Tuesday 29 May 2012

பைந்தமிழ்ப் பாடல்கள்


முதல் பதிவு முழு முதற் கடவுள் பிள்ளையாரைப் பத்தி இருந்தால் நல்லா இருக்கும்ன்னு நினைத்தேன். 

என் மகள் இந்தப் படத்தை போட்டோ ஷாப்பில்  டிஜிட்டல் ஆர்ட் செய்து, ப்ளாஷில் அனிமேட் செய்து கொடுத்தாள்.

தொப்பையப்பனை கிண்டல் செய்ய அல்ல இராம கவிராயரின் இந்த அழகான பழந்தமிழ்ப் பாடலில் மயங்கி, (என்ன கற்பனை பாருங்கள் கவிஞருக்கு) இந்தப் பதிவைப் போடுகிறேன்.


தம்பியோ பெண் திருடி தாயாருடன் பிறந்த
வம்பனோ வெண்ணை திருடி மாயனாம் - அம்புவியில்
மூத்த பிள்ளையாரே முடிச்சவிழ்த்துக் கொண்டீரே
கோத்திரத்தி லுள்ள குணம்

ஒரு புலவர் உச்சிப் பிள்ளையார் கோவிலுக்குச் செல்லும் போது அவர் தன் வேட்டியில் முடிந்து வைத்திருந்த பணம் திருடு போய் விட்டதாம்.  பணம் போன வருத்தத்தில் புலவர் பிள்ளையாரைச் சாடுகிறார்.

உன் தம்பி முருகன் பெண் திருடி, உன் மாமன் மாயக் கண்ணன் வெண்ணை திருடி, அதே கோத்திரத்தில் வந்த நீ தான் என் வேட்டியில் இருந்து முடிச்சவிழ்த்து பணத்தை எடுத்துக் கொண்டாய் என்கிறார்.

உண்மையில் தந்தையின் கோத்திரத்தில்தான் பிள்ளைகள் வருவார்கள். பிள்ளையாரும், முருகனும், தந்தையின் (சிவனின்) கோத்திரமாகத் தானே இருக்க முடியும். பணம் பறி போன கோபத்திலும், துக்கத்திலும், புலவர் வெண்ணை திருடி என்று கண்ணனையும் ஒரே கோத்திரம் என்று திட்டுகிறார் பாருங்கள்.

எது எப்படி இருந்தால் என்ன? புலவரின் தமிழ்ப் புலமையை ரசிப்போம், தமிழை வளர்ப்போம்.

10 comments:

  1. அன்புச் சகோதரி...
    உங்கள் புது வலைப்பூ மகிழ்வலைகள் நிறைந்தது...
    தொடரட்டும் மகிழ்வலைகள்...!

    ReplyDelete
  2. மிக்க நன்றி திரு கவிநவன் அவர்களே.

    ReplyDelete
  3. Replies
    1. மிக்க நன்றி விஜி.

      Delete
  4. கோத்திரம் இடித்தாலும், புலவரின் புலமை ரஸிக்கும்படியாக உள்ளது.

    திருச்சி உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே குடியிருக்கும் எனக்கே இது புதிய தகவலாக உள்ளது.

    தங்களின் இந்த முதல் பதிவுக்கு என் அன்பான பாராட்டுக்குள். வாழ்த்துகள்.

    மேலும் நல்ல பயனுள்ள பதிவுகளாகக் கொடுத்து எழுத்துலகில் ஜொலிக்க என் அன்பான வாழ்த்துகள், மேடம்.

    அன்புடன்,
    VGK

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி கோபாலகிருஷ்ணன் சார்

      Delete
  5. //என் மகள் இந்தப் படத்தை போட்டோ ஷாப்பில் டிஜிட்டல் ஆர்ட் செய்து, ப்ளாஷில் அனிமேட் செய்து கொடுத்தாள்.//

    தங்கள் மகளுக்கு என் பாராட்டுக்களும், நன்றிகளும்.
    இதுபோலெல்லாம் செய்து கொடுக்க மகள் இருப்பது உங்களுக்கு யானை பலம் தான், தொடர்ந்து அசத்துங்கோ. VGK

    ReplyDelete
    Replies
    1. மகளிடம் உங்கள் பாராட்டுக்களை சேர்த்து விடுகிறேன்.

      Delete