Tuesday, 14 May 2013

ஆபிரஹாம் லிங்கன்


ஆபிரஹாம் லிங்கனின் தந்தை ஒரு செருப்புத் தைக்கும் தொழிலாளி. ஆனால் தனது  உழைப்பாலும் முயற்சியாலும் அமெரிக்க ஜனாதிபதியானார் லிங்கன். அவரை அவமானப்படுத்தும் எண்ணத்துடன் அமெரிக்கப் பாராளுமன்றத்தில் ஒருவர் பேசினாராம். ”மிஸ்டர் லிங்கன், உங்களைப் பல பேர் இங்கே பாராட்டிப் பேசினார்கள். அது குறித்து நீங்கள் மகிழ்ந்து விட வேண்டாம். உங்கள் பழைமை, வறுமை குறித்து நான் நினைவூட்ட வேண்டும். உங்கள் அப்பா தைத்துக் கொடுத்த ஷூ இன்னும் என் காலில் இருக்கிறது. ஞாபகம் இருக்கட்டும்” என்று லிங்கனின் தந்தை செருப்புத் தைப்பவர் என்று குத்திக் காட்டினாராம்.

ஆபிரஹாம் லிங்கனோ பதற்றப்படாமல் “நண்பரே, என் தந்தை மறைந்து பல காலம் ஆயிற்று, ஆனால் அவர் தைத்துக் கொடுத்த காலணி இன்னும் உங்களிடம் உழைக்கிறது என்றால் என்ன பொருள்? அவர் எவ்வளவு சிறந்த தொழிலாளி என்பது தெரிகிறது அல்லவா? அப்படி ஒரு சிறந்த தொழிலாளியின் மகனாகப் பிறந்தது குறித்து நான் பெருமை அடைகிறேன்.அது மட்டுமல்ல. இப்போழுதும் உங்கள் செருப்பு கிழிந்து போனால் என்னிடம் கொடுங்கள். நான் அதைச் சரி செய்து தைத்துத் தருவேன். எனக்கு செருப்பு தைக்கவும் தெரியும், நாடாளவும் தெரியும். ஒரு முக்கியமான விசயம், இரண்டுமே நன்றாகத் தெரியும்” என்று ஒரு போடு போட்டாராம்.

Monday, 13 May 2013

DIGITAL ART BY MY DAUGHTER

இது என் மகள் சந்தியா ரமணியின் DIGITAL ART

இதற்கு அவளுக்கு MAAC INSTITUTE CHENNAI இடமிருந்து இரண்டாம் பரிசு கிடைத்தது.


RECEIVING THE AWARD FROM 
Mr. PETE DRAPER, 
VISUAL EFFECTS SUPERVISOR, 
NAAN - E FILM


Saturday, 11 May 2013

அன்னையர் தின வாழ்த்துக்கள்.

தானே வந்து

தரணியெங்கும்

தாங்க முடியாதென்று

தாயைப் படைத்தான்

தாயுமானவன்

தாயவள் பங்கு

தினந்தோறும் இருந்தாலும்

தனியாக ஒரு நாளாவது

தட்டாமல் கொண்டாடுவோம்

தாயைப் போற்றுவோம்

தாய்மையைப் போற்றுவோம்

தட்டாமல் போற்றுவோம்

தப்பாமல் போற்றுவோம்




Wednesday, 8 May 2013

சொன்னார்கள் / செய்தார்கள்




ஜவஹர்லால் நேரு – ‘தனிமைத் தீவில் தள்ளப்பட்டால் என்ன செய்வீர்கள்?” என்று கேட்டபோது, ‘புத்தகங்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்துவிட்டு வருவேன்’ என்று பதிலளித்தாராம்.

விவேகானந்தர் – ஒரு நூலகம் திறக்கப்படும்போது, ஒரு சிறைச்சாலை மூடப்படும்.

பெட்ரண்ட் ரஸல்– ’என் கல்லறையில் மறக்காமல் எழுதுங்கள், இங்கே ஒரு புத்தகப் புழு உறங்குகிறதென்று’.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் – ‘மனிதனின் மிகப் பெரிய கண்டு பிடிப்பு எது?’ என்று கேட்டபோது சற்றும் யோசிக்காமல் ’புத்தகம்’ என் பதிலளித்தாராம்.

தந்தை பெரியார் – ’பெண்களிடம், கரண்டியைப் பிடுங்கி விட்டு புத்தகம் கொடுத்தால் போதும்’.

நெல்சன் மண்டேலா – ‘வேறு எந்தச் சுதந்திரமும் வேண்டாம்.  சிறையில் புத்தக வாசிப்பை மட்டும் அனுமதிக்க வேண்டும்.’

லெனின் – ‘பிறந்த நாளுக்கு என்ன வேண்டும் என நாடு கேட்டபோது புத்தகங்கள் வேண்டும் என சற்றும் தயக்கமின்றி லெனின் கூறிட குவிந்த புத்தகங்கள் பல லட்சம்.   

பேரறிஞர் இங்கர்சால் – குடும்பத்தை விட்டு வெளியேறுங்கள் என்று தூக்கியெறியப்பட்டபோது சென்ற இடம் நூலகம்.

சார்லி சாப்ளின் – ஒவ்வொரு படமும் நடிக்க ஒப்புக்கொள்ளும் போது வரும் முன்பணத்தில் முதல் நூறு டாலருக்கு புத்தகம் வாங்குவாராம்.

வின்ஸ்டன் சர்ச்சில் – ஒரு குழந்தைக்கு நீங்கள் வாங்கித்தரும் மிகச் சிறந்த பரிசு ஒரு புத்தகம்தான்.

மகாத்மா காந்தி – ‘ஒரு கோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள்’ என்று கேட்டபோது ‘ஒரு நூலகம் கட்டுவேன்’ என்று பதிலளித்தாராம்.

அறிஞர் அண்ணா – ’பம்பாய்க்கு விமானத்தில் போகாமல் காரில் மூன்றுநாள் பயணம் செய்து மெனக்கெட்டது ஏன்?’ என்று கேட்டபோது ‘பத்து புத்தகங்கள் படிக்க வேண்டி இருந்தது’ என்றாராம்.

மார்டின் லூதர் கிங் – ‘பயங்கரமான போராட்ட ஆயுதங்கள் எவை?’ என் கேட்கப்பட்டபோது, ‘புத்தகங்கள்தான்’ என்றாராம்.

டாக்டர் அம்பேத்கார் – ‘எங்கே தங்க விரும்புகிறீர்கள்’ என்று லண்டன் தோழர்கள் கேட்டபோது...  ‘நூலகத்திற்கு அருகில் உள்ள இடத்தில்’ என்றாராம்.

பகத்சிங் - தான் தூக்கிலிடப்படுவதற்கு ஒரு நிமிடம் முன்பு வரை வாசித்துக் கொண்டே இருந்தாராம்.

புத்தகங்களை நேசிப்போம்… வாசிப்போம்.  




வீடு தேடி வரும் நூலகம்

 புத்தகங்களுக்காக நூலகத்தைத் தேடி நாம் செல்லும் காலம் போய், புத்தகங்களே நம் வாசல் தேடி வருகிறது.


புத்தகங்களை நேசிப்போம்… வாசிப்போம்.


இப்படி நூலகத்திற்குப் போய்  தேடித் தேடி சலித்து, தலை சுற்றி உட்கார வேண்டியது இல்லை.  உங்களுக்குத் தேவையான புத்தகத்தின் தலைப்பை சொன்னால் புத்தகமே உங்கள் வீடு தேடி வந்து விடும். 



இன்றைய குழந்தைகள் தொலைக்காட்சி, வீடியோ கேம், இணைய தளம் என்று தங்கள் விடுமுறையைக் கழிக்கின்றனர்.  இந்தக் குழந்தைகளுக்காகவே ஒரு வீடு தேடி வரும் நூலகத்தை அமைத்திருக்கும் திரு சேதுராமன், மடிப்பாக்கம் அவர்களின் பேட்டி தினமலரில் 05.05.2013 ஞாயிறு அன்று வெளிவந்திருக்கிறது.  உங்களுக்காக இங்கு மீண்டும் திரு சேதுராமன் அவர்களின் பேட்டியை கொடுத்திருக்கிறேன்.  படித்து பயன் பெறுங்கள் நண்பர்களே.      



”ஒரு இனத்தை அழிக்க வேண்டும் என்றால் முதலில் மொழியை அழிக்க வேண்டும் என்றார் ஹிட்லர். மொழியே சமுதாயத்தின் அடையாளம். மொழியைமேம்படுத்தும் இடம் நூலகம்.


நூலகத்தை அமைப்பது சாதாரணமல்ல. மொழியின் மீதும், சமுதாயத்தின் மீதும் தீராத காதலும், அக்கறையும் கொண்ட மனிதர்களால் தான், நூலகத்தை அமைக்க முடியும். தனி மனிதராய், சமுதாயத்தின் மீது கொண்ட ஆதங்கத்தால், சேதுராமன்,40, மடிப்பாக்கத்தில் "ரீடர்ஸ் கிளப்' என்ற பெயரில் குழந்தைகளுக்காகவே ஒரு நூலகத்தை உருவாக்கியுள்ளார். 
அவரோடு உரையாடியதில் இருந்து..


குழந்தைகளுக்கு என தனியாக ஒரு நூலகம் அமைக்க காரணம்?


நான் கார்ப்பரேட் கம்பெனியில், 60 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கினேன். நிம்மதியான வாழ்க்கை, கை நிறைய சம்பளம், சொகுசான கார் என, ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்தேன்.


சம்பளம்... சம்பளம்... என பந்தய குதிரை போல் ஓடிக்கொண்டே இருந்தேன். ஒருநாள் குழந்தைகள் படிப்பு பற்றி யோசிக்கும் போது தான், அவர்கள் இணையதளம், வீடியோ கேமில் மூழ்கியிருந்தது தெரிந்தது.குழந்தைகளின் கவனத்தை திருப்ப, புத்தக வாசிப்பை முறைப்படுத்தினோம். ஆரம்பத்தில் புத்தகம் படிப்பது போல், நடித்து வீடியோகேம்விளையாடினர்.


தொடர்ந்து கண்காணித்தால், புத்தக வாசிப்பில் மூழ்கினர். அவர்களின் வயதுக்கேற்ப, தேவையான புத்தகங்களை தேர்ந்தெடுத்து படிக்க கொடுத்தோம்.பின், தினசரி இதழ்கள், வரலாற்று புத்தகங்கள் என, வாசிப்பு பழக்கம் அதிகரித்தது. என் குழந்தைகள் போன்ற சமவயது குழந்தைகளோடு பேசியதில், குழந்தைகளின் உலகம் பற்றி அறிந்தோம். குழந்தைகளுக்கான நூலகம் அமைக்க வேண்டும் என, தோன்றியது.


தற்போது, 10 ஆயிரம் புத்தகங்கள் அடங்கிய நூலகத்தை உருவாக்கிஉள்ளேன். குழந்தைகள், மாணவர்கள், பெரியோர் என, அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற புத்தகங்கள் உள்ளன.


உங்கள் நூலகத்தின் சிறப்பு என்ன?


புத்தக வாசிப்பாளர்களுக்காக, www.readersclub.co.in தனி இணைய தளத்தை உருவாக்கியுள்ளோம். எங்கள் இணையதளத்தில் பதிவு செய்து, தேவையான புத்தகத்தை தேர்ந்தெடுத்து, வாசிப்பாளர்களின் முழு முகவரி மற்றும் தொலைபேசி எண்ணை அனுப்பினால் போதும். அடுத்த இரு நாட்களுக்குள், வீடு தேடி புத்தகம் வரும். அதற்காக, தனி கட்டணம் கிடையாது. வாசித்து முடித்ததும், வீடு தேடி வந்து பெற்று கொள்வர். நூலகத்தை தேடி எங்கும் செல்ல வேண்டியதில்லை.


இதற்காக, மாத சந்தா, 100 ரூபாய் வரை வாங்கப்பட்டது. தற்போது, புத்தக வாசிப்பு தினத்தை ஒட்டி, குழந்தைகளுக்கு 60 ரூபாயும், பெரியவர்களுக்கு 75 ரூபாயும் மாத சந்தாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், வாரம் ஒரு புத்த கம் என்றமுறையில், புத்தக வாசிப்பை முறைப்படுத்த உள்ளோம்.


புத்தக வாசிப்பு பற்றிய உங்கள் கருத்து என்ன?


புத்தக வாசிப்பு மூலம், சமுதாயத்தின் பிரச்னைகள், சம்பவங்களை அறிந்து கொள்ள முடியும். படிப்பதை காட்டிலும், படித்ததை நண்பர்கள் வட்டத்தில் பகிர்ந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு குடிமகனும் சமுதாயத்திற்கு செய்ய வேண்டிய, தனி மனித கடமை உள்ளது.அதை அறிந்து, தனிப்பட்ட வாழ்க்கையோடு, சமுதாயத்திற்கும் பயனுள்ள வகையில், ஏதாவது செய்ய வேண்டும். இன்றைய இளைய சமுதாயம், புத்தக வாசிப்பில் பெரிதளவு அக்கறை காட்டுவதில்லை. இது, ஆரோக்கியமான வளர்ச்சி அல்ல.


மேலும், ஒருவர் படித்த புத்தகங்களை மற்றவர்களுக்கு கொடுத்து படிக்க உதவ வேண்டும். உங்களிடம், ஏதாவது படித்து முடித்த புத்தகங்கள் இருந்தால், என் நூலகத்திற்கு கொடுங்கள். உங்கள் புத்தகங்கள், பலருக்கும் பயன்பட இது ஒரு வாய்ப்பாக அமையட்டும்."ரீடர்ஸ் கிளப்' தொடர்புக்கு: 99621 00032/ 93806 55511”




Friday, 19 April 2013

சந்தியாவின் வெற்றி

என் மகள் சந்தியா ரமணி
மற்றும் குழுவினர் எடுத்த விளம்பரப்படம்
 நேற்று

GATEWAY 2013 ல்

இரண்டாவது பரிசைத் தட்டிச்சென்றது.






வாழ்த்துக்கள் சந்தியா ரமணி  & TEAM.