Showing posts with label படித்தேன் ரசித்தேன் பகிர்ந்தேன்.. Show all posts
Showing posts with label படித்தேன் ரசித்தேன் பகிர்ந்தேன்.. Show all posts

Wednesday, 8 May 2013

சொன்னார்கள் / செய்தார்கள்




ஜவஹர்லால் நேரு ‘தனிமைத் தீவில் தள்ளப்பட்டால் என்ன செய்வீர்கள்?என்று கேட்டபோது, ‘புத்தகங்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்துவிட்டு வருவேன்என்று பதிலளித்தாராம்.

விவேகானந்தர் – ஒரு நூலகம் திறக்கப்படும்போது, ஒரு சிறைச்சாலை மூடப்படும்.

பெட்ரண்ட் ரஸல் என் கல்லறையில் மறக்காமல் எழுதுங்கள், இங்கே ஒரு புத்தகப் புழு உறங்குகிறதென்று.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ‘மனிதனின் மிகப் பெரிய கண்டு பிடிப்பு எது?என்று கேட்டபோது சற்றும் யோசிக்காமல் புத்தகம்என் பதிலளித்தாராம்.

தந்தை பெரியார் பெண்களிடம், கரண்டியைப் பிடுங்கி விட்டு புத்தகம் கொடுத்தால் போதும்’.

நெல்சன் மண்டேலா ‘வேறு எந்தச் சுதந்திரமும் வேண்டாம்.  சிறையில் புத்தக வாசிப்பை மட்டும் அனுமதிக்க வேண்டும்.

லெனின் ‘பிறந்த நாளுக்கு என்ன வேண்டும் என நாடு கேட்டபோது புத்தகங்கள் வேண்டும் என சற்றும் தயக்கமின்றி லெனின் கூறிட குவிந்த புத்தகங்கள் பல லட்சம்.   

பேரறிஞர் இங்கர்சால் குடும்பத்தை விட்டு வெளியேறுங்கள் என்று தூக்கியெறியப்பட்டபோது சென்ற இடம் நூலகம்.

சார்லி சாப்ளின் ஒவ்வொரு படமும் நடிக்க ஒப்புக்கொள்ளும் போது வரும் முன்பணத்தில் முதல் நூறு டாலருக்கு புத்தகம் வாங்குவாராம்.

வின்ஸ்டன் சர்ச்சில் ஒரு குழந்தைக்கு நீங்கள் வாங்கித்தரும் மிகச் சிறந்த பரிசு ஒரு புத்தகம்தான்.

மகாத்மா காந்தி ‘ஒரு கோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள்என்று கேட்டபோது ‘ஒரு நூலகம் கட்டுவேன் என்று பதிலளித்தாராம்.

அறிஞர் அண்ணா பம்பாய்க்கு விமானத்தில் போகாமல் காரில் மூன்றுநாள் பயணம் செய்து மெனக்கெட்டது ஏன்?என்று கேட்டபோது ‘பத்து புத்தகங்கள் படிக்க வேண்டி இருந்ததுஎன்றாராம்.

மார்டின் லூதர் கிங் ‘பயங்கரமான போராட்ட ஆயுதங்கள் எவை?என் கேட்கப்பட்டபோது, ‘புத்தகங்கள்தான்என்றாராம்.

டாக்டர் அம்பேத்கார் எங்கே தங்க விரும்புகிறீர்கள் என்று லண்டன் தோழர்கள் கேட்டபோது...  ‘நூலகத்திற்கு அருகில் உள்ள இடத்தில்என்றாராம்.

பகத்சிங் - தான் தூக்கிலிடப்படுவதற்கு ஒரு நிமிடம் முன்பு வரை வாசித்துக் கொண்டே இருந்தாராம்.

புத்தகங்களை நேசிப்போம் வாசிப்போம்.  




Friday, 28 September 2012

உலக மகா ஒற்றுமை






லிங்கன்

ஜான் எப். கென்னடி

காங்கிரசில் தேர்வானது
1846
1946
அமெரிக்க அதிபரானது
1860
1960
உதவியாளர் பெயர்
கென்னடி
லிங்கன்
சுடப்பட்டது
வெள்ளிக்கிழமை
வெள்ளிக்கிழமை
குண்டு பாய்ந்தது
தலையில்
தலையில்
கொலையாளி பிறந்தது
1839
1939
அடுத்த அதிபர் / பிறந்தது

ஆண்ட்ரூ ஜான்சன் 1808
லிண்டன் ஜான்சன் 1908
சுட்ட இடம்




ஒரு தியேட்டருக்குள் சுட்டு சேமிப்புக் கிடங்கில் ஒளிந்து கொண்டான்
சேமிப்புக் கிடங்கில் சுட்டு விட்டு தியேட்டரில் ஒளிந்து கொண்டான்
கொலையாளிகள் இருவருமே விசாரணைக்கு முன்பு கொல்லப்பட்டு விட்டனர்.