருக்கும் சந்தர்ப்பங்களில் என்ன நடந்தது என்பதை கேட்டு தெரிந்து கொள்ளவேண்டும். குழந்தைகளுடைய அன்றாட நடவடிக்கைகளில் திடீர் மாற்றம் ஏதேனும் தென்படுகிறதா என்பதையும் கவனிக்க வேண்டும்.
நம் சமூகத்தில் ஒருவரை ஒருவர் தொட்டுப் பேசுவது இயல்புதான். என்றாலும் பெண்குழந்தைகளை சாதாரணமாக தொட்டுப் பேசுவதற்கும் தகாத எண்ணங்களோடு தொடுவதற்கும் உள்ள வித்தியாசங்களை அம்மா அல்லது பாட்டி போன்ற பெரியவர்கள் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். Good Touch எது Bad Touch எது என்பதை குழந்தைகள் உணர கற்றுக் கொடுக்கவேண்டும் . குழந்தைகள் அதை உணர்ந்து எச்சரிக்கையுடன் நடந்து கொண்டால் பல அசம்பவிதங்களில் இருந்து தப்பிக்க முடியும். அதை உணர்த்த வேண்டியது பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் கடமையாகும்.
தொடுதலின் வகைகள்:
தொடுதலின் வகைகள்:
- பாதுகாப்பான தொடுதல்: இந்த வகை தொடுதலில் குழந்தைகள் பாதுகாப்பாக உணர்வார்கள், தாயின் அணைப்பு, தந்தையின் அரவணைப்பு, தாத்தா பாட்டியின் அன்பான தொடுதல்,தட்டிக் கொடுத்தல், போன்றவை.
- பாதுகாப்பற்ற தொடுதல்: தள்ளி விடுதல், எட்டி உதைத்தல், கிள்ளுதல், அடித்தல் , பெரும்பாலும் சக நண்பர்கள், தோழிகளாலும், விளையாட்டின் போதும் நிகழ்வது. இவ்வகைத் தொடுதல் வலியையும் காயத்தையும் ஏற்படுத்தக் கூடியவை, இவையும் தவிர்க்கப் பட வேண்டியவையே!
- தேவையற்ற தொடுதல்: இதுதான் ஆபத்தானது. இது பாதுகாப்பானது என்றே குழந்தைகள் நினைக்கக் கூடும். நன்கு தெரிந்த நபராக இருந்தாலும் குழந்தைகளின் உடலில் கண்ட இடங்களை தொடுவது சரியல்ல என்பதை குழந்தைகளுக்கு உணர்த்த வேண்டும்.
தொடுதல் விதி
எந்த உறுப்புகள் உன் உள்ளாடைகளால் மறைக்கப் பட்டுள்ளதோ அவைதான் உன் தனிப்பட்ட உறுப்புகள்.உன் உடல் ஆரோக்கியத்திர்காகத் தவிர வேறு காரணங்களுக்காக அவற்றை வேறு காரணங்களுக்காக மற்றவர்கள் தொடுவதோ பார்ப்பதோ அதைப் பற்றிப் பேசுவதோ சரி இல்லை.
கட்டியணைப்பது
உன் மனசுக்கு பிடிச்சவங்க உன்னை கட்டி பிடிச்சிகிட்டாலோ, முத்தம் குடுத்தாலோ உனக்கு சந்தோஷமாகூட இருக்கும்.அப்படி செஞ்சவங்க அதை ரகசியமா வச்சிருக்கச் சொன்னா உடனே அம்மா கிட்டயோ அல்லது நம்பிக்கையான பெரியவங்ககிட்டயோ சொல்லிடனும்
பரிசு
ரகசியம்
தொடுதல் பற்றிய ரகசியம் நல்லதல்ல. தொடுதல் விதிகளை மீற முயற்சி செய்தாலோ அல்லது உன்ன ரகசியமா வச்சுக்க சொன்னா அதை உடனே நீ நம்பற பெரியவங்க கிட்ட சொல்லணும்
சொல்லிவிடு
உன்மீது தவறு இல்லை: தொடுதல் விதி மீறி சிலர்உன்னை காயப் படுத்தினால் அது உன் தவறு இல்லை.சில சமயங்களில் உன்னால் "வேண்டாம்"என்று சொல்ல முடியவில்லை என்றாலோ அல்லது அந்த இடத்தில் இருந்து விலகிச் செல்ல முடியவில்லை என்றாலோ அல்லது மிகவும் பயமாக இருந்தாலோ ஒன்று மட்டும் நினைவில் வைத்துக்கொள். காயப்படவேண்டும் என்று நீ விரும்பவில்லை.அதற்கு நீ காரணமும் இல்லை.உன்னால் எப்போது மற்றவரிடம் சொல்ல முடியுமோ அப்போது சொல்லலாம்.
மேற்கூறிய அனைத்தையும் குழந்தைகளுக்கு தயங்காமல் சொல்லிக் கொடுக்க வேண்டும். இவை பெண் குழந்தைகள் மட்டுமல்ல ஆண் குழந்தைகளுக்கும் தெரிவிக்கவேண்டிய அவசியம் உள்ளது.
அரசுபள்ளிகளில் படிக்கும் பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை பற்றிய விழிப்புணர்வுப் பயிற்சிகூட அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம் அளிக்கப் பட்டது . இந்தப் பிரச்சனை அடித்தட்டு மக்கள், நடுத்தர மக்கள், வசதி படைத்தோர் அனைவருக்கும் பொதுவானதே!
இந்த தகவல்கள் பயனளிக்கும் என்று நம்புகிறேன். இவற்றை குழந்தைகளின் கவனத்திற்கு உரிய வழியில் கொண்டு செல்ல வேண்டும் என்பதே என் விருப்பம்.
இது தொடர்பாக உங்கள் கருத்துக்களை அக்கறையுடன் எதிர்பார்க்கிறேன்.
.
Sunday, 24 March 2013
Subscribe to:
Posts (Atom)









