Showing posts with label எண்ணத்தைச் சொல்லுகிறேன்.. Show all posts
Showing posts with label எண்ணத்தைச் சொல்லுகிறேன்.. Show all posts

Saturday, 20 July 2013

பிஞ்சு நெஞ்சில் நஞ்சு

குழந்தைகளுக்கான குட்டிக் கதைகள் என்ற தலைப்பில் ஒரு பிரபல பத்திரிகையில் வெளி வந்திருந்த கதைகளை இங்கு கொடுத்திருக்கிறேன்.

ஏற்கனவே ஊடகங்கள் முழு மூச்சுடன் தேவையில்லாத விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருக்கின்றன.   இது போன்ற கதைகள் குழந்தைகளுக்குத் தேவையா?

படித்து உங்கள் மேலான கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்.






ஏமாற்றுப் பணம்


ஒரு கிராமத்துக்கு வந்து சேர்ந்த ஒரு சாமியார், தரையில் துண்டை விரித்து, சில சீட்டுகளைப் பரப்பினார்.  கூட்டம் கூடி வர, ‘பக்தர்களே...உங்களுக்கு மாபெரும் நற்செய்தி!  இதோ என்னிடம் பாவமன்னிப்பு சீட்டுகள் விற்பனைக்கு உள்ளன.  ஒரு சீட்டு நூறு ரூபாய்!  நீங்கள் இதுவரை எவ்வளவு பாவம் செய்திருந்தாலும், இதைக் கொண்டு போனால்..நிச்சயம் சொர்க்கத்தில் இடம் உண்டு.  இதுதான் அதற்கான நுழைவுச் சீட்டு! என்று கூவினார்.  எல்லோரும் போட்டிப் போட்டுக் கொண்டு சீட்டை வாங்க, பணம் குவிய, சாமியாருக்கு ஒரே குஷி.
     அடுத்தபடியாக, ‘என்னிடத்தில் இன்னொரு சீட்டும் உள்ளது.  நீங்கள் இனி செய்யப் போகும் பாவத்தையும் மன்னிக்கக் கூடிய அந்த சீட்டின் விலை இருநூறு ரூபாய்’ என்று சொல்லி அதையும் விற்று பணத்தை அள்ளினார் சாமியார்.
     சாமியார் புறப்பட எத்தனித்த சமயத்தில் வந்து சேர்ந்த ஒருவன், இரண்டு சீட்டுகளையும் வாங்கிய கையோடு, கத்தியைக் காட்டி மிரட்டி,மொத்த பணத்தையும் சுருட்டிக் கொண்டு ஓடத் தொடங்கினான்.  அப்போது, ‘உனக்கு நரகம்தான்’ என்று சாமியார் சாபம் விட, ‘நான் தான் இருநூறு ரூபாய் சீட்டையும் வாங்கிட்டேனே.  உன் சாபம் பலிக்காது!’ என்றபடியே ஓட்டத்தைத் தொடர்ந்தான்.
குறுக்கு வழியில பணம் சம்பாதிப்பது எப்படி என்று சொல்லிக் கொடுக்கிறார்களோ?

*****

அநியாய வட்டி அழிவைத் தரும்!

     ஓர் ஊரில், ஒரு பேராசைக் கிழவி இருந்தாள்.  அவள் எப்போதுமே அநியாய வட்டிக்குத்தான் கடன் கொடுப்பாள்.  பக்கத்து ஊர்க்காரர் இருவருக்கு பணநெருக்கடி வரவே, கிழவியைத் தேடி வந்தார்கள்.  “நூறு ரூபாய்க்கு, மாசம் 20 ரூபா வட்டி, முதல் மாத வட்டியை எடுத்துக்கிட்டு தான் பணம் தருவேன்” என்று கறாராக சொன்னாள் கிழவி.
     ”இவ்ளோ வட்டியா... இது அநியாயம்... எனக்கு கடனே வேண்டாமென்று!” ஒருவன் விலகி நிற்க, அடுத்தவனோ, எதையும் யோசிக்காமல் கடனை வாங்கிக் கொண்டான்.
     வெளியில் வந்த்தும், :ஏண்டா இப்படி அநியாய வட்டிக்கு கடன் வாங்கினே? இப்போ பாரு... உனக்கு இருபது ரூபா நஷ்டம்!” என்று ஒருவன் சொல்ல...
     ”அட போப்பா! எனக்கு இருபது ரூபாதான் நஷ்டம் ... அந்த கிழவிக்கு எண்பது ரூபா நஷ்டம்.  நான் அசலை திருப்பிக் கொடுத்தாதானே!” என்றான் மற்றவன்.

 ஏமாற்றுவது எப்படி என்று சொல்லித் தருகிறார்களோ?

*****

பிசினாரித்தனம் கூடாது!.

     ஒரு கஞ்சன் வீட்டுக்கு, இன்னொரு கஞ்சன் விருந்துக்குப் போனான்.  விருந்தில் ரசம் ஊற்ற, அதை சாப்பிட்டுவிட்டு ”செம சூப்பர்!” என்றான்.  வீட்டுக்கார கஞ்சன் சொன்னான், “எங்க பலசரக்குக் கடையில் மிளகை அள்ளி அள்ளி வியாபாரம் செஞ்ச பிறகு, கையை கழுவுன தண்ணியில செய்த ரசம்தான் இது... அதான் இவ்வளவு ருசியா இருக்கு!” என்று.  இதைக் கேட்டவுடன் விருந்துக்கு வந்த கஞ்சன் டென்ஷனாகி, “அடப்பாவிங்களா! இப்படி மிளகுத் தன்ணிய யாராவது முழுவதும் வீண் செய்வாங்களா? ஒரேயடியா ஒரே நாளில் இப்படி கையை கழுவுனதுக்கு பதிலாக, ஒரு நாளைக்கு ஒரு விரல் வீதமாக, அஞ்சு நாளைக்கு ரசம் வெச்சுருக்கலாமே” என்று சொல்லிவிட்டுப் போய் விட்டான்.
     சிக்கனம், கஞ்சத்தனம், பிசினாரித்தனம் ஆகிய மூன்றுமே வேறு வேறு!
சிக்கனம் சீர்மை தரும்... கஞ்சத்தனம் சீரழிவைத்தரும்... பிசினாரித்தனம் பிசாசையே கூட்டி வருமாம்.!

 என்ன ஒரு தத்துவம்


*****

குலப் பெருமை!
ஓர் ஊரில், ஒரு புளுகுமூட்டை இருந்தான்.  அவனுடைய தொழிலே எதற்கெடுத்தாலும் புளுகுவதுதான்.  இதைப் பெருமையாக வேற நினைத்து சந்தோஷப் பட்டுக் கொண்டிருந்தான்.  ஆனால், இதற்கு நேர் எதிரான குணங்களோடு... ரொம்ப சாதுவாக, பயந்த சுபாவத்துடன் வளர்ந்தான் அவனுடைய 12 வயது மகன்.  இது, அப்பன்காரனை ரொம்பவே வெசனப்பட வைத்த்து, “ஐயோ, புளுகத் தெரியாக இப்படித் தறுதலையா திரியுறானே! நம்ம் குடும்பத்துப் பெருமையைக் கெடுத்துடுவான் போலிருக்கே! என்று சொல்லி, மகனை அடிக்கவும் செய்தான்.
’அப்பா அடித்து விட்டாரே...’ என்கிற கவலையிலும், யோசனையிலும் மகன் மூழ்கிக் கிடக்க, அவனைப் பார்க்க அப்பன்காரனுக்கு பாவமாகிவிட்ட்து.  பையனை குஷிப்படுத்துவதற்காக, தன் தோள் மீது அவனை உட்கார வைத்துக் கொண்டு, அடுத்த ஊர் திருவிழாவுக்கு அழைத்துச் சென்றான்.
வழியில் ஆறு குறுக்கிட, தண்ணீரில் இறங்கி அதைக் கடக்க ஆரம்பித்தான்.  அப்போது, தண்ணீரிலிருந்து ‘டப்’ என்றொரு சத்தம்.
‘என்னடா சத்தம்?’
”ஒண்ணுமில்லேப்பா!தண்ணியில ‘டப்’னு கைய விட்டேன்.  மீன் மாட்டிக்கிச்சு.  அதை அப்படியே பொரிச்சுத் தின்னுட்டேன்!.

மகன் இப்படி சொன்னதைக் கேட்ட்தும்... “ஆகா நம்ம குலப்பெருமை அழியாதுடா மகனே!” என்று சந்தோஷத்தில் ஆட்டம் போட்டான் அப்பன்.
 பிள்ளை புளுகவில்லை என்று வருத்தப்படும் அப்பா.
ரொம்ப அருமை.


*
***
*****
***
*

Tuesday, 28 May 2013

தாய்மை

நாங்கள் ஊட்டிக்குச் சென்ற போது, பைக்காரா சென்று விட்டு ஊட்டிக்கு காரில் திரும்பி வந்து கொண்டிருந்தோம்.   வழியில் ஒரு இடத்தில் இறங்கி குரங்குகளுக்கு வேர்க்கடலையும், கேரட்டும் வாங்கிப் போட்டோம்.  கடலை விற்ற பெண்மணியின் மகன் அப்பொழுது அங்கு வந்தவர் எங்களிடம், ”அதோ அங்கே உட்கார்ந்திருக்கும் குரங்குக்கு போடுங்க.  அது மூணு நாளா செத்த குட்டியை துக்கிக்கிட்டு அலையுது.  நாங்களும் மூணு நாளா அத எப்படியாவது வாங்கி புதைக்கணும்ன்னு நினைக்கிறோம், முடியவே இல்லை” என்றார்.  நாங்கள் அசந்து விட்டோம்.   பிறகு அந்தக்குரங்கு செத்த குட்டியையும் தூக்கிக் கொண்டு ரோடிற்கு வந்தது.  அதன் முகத்தில் சொல்லொணா துயரம்.  மேலும் அவர் சொன்னது, “அந்தத் தாய்க் குரங்கு, குட்டிக்குரங்கு இறந்த உடன் அதன் வாயில் தன் வாயை வைத்து ஊதியதாம்”.   ஒரு வேளை குட்டிக்கு உயிர் வந்து விடும் என்று ஊதி இருக்குமோ?
அந்தக் குரங்கின் தாய்மை உணர்வைக்கண்டு வியந்துதான் போனோம்.



Sunday, 24 March 2013

தினகரன் வசந்தம்

                                           

 தினகரன் வசந்தத்தில் என் கருத்து.
 

தாய்மொழியில் பேசுவது
 
தன் கையால் சாப்பிடுவது போல.
 
பிற மொழியில் பேசுவது
 
ஸ்பூனால் சாப்பிடுவது போல....
 
ஏன் சொல்றேன்னா......
 
ஸ்பூனால் சாப்பிடும்போது
 
வயிறும் நிறையாது,
 
மனசும் நிறையாது!

 
~~ஜெயந்தி ரமணி~~

                        

Thursday, 21 March 2013

குங்குமம் தோழி பேஸ்புக்



Add caption
                                   குங்குமம் தோழி பேஸ்புக்கில் என் கருத்துக்கள்.

Monday, 17 December 2012

மாயன் காலண்டராவது மச்சான் காலண்டராவது


மாயன் காலண்டராவது
மச்சான் காலண்டராவது

22-12-2012 அன்று காலை
வழக்கம் போல்
அலாரம் அடித்த்தும்
அதன் தலையில் தட்டி
பத்து நிமிடம்
செல்லத்தூக்கம் போட்டு எழுந்து
                         
வாசல் தெளித்து
மார்கழி மாதம் என்பதால்
தம்மாத்தூண்டு கோலம் போடாமல்
கொஞ்சம் பெரிய கோலம் போட்டு

பரபரவென காபி போட்டு, சமைத்து,
ஆபீசுக்கு மணியாச்சு, மணியாச்சு
என்று பாட்டு பாடி

ரயில் நிலைய
படி ஏறி வரும் போதே
ஒரு ரயிலை விட்டு விட்டு,
’நான் விட்ட ரயில்
காலியாகப் போச்சே’ என்று புலம்பி
அடுத்த ரயில் வர நேரமாக
ரயில்வேயைத் திட்டி

எக்மோரில் ஆள் சேர்த்து
ஆட்டோ பிடித்து
அலுவலகம் சென்று

‘ஹலோ, குட்மார்னிங்’ என்று
தொலைபேசியில் பதிலளித்து

நடுவில் வீட்டிலிருந்து,
’வாரம் ஒரு நாள்
எதுலயாவது உப்பு போட மறந்துடுவயே,
இன்னிக்கு ரசத்துல உப்பு இல்ல,’
என்று திட்டு வாங்கி

மாலை பழையபடி
ஆட்டோ, ரயில், ஆட்டோ
என்று வீடு வந்து சேர்ந்து

மீண்டும் சமையலறையில்
நுழைந்து வேலை முடித்து,
சூப்பர் சிங்கர் பார்த்துக்கொண்டே சாப்பிட்டு

நடுவில் என் ஸ்டேட்டஸுக்கு
யார், யார் லைக், கமெண்ட்
போட்டிருக்காங்கன்னு பார்த்து

நல்ல நண்பர்களின்
நல்ல கருத்துக்களுக்கு
லைக்கும், கமெண்டும் போட்டு

படுக்கப்போகும்போது
பேத்தி எங்கள் படுக்கையறையில்
வந்து கை, கால் உதறி விளையாடி,
ஆ, ஊ என்று பேசி, கண் உருட்டி,
விட்டத்தைப் பார்த்து               
வண்ணத் தொலைக்காட்சி
பார்ப்பது போல் ரசிப்பதை
ரசித்து

பனிரெண்டு மணிக்கு மேல்
மறுநாள் எழ அலாரம் வைத்துவிட்டு
தூங்கச் செல்வேன்.

மாயன் காலண்டராவது
மச்சான் காலண்டராவது
யார் ஜம்பமும்
இங்கு பலிக்காது..