Thursday, 21 June 2012

உலக இசை தினம்



உலக இசை தினம்

இன்று 21.06.2012 உலக இசை தினம்.

இசைக்கு மொழியில்லை.   மனிதனையும் மற்ற  உயிரினங்களையும் ஏன் இறைவனையும் இசைய வைக்கின்ற, பணியவைக்கின்ற ஓர் அரும் சாதனம் இசை.

இசை நமக்கு என்னவெல்லாம் கொடுக்கும்.

இன்பம்
அமைதி
உற்சாகம்
புத்துணர்ச்சி
மயக்கம்
மகிழ்ச்சி
நீங்கள் நல்லதொரு இசைக் கலைஞராக இருந்தால் பெயர், புகழ், பட்டம், பதவி, பணம் இன்னும் பலப்பல.

உலகில் உள்ள இசைக்கலைஞர்கள் அனைவரையும் வாழ்த்துக்களுடன் தலை வணங்குகிறேன்.

Thursday, 7 June 2012

என் முதல் சிறுகதை

இதுதான் நான் எழுதி வெளி வந்த முதல் சிறுகதை. பாண்டிச்சேரியிலிருந்து வெளி வரும் ‘மலர்ந்த ஜீவியம்’ மாத இதழில் வெளி வந்தது. 
என் வாழ்க்கையில் கிடைத்த அனுபவத்தை சிறுகதையாக எழுதி இருந்தேன். இந்தக்கதை முழுக்க முழுக்க 100% என்  அனுபவம்.

 http://www.karmayogi.net/?q=mj_june07_11



11.புது வரவு

"அன்னை இலக்கியம்"
புது வரவு
டி.எஸ்ஜெயந்தி
கையில் சாப்பாட்டுக்கூடையுடன் கஸ்தூரி மருத்துவமனை படிக்கட்டுகளில் மெதுவாக ஏறிக்கொண்டிருந்த ஜெயா குரல் கேட்டு நிமிர்ந்தாள்.
"ஹலோ மேடம்எப்படி இருக்கீங்க?''
"நீங்க டிரைவர் முருகனோட ப்ரெண்டு ரமேஷ் இல்லநீங்க எப்படி இங்க.....?'' என்றாள் ஜெயா.
"அடஎன் பேரைக்கூட நல்லா ஞாபகம் வெச்சிருக்கீங்களேஆமாம் நீங்க இங்க.....?''என்று இழுத்தான் ரமேஷ்.
"என் வீட்டுக்காரருக்கு ஒரு வாரமா டெம்ப்ரேச்சர் குறையவே இல்லைஅதான் இங்க அட்மிட் செய்திருக்கோம்'' என்றாள் ஜெயா.
"மேடம்என் மனைவி சித்ராவை இங்க டெலிவரிக்காக அட்மிட் செய்திருக்கேன்''.
"அது சரி ரமேஷ்உங்க வீடு திருவள்ளூர்ல இருக்கறதா சொன்ன ஞாபகம்அங்க இருந்து இவ்வளவு தூரம் வந்திருக்கீங்க'' என்று கேட்டாள் ஜெயா.
"டாக்டர் வள்ளி எங்களுக்கு ரொம்ப வருஷமா பழக்கம்நல்ல கைராசிக்காரர்.அதனாலதான் இவ்வளவு தூரம் வந்திருக்கோம்'' என்று கூறினான் ரமேஷ்.
பேசிக்கொண்டே இருவரும் நடக்க, "மேடம்இதுதான் என் மனைவி சித்ரா இருக்கற வார்டுவாங்க மேடம்அறிமுகம் செய்துவைக்கிறேன்'' என்று ஜெயாவை அழைத்துச் சென்றான் ரமேஷ்.
"சித்ராஇவங்க என் ப்ரெண்டு முருகனோட ஆபீஸ்ல வேலை பாக்கறாங்கரொம்ப நல்லவங்கமுருகனுக்கு உடம்பு சரியில்லாம இருந்தபோது மெடிக்கல் கார்டு வாங்கிக்கொடுத்து ரொம்ப உதவி செய்தாங்கஆஸ்பத்திரிக்கு வந்து பாத்தாங்கன்னு சொல்லி இருந்தேனேஅவங்கதான் இவங்க'' என்று ஜெயாவைத் தன் மனைவிசித்ராவிற்கு அறிமுகப்படுத்தி வைத்தான் ரமேஷ்சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு மறுநாள் காலை வருவதாகச் சொல்லிவிட்டுச் சென்றாள் ஜெயா.
மறுநாள் ரமேஷைத் தன் கணவன் ரமணி இருக்கும் அறைக்கு அழைத்துச் சென்று அறிமுகப்படுத்திவைத்தாள் ஜெயாரமணியின் கையில் இருந்த அன்னையின் புத்தகத்தைப் பார்த்த ரமேஷ் "என்ன சார் புத்தகம்இவங்க யாரு?'' என்று கேட்டுவிட்டு பதில் வருவதற்கு முன்பே ஜெயாவிடம், "மேடம்நீங்க எனக்கு ஓர் உதவி செய்யணும்.சித்ராவுக்கு டெலிவரியாக இன்னும் 10-15 நாட்கள் ஆகும்னு டாக்டர் காலையில சொன்னாங்கமறுபடியும் திருவள்ளூர் போய் திரும்பி வரது சிரமம்அதனால இங்க ஒரு ரூம் பாத்துக் கொடுத்தீங்கன்னா 15 நாள் இருந்து டெலிவரி ஆனப்பறம் திருவள்ளூர் போகலாம்னு நினைக்கிறேன்'' என்றான் ரமேஷ்.
"அதுக்கென்னபக்கத்துல தந்தி ஆபீஸ்ல என் ப்ரெண்ட்ஸ் இருக்காங்கஏதாவது ரூம் கிடைக்குமான்னு விசாரிக்கச் சொல்லிட்டு வரேன்'' என்ற ஜெயா தன் கணவனிடம், "நான் வரதுக்குள்ள ரமேஷுக்கு அன்னையைப் பற்றி சொல்லுங்கஅவங்க நினைச்சா ரூம் பாக்கற வேலையே இல்லாம செஞ்சுடுவாங்க'' என்று சிரித்துக்கொண்டே சொல்லிவிட்டுச் சென்றாள் ஜெயா.
தந்தி ஆபீஸ்வரை சென்றுவிட்டுதிரும்ப கணவன் இருந்த ரூமுக்குள் நுழைந்த ஜெயா ரமேஷின் கையில் இருந்த அன்னையின் புத்தகத்தைப் பார்த்தவுடன் 'ஆஹாவிஷயம் முடிந்துவிடும்என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டாள்.
மாலை மூன்று மணி இருக்கும்சித்ரா எப்படி இருக்கிறாள் என்று பார்க்க அவள் அறைக்குச் சென்றாள் ஜெயாஇப்பொழுது சித்ராவின் கையில் அன்னை புத்தகம்பின் அட்டையில் இருந்த அன்னையின் பாதங்களைத் தொட்டு கண்களில் ஒற்றிக்கொண்டிருந்தாள் சித்ராசிறிது நேரம் அவளுடன் பேசிக் கொண்டிருந்துவிட்டுக் கணவன் இருந்த அறைக்குத் திரும்பினாள் ஜெயா.
சுமார் நாலரை மணிக்கு ரமேஷ் ஓடிவந்து "மேடம்கொஞ்சம் சித்ராவை வந்து பாருங்க.ஏதோ சொல்ல வருகிறாள்அவள் தாயில்லாத பெண்நல்லபடியாக டெலிவரி ஆகவேண்டும்'' என்று படபடத்தான் ரமேஷ்.
ஜெயா மனதிற்குள், "தாயில்லாப் பெண்ணாதாய்க்குத் தாயான அன்னையை அல்லவா ஏற்றுக்கொண்டிருக்கிறாள்கண்டிப்பாக சுகப்பிரவசம்தான்'' என்று கூறிக்கொண்டாள்.
"சித்ரா எப்படியிருக்கஎன்னம்மா செய்கிறது'' என்று கேட்டாள் ஜெயா.
"மேடம்எனக்கு லேசாக டிஸ்சார்ஜ் ஆகிறது'' என்றாள் சித்ரா. 'ஆஹாஅன்னையின் அருள் வேலை செய்ய ஆரம்பித்து விட்டதுஎன்று சந்தோஷப்பட்டாள் ஜெயாநர்ஸைக் கூப்பிட்டாள் ஜெயாநர்ஸ் சித்ராவை லேபர் வார்டுக்கு அழைத்துச்சென்றார்சிறிது நேரம் கழித்து வெளியே வந்த நர்ஸ், "எப்படியும் மறுநாள் காலைக்குள் டெலிவரி ஆகிவிடும்'' என்று கூறிவிட்டுச் சென்றார்.
ரமேஷ், "என்ன மேடம் இதுஇன்று காலையில்கூட டாக்டர் கண்டிப்பாக இன்னும் 10, 15நாட்கள் ஆகும் என்றாரேசித்ராவை அழைத்துக்கொண்டு போய்விடச் சொன்னாரே.நீங்க காண்பித்த தெய்வத்திற்கு இவ்வளவு சக்தியா?'' ஆச்சரியத்தால் ரமேஷ் துள்ளிக்குதிக்காத குறைதான்.
ஜெயாவுக்கு ஆச்சரியமில்லைஇதைப்போல் அன்னை எத்தனைஎத்தனை அற்புதங்களை நடத்தி இருக்கிறார்.
"ரமேஷ் நான் வீட்டிற்குக் கிளம்புகிறேன்குழந்தைகள் காத்துக் கொண்டிருப்பார்கள்.சித்ராவுக்குக் குழந்தை பிறந்த உடனே எனக்கு போன் செய்யுங்கள்காலையில் வந்துவிடுகிறேன்'' என்று சொல்லிவிட்டுக் கிளம்பினாள் ஜெயா.
காலையில் சமையலறையில் மும்முரமாக வேலை செய்து கொண்டிருந்த ஜெயாவின் காதில் விழுந்தது டெலிபோன் மணி ஓசைரமேஷேதான்.
"மேடம்என்ன ஆச்சரியம்என்ன அற்புதம்எனக்கு ஏழரை மணிக்கு ஆண்குழந்தை பிறந்திருக்கிறதுசுகப்பிரவசம்டாக்டரின் கணிப்பு தலைகீழாயிட்டுதே'' படபடவென்று பொரிந்து கொட்டினான் ரமேஷ்.
"இது நான் எதிர்பார்த்ததுதான்இதோ நான் கிளம்பி வந்து கொண்டே இருக்கிறேன்''என்றாள் ஜெயா.
ஆஸ்பத்திரி வாசலிலேயே வாயெல்லாம் பல்லாக நின்று கொண்டிருந்தான் ரமேஷ். "மேடம்இப்பதான் ரூம் குடுத்திருக்காங்ககுழந்தையை நீங்களே ரூமுக்கு எடுத்துட்டு வாங்க மேடம்'' என்றான் ரமேஷ்இருவரும் பேசிக்கொண்டே லேபர் வார்டுக்கு வந்தனர்.
அப்பொழுதுதான் பூத்த ரோஜாப்பூவைப் போல் இருந்த குழந்தையை நர்ஸ் ஜெயாவின் கையில் கொடுத்தாள்அதன் ஸ்பரிசத்தில் மெய் சிலிர்த்தாள் ஜெயாஅன்னைக்கு மனதால் நன்றி கூறிவிட்டு "குழந்தைக்கு  'அரவிந்த்என்று பெயர் வையுங்கள் ரமேஷ்''என்றாள்.
"அதென்ன மேடம்உங்க சார்கூட இதே பெயரைத்தான் சொன்னார்'' என்று ஆச்சரியப்பட்டான் ரமேஷ்குழந்தையைத் தாயின் அருகில் விட்டுவிட்டு விடைபெற்றாள் ஜெயா.
டாக்டர் ஜெயாவின் கணவருக்கு உடம்பு சரியாகிவிட்டதால் இரண்டு நாட்களில் டிஸ்சார்ஜ் செய்துவிடுவதாகக் கூறினார்.
மறுநாள் ரமேஷ் ஜெயாவிடம் 'அன்னை தரிசனம்புத்தகத்தை வாங்கித் தரச்சொல்லி எடுத்துக்கொண்டு சித்ராவையும்குழந்தை அரவிந்தையும் அழைத்துக்கொண்டு வீட்டிற்குக் கிளம்பினான்அவர்களுக்கு விடை கொடுத்துவிட்டுஅவர்கள் செல்வதையே பார்த்துக்கொண்டிருந்த ஜெயா, 'அன்னையேயாரோ ஒருவர் உங்களைஅறிந்து கொள்வதற்காக எங்களைக் கருவியாகப் பயன்படுத்தினீர்களோஅதற்காகவே என் கணவருக்கு இந்த சுரத்தைக் கொடுத்தீர்களோஎன்னே எங்கள் பாக்கியம்!' என்று மனதிற்குள் கூறிக் கொண்டாள்.
****
என் சிறுகதை 'அல்பம்'. அறுசுவை.காமில் வந்தது

ப்ளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவது பற்றிய சிறுகதை.

http://www.arusuvai.com/tamil/node/14962

இதோ உங்களுக்காக


பேருந்தில் ஏறி ஜன்னலோர இருக்கையைத் தேடி சாய்ந்து வசதியாக உட்கார்ந்து கண்களை மூடிய நித்யா, ‘அப்பாடா! வீடு வரதுக்குள்ள முக்கால் மணி நேரம் ஒரு குட்டித்தூக்கம் போட்டுலாம்’ என்று நினைத்தாள். அவள் கண்களை மூடி ஐந்து நிமிடம்கூட ஆகி இருக்காது.
”ஏன் மாமி, உங்க பக்கத்தாத்துப் பொண்ணுக்கு கல்யாணம் நிச்சயமாயிடுத்தா?”
“இன்னும் ஆகலியே. ம். அவாளும் நாலு வருஷமா பாத்துண்டிருக்கா.”
”ஓ, அது சரி நேத்து உங்க தெருவில என்ன சண்டை?”
“அதுவா.............
“ஆரம்பிச்சுட்டாங்கப்பா. இன்னும் எத்தனை பேர் தலையை உருட்டப்போறாங்களோ? கண்ணை மூடிக்கலாம். காதை மூட முடியாதே” என்று மனதிற்குள் அலுத்துக்கொண்டாள் நித்யா.
“ஏன் மாமி, உங்க வீட்டு மாடிலே புதுசா குடி வந்திருக்காளே, அதான் சிகப்பா, ஒல்லியா, அழகா”
“ஓ பத்மாவா! யாரோடையும் ரொம்ப பேச மாட்டேங்கறா. ரெண்டு மூணு தரம் கோவில்ல பாத்தேன். ஒரு சிரிப்போட நிறுத்திட்டா. போஸ்ட்மேன் அவங்களுக்கு வந்த கடிதத்தை எங்க வீட்டுலே போட்டுட்டுப்போயிட்டான். அதை கொண்டு குடுக்கப்போனேன். வீட்டை ரொம்ப சுத்தமா வெச்சிருந்தா. வீடு கிளி கொஞ்சறதுன்னு சொல்லலாம் போயேன். பழைய பால் கவரையெல்லாம் கூட அழகாக அடுக்கி வெச்சிருந்தா. கேட்டேன். பழைய பேப்பர்காரனுக்கு போடுவாளாம்.”
”பத்மா! நம்ப அம்மாவா இருக்குமோ?” இது நித்யா.
”ஐயய்யே! நான் பால் கவரையெல்லாம் அன்னன்னிக்கே தூக்கி எறிஞ்சுடுவேன் மாமி”
”நான் கூடத்தான். இதையும் மிஞ்சற மாதிரி ஒரு விஷயம் சொல்றேன் கேளு. காலி ஸ்வீட் பாக்சையெல்லாம் தேச்சு அலம்பி எடுத்து வெச்சிருந்தா தெரியுமோ?”
“ஐயே அல்பம்”
”இத்தனைக்கும் மாமா பேங்க் மானேஜர். ஒரே பொண்ணுதானாம் அவங்களுக்கு. அந்தப்பொண்ணும் வேலைக்குப்போறாளாம்.”
‘நம்ப வீட்டைப்பத்தித்தான் பேசறாங்களோ? எழுந்து போய் நறுக்குன்னு ரெண்டு கேள்வி கேட்டுடலாமா? ஒருவேளை அவங்க வேற யாரையாவது பத்தி பேசிண்டிருந்தா அசிங்கமாயிடுமே. இதென்ன! ஊர்லே பத்மான்னு வேற யாராவது இருக்கக்கூடாதா, அவங்க கணவர் பேங்க்ல மானேஜரா இருக்கக்கூடாதா, அவங்களுக்கு ஒரே பொண்ணுதான் இருக்கக்கூடாதா?’ இப்படி யோசிக்க, யோசிக்க போரடித்தது நித்யாவுக்கு. எப்படா வீடு வரும் என்றிருந்தது.
* * *
ஒருவழியாக பேருந்தை விட்டு இறங்கி வீட்டை நோக்கி நடந்தாள். வீட்டிற்குள் நுழையும்போதே அவள் அம்மா ஏற்றி வைத்திருந்த ஊதுவத்தியின் மணமும், மெல்லிய குரலில் அம்மா பாடும் பாட்டும் நித்யாவிற்கு உற்சாகத்தைத் தந்தது.
அழைப்பு மணி ஒலி கேட்டு கதவைத் திறந்த பத்மா, “வா, வா, என்ன இன்னிக்கு சீக்கிரம் வந்துட்ட. கை, கால் அலம்பிண்டு வா, உனக்குப்பிடிச்ச பூரி, சென்னா செஞ்சிருக்கேன்” என்றாள்.
பளிச்சென்றிருந்த சமையலறை மேடையிலேயே ஏறி உட்கார்ந்து கொண்டு அம்மா கொடுத்த பூரியைப் பிய்த்து சென்னாவுடன் சேர்த்து வாயில் போட்ட நித்யாவின் கண்களில் எதிரே இருந்த அலமாரியின் கீழ் தட்டில் ஒரு கவரில் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த பால் கவர்கள் பட்டன.
“அம்மா, நான் ஒண்ணு கேட்டா கோவிச்சுக்க மாட்டியே? எதுக்கு இந்த பால் கவரையெல்லாம் சேத்து வெச்சிருக்க? தூக்கிப்போட வேண்டியது தானே” என்றாள் நித்யா.
“அதுவா, நீதானே நித்யா தீபாவளி அன்னிக்கு சொன்ன. பால்கவர், ப்ளாஸ்டிக் கவரையெல்லாம் குப்பைத்தொட்டிலே போட்டுடறா. பட்டாசு வெடிச்சு குப்பைத்தொட்டில விழுந்து புகையா வரது. இந்தப்புகை உடம்புக்குக் கெடுதல்ன்னு. அதோட பழைய பேப்பர்காரன் இதை வாங்கறான்னா பாவம் அவனுக்கு ஒரு அஞ்சோ, பத்தோ லாபம் இருக்கும் இல்லியா?” என்றாள் பத்மா.
“அது சரி. இந்த காலி ஸ்வீட் டப்பாவையெல்லாம் எதுக்குமா தேச்சு அலம்பி பத்திரமா எடுத்து வெச்சிருக்க. தூக்கி எறியக்கூடாதா?” என்று கேட்டாள் நித்யா.
“அதுவா. இன்னிக்கு கார்த்தாலே நீ என்ன செஞ்ச?”
“என்ன செஞ்சேன்?”
“டிபன்பாக்சை வெச்சுட்டுப்போயிட்ட.”
“ஆமாம்மா. சாரிம்மா. ஆனா அதுக்கும் இதுக்கும் என்னம்மா சம்பந்தம். “
“இருக்கே. உன் ப்ரெண்ட்சுக்கும் சேர்த்து 10 இட்லியும், கொத்தமல்லி சட்னியும் வெச்சிருந்தேன். என் நாக்கு நீண்ட தேவதையே அதை அப்படியே வெச்சிருந்தா நீ வந்து சாப்பிடவா போற. அயர்ன் துணி குடுக்க வந்த பையன் கிட்ட இட்லி சாப்பிடறயான்னு கேட்டேன். குடுங்கம்மா. எடுத்துட்டுப்போய் நானும் தங்கச்சியும் சாப்பிடறோம்ன்னு அந்தக் குட்டிப்பையன் பொறுப்பா சொன்னான். காலி ஸ்வீட் டப்பால இட்லியும், சட்னியும் போட்டு குடுத்தேன். இதுல குடுத்தா டப்பா திரும்ப வரலயேன்னு கவலைப்பட வேண்டாம். கவர்ல எல்லாம் குடுக்க எனக்கு இஷ்டமில்ல, இப்ப புரியறதா” என்றாள் பத்மா.
எச்சில் கையுடனேயே மேடையில் இருந்து குதித்து இறங்கி வந்து “அம்மான்னா அம்மாதான்” என்று பத்மாவின் கன்னத்தில் அழுத்தி முத்தமிட்டாள் நித்யா. இந்த சின்ன விஷயத்துக்கு எதுக்கு இப்படி ஆர்ப்பாட்டம் செய்கிறாள் என்று புரியாமல் விழித்துக்கொண்டே மகளின் முத்தத்தை ரசித்தாள் பத்மா.