ரமலான் நல் வாழ்த்துக்கள்.
நேற்று மாலை எழும்பூர் ரயில் நிலையத்தில் அமர்ந்திருந்தேன். எப்பொழுதும் ரயில் நிலையத்தில் சந்திக்கும்
ஒரு தோழி என் அருகில் வந்து அமர்ந்தார்.
வலது கையில் மருதாணி இட்டுக்கொண்டிருந்தார். ‘என்னப்பா, உங்க ஆபீஸ்ல மருதாணியெல்லாம் இட்டு
விடறாங்களா’ன்னு கேட்டேன். ‘இல்லை என்னோட 16 ஆண்டுகள் பணி புரிந்து ஓய்வு பெற்ற
ஒரு இஸ்லாமிய நண்பர் வீட்டுக்குச் சென்றிருந்தேன். அவர் மனைவி மருதாணி இட்டு விட்டார். ரொம்ப வருடங்களாக ரம்ஜானுக்கு 2 நாட்கள் முன்பு
அவர்கள் வீட்டுக்குச் செல்வேன்.
தீபாவளிக்கு அவர்கள் என் வீட்டிற்கு வருவார்கள்.’ என்று சொன்னார்.
கேட்பதற்கு ரொம்ப மகிழ்ச்சியாக
இருந்தது.
பெண் கொடுத்து பெண் எடுக்க வேண்டாம்.
எம்மதமும் பார்க்காமல் நல்ல நண்பர்களாக இருக்கலாமே.
அனைத்து இஸ்லாம் தோழர், தோழியர் அனைவருக்கும் மனமார்ந்த ரமலான் வாழ்த்துக்கள்.
பெண் கொடுத்து பெண் எடுக்க வேண்டாம். எம்மதமும் பார்க்காமல் நல்ல நண்பர்களாக இருக்கலாமே.//கண்டிப்பாக மாமி..மேற்கண்ட வரிகளில் பரவசமானேன்.வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.
ReplyDelete//கேட்பதற்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது.//
ReplyDeleteஎனக்கும் தான் மகிழ்ச்சியாக உள்ளது.
//பெண் கொடுத்து பெண் எடுக்க வேண்டாம். எம்மதமும் பார்க்காமல் நல்ல நண்பர்களாக இருக்கலாமே.//
ஆஹா, அருமை. நிச்சயமாக நல்ல நண்பர்களாக இருக்கலாம். எனக்கு என் அலுவலகத்தில், ஷாஹூல் ஹமீது, ரஹ்மான், ப்யாரே ஜான், ஷஃபியுல்லா என பல இனிய நண்பர்க்ள் இருந்தனர். இப்போதும் அவர்க்ள் என் தொடர்பு எல்லைக்குள் மட்டுமே.
//அனைத்து இஸ்லாம் தோழர், தோழியர் அனைவருக்கும் மனமார்ந்த ரமலான் வாழ்த்துக்கள்.//
என் வாழ்த்துகளும் உங்களுடன் சேர்ந்தே அவர்களுக்குச் செல்லட்டும்.
குறிப்பாக திருமதி ஸாதிகா, திருமதி ஆசியா உமர், திருமதி அன்புடன் மலிக்கா, திரு அஜீம் பாஷா இன்னும் விட்டுப்போன நண்பர்கள் எல்லோருக்குமே.
அன்புடன் கோபு.
அருமையான பதிவு....
ReplyDeleteமிக அருமையான பகிர்வு, ஜே மாமி
ReplyDeleteபெருநாள் வாழ்த்துக்கு மிக்க நன்றி
தங்கள் கருத்தே என் கருத்தும் சொல்லிச் சென்ற விதம் அருமை தொடர வாழ்த்துக்கள்
ReplyDeleteஅருமை! இனிய ரமலான் திருநாள் வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅருமையான கருத்து.....
ReplyDeleteஅனைவருக்கும் இனிய ஈகை பெருநாள் நல்வாழ்த்துகள்.
எம்மதமும் எமக்குச் சம்மதமே..!
ReplyDeleteநிறைய ரமலான் திருநாள் கொண்டாட்டங்களில் கலந்துகொண்டிருக்கிறோம்..
எங்கள் குடும்ப நண்பர் அசைவம் சாப்பிடாத முஸ்லீம் ..!
ஆயிரமாவது பதிவுக்கு
ReplyDeleteவாழ்த்துரைத்து சிறப்பித்தமைக்கு
மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள் ..!