Showing posts with label சமையல் இனிப்பு. Show all posts
Showing posts with label சமையல் இனிப்பு. Show all posts

Friday, 14 September 2012

கோக்கோ அவல்


கோக்கோ அவல்:
தேவையான பொருட்கள் :
கெட்டி அவல் - 1 கப்
வெல்லம் - 3/4 கப்
கோக்கோ பவுடர் - 1 டீஸ்பூன்
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
முழு முந்திரி பருப்பு (அலங்கரிக்க)
ஏலக்காய் - 2
தண்ணீர் - 1 கப்

வெல்லத்தை ஒரு கப் தண்ணீரில் கரைத்து மணல் போக வடிகட்டி அதில் கழுவிய கெட்டி அவலை அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
வாணலியில் 1/4 டீஸ்பூன் நெய் விட்டு முந்திரி பருப்பை வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பிறகு வெல்லத் தண்ணீரில் ஊறிய  அவலை வாணலியில் போட்டுக் கிளறவும்.
வெல்லத்தண்ணீர் வற்றி வரும்போது மீதி நெய்யை சேர்த்துக் கிளறவும்.
பிறகு கோக்கோ பவுடரையும், ஏலக்காய்த்தூளையும் சேர்த்துக் கிளறி இறக்கி, உங்கள் கற்பனைக்கேற்ப அலங்கரித்து வைக்கவும்.

செய்வதற்கு சாதாரண இனிப்பு வகையாகத் தோன்றினாலும் வயிற்றிற்குக் கேடு பண்ணாத சிம்பிள் இனிப்பு தயார்.